ஆலயத்தில் நாள் முழுக்க 6 கால பூஜைகள் நடைபெறும்.
ஆலயங்களுக்கு செல்பவர்களில் பெரும்பாலானவர்கள் பூ, பழம், அர்ச்சனைத் தட்டு எடுத்துச் செல்வதுண்டு.
சில பக்தர்கள் பொங்கல் வைத்து சாமிக்கு நைவேத்தியம் செய்வார்கள்.
கடவுளுக்கு செய்யும் அபிஷேகம் பற்றிய விளக்கம்:
ஒரு ஆலயத்தை எடுத்துக் கொண்டால், நாள் முழுக்க 6 கால பூஜைகளிலும் எத்தனையோ விதமான வழிபாடுகள் பூஜைகள் நடைபெறும்.
ஒரு ஆலயம் அதிகாலை திறக்கப்பட்டதும் திருப்பள்ளி எழுச்சி முடிந்ததும் அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும்.
ஆலயங்களில் நடத்தப்படும் 16 வகை சோடச உபசாரங்களில் அபிஷேகமே மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தது.
அபிஷேகத்துக்கு நம் முன்னோர்கள் 26 வகை திரவியங்களை பயன்படுத்தினார்கள்.
பிறகு அந்த திரவியங்களின் எண்ணிக்கை 16 ஆக குறைந்தது.
தற்போது பெரும்பாலான ஆலயங்களில் 12 வகை திரவியங்களைக் கொண்டே அபிஷேகம் செய்யப்படுகிறது.
ஆலயங்களில் பயன்படுத்தப்படும் 12 வகை அபிஷேக திரவியங்கள்:
- எள் எண்ணெய்
- பஞ்ச கவ்யம்
- பஞ்சாமிர்தம்
- நெய்
- பால்
- தயிர்
- தேன்
- கரும்புச்சாறு
- பழரசம்
- இளநீர்
- சந்தனம்
- தண்ணீர்
சாமி சிலைகளுக்கு ஏன் அபிஷேகம் செய்ய வேண்டும்?
ஒரு ஆலயத்தின் மூலவர் சிலை எந்த அளவுக்கு அருள் ஆற்றல் சக்தியை வெளிப்படுத்துகிறது என்பது அந்த சிலைக்கு செய்யப்படும் அபிஷேகங்கள் பொருத்தே அமையும்.
எந்த கடவுளுக்கு, எந்தெந்த திரவியங்களால் அபிஷேகம் செய்ய வேண்டும் என்றும் அதனால் மக்களுக்கும் இந்த உலகுக்கும் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதையும் நம் முன்னோர்கள் வரையறுத்து வைத்துள்ளனர்.
ஒவ்வொரு தெய்வத்திற்கும் அபிஷேகம் செய்வதற்கு உகந்த நாட்கள்:
- ஞாயிற்றுக்கிழமை : விநாயகர் நவகிரகங்கள்
- திங்கட்கிழமை : சிவன்
- செவ்வாய்க்கிழமை : முருகன்
- புதன்கிழமை : பெருமாள்
- வியாழக்கிழமை : தட்சிணாமூர்த்தி
- வெள்ளிக்கிழமை : அம்மன்
- சனிக்கிழமை : ஆஞ்சநேயர்
வீட்டில் எளிமையாக சாமி சிலைகளுக்கு அபிஷேகம் செய்யும் முறை:
உங்கள் வீட்டில் இருக்கும் சிலைகளைப் பொறுத்து அதற்கு உகந்த நாட்களில் மாதம் ஒரு முறையாவது அபிஷேகம் செய்யுங்கள்.
கருங்கல் திருமேனியாக இருந்தால் நல்லெண்ணெய் சாற்றி ஐந்து நிமிடம் கழித்து பிறகு அபிஷேகத்தை தொடரவும்.
ஒவ்வொரு அபிஷேகம் முடிந்ததும் சந்தனம் குங்குமம் இட்டு ஒரு பூ வைத்து நெய்வேத்தியம் எளிமையாக உலர் திராட்சை கற்கண்டு வைத்து தீப தூபம் காட்டி பிறகு தண்ணீர் ஊற்றி களையவும்.
மறுமுறை பின் ஒவ்வொரு அபிஷேகத்திற்கும் இதனை தொடரவும் குறைந்தது 6 அல்லது 16 பொருட்கள் கொண்டு அபிஷேகம் செய்ய வேண்டும்.
முக்கியமான 6 அபிஷேக பொருட்கள்:
- தண்ணீர் : மன அமைதி தரும்
- பஞ்சகவ்வியம் : பாவத்தை போக்கும்
- அரிசி மாவு : அபயம் அளிக்கும்
- மஞ்சள் :கடன் நிவர்த்தி
- பால் : நீண்ட ஆயுள்
- தயிர் : மகப்பேறு தரும்
கடைசியாக வஸ்திரம் பூ சாற்றி தீப தூப ஆராதனை செய்யவும்.
ஏனெனில் விக்கிரகங்களை காய விடக்கூடாது.இவற்றை கோவில்களுக்கு அபிஷேகத்திற்கும் கொடுக்கலாம் அதே பலன் தரும்.