குரு பார்க்க கோடி தோஷ நிவர்த்தி குரு முழு சுபர் குரு அருள் இல்லை என்றால் ஒரு அருளும் இல்லை.
2025 – 2026 குரு பெயர்ச்சியில் துலாம் ராசிக்கான பலன்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் பற்றி விரிவாக பார்ப்போம்.
துலாம் 9 ல் குரு (1-3-5) ஆம் இடம் குரு பார்வை – பாக்கியஸ்தானம் திடீர் அதிர்ஷ்டம் முயற்சி வெற்றி தரும் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும் கௌரவம் கிடைக்கும்.
துலாம் ராசிக்கான பலன்கள் :
- 9 ல் குரு (1-3-5) பார்வை பலன் – பாக்கியஸ்தானம்.
- கடந்த ஒரு வருடமாக மிகவும் கஷ்டப்பட்டு இருப்பீர்கள்.
- மன அமைதி குழப்பம் ஆரோக்கியம் தூக்கம் கேட்டிருக்கும்.
- மிகப்பெரிய போராட்டத்தை கொடுத்திருக்கும்.
- 9 ல் குரு தெய்வத்தின் நேரடி பார்வையில் நீங்கள் இருக்கிறீர்கள்.
- வேலையில் புகழ் பாராட்டு மன நிறைவு கிடைக்கும்.
- கௌரவம் காப்பாற்றப்படும், குடும்பம் உங்களை தாங்கும் நேரம்.
- எதிரிகள் இருக்கும் இடம் தெரியாமல் போவர்.
- அரசியலில் உள்ளவர்களுக்கு யோக காலம்.
- தொழில் நன்றாக இருக்கும், புது தொழில் தொடங்க வாய்ப்பு உண்டு.
- கூட்டு தொழில் பிரச்சனை இருந்தால் சரி ஆகும்.
- குழந்தைகள் வெளிநாடு வெளி மாநிலம் சென்று படிக்கும் காலம்.
- படிப்பு சூப்பர், உயர் கல்வி நன்றாக இருக்கும்.
- படிப்பு தடைப்பட்டு இருந்தால் தொடர்வீர்கள்.
- முயற்சிகள் அனைத்தும் பலிக்கும் நேரம்.
- தந்தை உங்களுடன் சமூகமாக செல்லும் காலம்.
- தந்தை இல்லையெனில் அவரை மனதார வேண்டினால் நினைத்தது நடக்கும்.
- பிள்ளைகளுக்கு அதிர்ஷ்டம் பேர் புகழ் கிடைக்கும்.
- இயற்கையாகவே குழந்தை பாக்கியம் உண்டு.
- திருமணம், மறுமணம் யோகம் உண்டு.
- குலதெய்வம் கேட்டது கொடுக்கும்.
- பணக்கஷ்டம் அனைத்தும் தீரும்.
- கணவன் மனைவி சண்டை சச்சரவு சரியாகும்.
- நீண்ட நாள் பிரச்சனை ஒன்று சரியாகும்.
- பூமி பிரச்சனை தீரும், வாகன மாற்றம் ஜெயம்.
- உறவுகளின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
- அரசியலில் புதிய பொறுப்பு வரும்.
- அரசு வேலை, பதவி உயர்வு, போட்டி தேர்வுகளில் வெற்றி கிட்டும்.
- குழந்தைகளுக்கு அடிக்கடி காயம் ஏற்படுவது சரியாகும்.
- அம்மாவிடம் வாக்குவாதம் செய்வது சரியாகும்.
- நிக்க நேரம் இல்லாமல் ஓடும் காலம்.
- முயற்சி செய்தால் நினைத்தது நடக்கும்.
- இதுவரை அனுபவித்த கஷ்டங்கள் கொடுமைகள் தீரும்.
- செலவு அதிகமாக செய்வீர்கள், பிரபலமடைவீர்கள்.
- எந்த தவறும் நடக்காமல் தெய்வமே பார்த்துக் கொள்ளும்.
கவனமாக இருக்க வேண்டிய பகுதி :
- கால்
- கழுத்து
வழிபட வேண்டிய ஸ்தலங்கள் :
- தெற்கு பார்த்த சிவன்
- தென்குடித்திட்டை குரு
- ஆண்டாள்