இஷ்ட தெய்வத்தை நாம் சில அறிகுறிகளின் மூலம் கண்டுபிடிக்கலாம்.
- நாம் பார்க்க வேண்டும் என நினைத்தவுடன் யார் நம்மை அழைத்துச் செல்கிறார்களோ அதாவது யார் நமக்கு காட்சி கொடுக்கிறார்களோ அவர்களே நம் இஷ்ட தெய்வம்.
- எல்லோரும் சிவ பக்தன் ஆகிட முடியாது ! எல்லோரும் முருக பக்தன் ஆகிட முடியாது !!
- கனவில் வந்து அழைக்கும் சம்பவங்களும் உண்டு கனவில் பார்த்த அதே உருவம் அதே கோவில் நேரிலும் இருக்கும் மிகப்பெரிய ஆச்சரியமும் நடப்பதுண்டு.
அவன் அனுமதியின்றி ஓர் அணுவும் ஆசையாது
ஒரு தெய்வத்திற்கு வழிபடுவதால் தானாகவே மனதில் அதிக நம்பிக்கை மற்றும் எளிதில் சென்று வழிபடக்கூடிய நிலை ஏற்படும்.
பார்க்கும் இடமெங்கும் நிறைந்திருக்கும் தெய்வமே என்று நினைத்தவுடன் காட்சி கொடுக்கும் அதுவே இஷ்ட தெய்வம்.
மனதுக்குள் சட்டென பிரமிப்பையும், ஆனந்தத்தையும் கொடுக்கும் அதுவே உங்களுக்கு உகந்த இஷ்ட தெய்வம்.
இஷ்ட தெய்வத்தை தெரிந்து கொண்டு தினமும் மனதார வழிபட்டால் வாழ்வில் பல நல்ல மாற்றங்கள் உண்டாகும்.