ஒரு கன்னி தெய்வத்தை வழிபடுவது ஆயிரம் தெய்வத்தை வழிபடுவதற்கு சமம்.
நம் குலத்தை காக்கும் தெய்வம் கன்னி தெய்வம் வழிபாட்டை தவறாமல் ஒவ்வொரு ஆண்டும் நாம் செய்ய வேண்டும்.
ஒரு குடும்பத்தில் பிறந்து பூப்படையாமல் 12 வயதிற்கு முன் இறக்கும் குழந்தை அந்த குடும்பத்திற்கு காவல் தெய்வமாக நின்று காக்கும்.
12 வயதிற்குள் இறக்கும் குழந்தைகளுக்கு முக்தி கிடைக்கும் மறு ஜென்மம் கிடையாது.
ஏனெனில் 12 வயது வரை கர்மாவின் தொடர்பு இருக்காது, அவர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுக்கக் கூடாது.
மாறாக கன்னி தெய்வம் வழிபாடு தவறாமல் செய்ய வேண்டும்.
முன்னோர்கள் வீட்டிற்கு வருவதற்கான அறிகுறிகள்
யார் யார் கன்னி தெய்வ வழிபாடு செய்ய வேண்டும்?
- அப்பா வழி உறவில் பிறந்து திருமணம் ஆகாமல் சிறு குழந்தையில் இறந்த போன பெண் தான் நம் வீட்டின் கன்னி தெய்வம்.
- நிராசையோடு இறந்து போன குழந்தைகளை அந்த குடும்பம் நினைக்காமல் விட்டுவிட்டால் குடும்பத்தில் நல்ல விஷயங்கள் நடக்காது.
- அதாவது குடும்பத்தில் மூத்த வாரிசுக்கு திருமணம் ஆகாமல் குழந்தை பாக்கியம் இல்லாமல் ஆரோக்கியம் குறைபாடு வம்பு வழக்கு போன்ற பிரச்சனைகள் இருக்கும்.
- இரண்டு மூன்று தலைமுறைக்கு முன் இறந்திருந்தாலும் குடும்பம் தலைக்க செல்வ நிலை உயர நாம் வழிபட வேண்டும்.
எப்பொழுது கன்னி தெய்வ வழிபாடு செய்ய வேண்டும்?
- வருடம் ஒரு முறையாவது குழந்தைகளுக்கு பிடித்ததை படையல் போட்டு கன்னி தெய்வம் வழிபாடு செய்ய வேண்டும்.
- தமிழ் மாதத்தில் வரும் அனைத்து முதல் வெள்ளி கிழமைகளிலும் இந்த கன்னி தெய்வ வழிபாட்டை செய்யலாம்.
- ஆடி வெள்ளி, ஆடி ஞாயிறு, தை வெள்ளி, தை 2 ஆம் நாள் மற்றும் பௌர்ணமி நாட்களில் வழிபடுவது மிக சிறப்பு.
கன்னி தெய்வ வழிபாட்டில் என்னென்ன செய்யக்கூடாது:
- முன்னோர்கள் பூஜையுடன் சேர்த்து செய்யக்கூடாது.
- பூஜையின் போதும் மணி அடிக்க கூடாது.
முன்னோர்கள் வழிபாட்டில் செய்யக்கூடாதது
எளிமையாக ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் செய்யும் கன்னி தெய்வ வழிபாடு:
- மாலை 6:00 மணி முதல் 6:30 மணிக்குள் கன்னி தெய்வ வழிபாடு செய்ய சிறந்த நேரம்
- சூரியன் அஸ்தமனம் ஆகும் நேரம் நிலவு உதிக்கும் நேரம் கன்னி தெய்வ வழிபாட்டிற்கு உகந்த நேரம்
- ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கூட இந்த வழிபாட்டை செய்யலாம்
- நிலை வாசல் படிக்கு மஞ்சள் குங்குமம் வைத்துப் பிறகு வாசல் படிக்கும் முன் வெற்றிலை பாக்கு வைக்கவும்
- ஒரு கற்பூரம் ஏற்றி அது அணைந்த பிறகு கன்னி தெய்வத்தை வீட்டிற்குள் அழைக்க வேண்டும்
- வெற்றிலை பாக்கை கையில் எடுத்து சென்று பூஜையறையில் வைக்கவும்
- அதற்கு முன்னதாக வீட்டில் பூஜை அறையில் விளக்கு ஏற்றி சாம்பிராணி தூபம் போட வேண்டும்
- எப்பொழுதும் எங்களை காக்கும் தெய்வமாக எங்களுடனே இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்ளவும்
- நீர்நிலைகளான குளம் ஆறு ஏரி கிணறு கடற்கரைக்கு சென்று மீன்களுக்கு பொரி, அரிசி உணவு அளிக்கலாம்
- மீன்கள் உணவு சாப்பிட்டால் நம் முன்னோர்கள் உணவு சாப்பிட்டதற்கு சமம்.
- கன்னிகா பரமேஸ்வரி, கன்னியாகுமரி கன்னி அம்மன், பால திரிபுரசுந்தரி, கன்னிமார் வழிபாடும் செய்யலாம் கன்னி தெய்வம் மனம் மகிழும்.
- வீட்டில் நடக்கும் சிறு பிரச்சனை முதல் பெரிய ஆபத்து வரை எதுவும் பெரிதாகாமல் சரி செய்யக்கூடிய சக்தி கன்னி தெய்வத்திற்கு உண்டு.
கன்னி தெய்வம் வழிபடும் முறை:
- இல்லறமின்றி இளம் வயதில் இறந்தவர்களை (குறிப்பாக பெண் குழந்தைகளை) வழிபடுவது கன்னி தெய்வ வழிபாடு.
- ஒரு பெண் இந்த உலகில் தோன்றி மணம் முடிக்காமல் கண்ணியாக மறைந்தால் அவளை கண்டிப்பாக வழிபட வேண்டும்.
- இறந்த குழந்தைகளின் படம் இல்லை என்றால் வீட்டின் கன்னி மூலை பகுதி அதாவது தென்மேற்கு பகுதி அல்லது பூஜையறையில் வட்டமாக மஞ்சள் பூசி குங்கும பொட்டு வைத்து படையல் போட்டு வழிபாடு செய்யலாம்.
- சாம்பிராணி தூபம் கண்டிப்பாக வீடு முழுவதும் போட வேண்டும்.
- 9 வயதுக்கு உட்பட்ட பூப்படையாத குழந்தைக்கு பாத பூஜை செய்து புது துணி உணவு கொடுத்து வழிபாடு செய்வது சிறப்பு.
- குழந்தைகளுக்குப் பிடித்த உணவுகள் இனிப்புகள் வடை பாயாசம் என படையல் போட்டு கண்ணாடி சீப்பு வளையல் பாவாடை சட்டை சாக்லேட் மருதாணி பொம்மை இப்படி பிடித்த அனைத்தையும் வைத்து வழிபட வேண்டும்.
- ரோஸ் மஞ்சள் நீல நிறம் உடைகள் கன்னி தெய்வ பூஜைக்கு வைக்கலாம்.
- படையலில் வைக்கும் பொருட்களின் அக்கம் பக்கத்தில் உள்ள குழந்தைகளுக்கு தானமாக கொடுக்கலாம்.
- திருமணமாகாத மகள் மற்றும் மருமகள் வீட்டில் உள்ள குழந்தைகளுக்கும் படையலில் வைத்த பொருட்களை கொடுக்கலாம்.
- வீட்டில் இருக்கும் பெண்ணுக்கு தான் படைத்த பொருட்களை கொடுக்க வேண்டும், ஏனெனில் பெண்கள் தன் வீட்டு பொருட்களை தாங்கள் பயன்படுத்துவதையே விரும்புவார்கள்.
- குடும்ப ஒற்றுமை கன்னி தெய்வத்திற்கு மிகவும் பிடிக்கும் முடிந்தவரை குடும்பத்தில் உள்ள அனைவரும் சேர்ந்து வழிபட வேண்டும்.
- சில பகுதிகளில் கன்னி பெட்டி வைத்து வழிபடும் பழக்கமும் உண்டு.
- இயற்கை இடர்பாடுகள் நோய்வாய்ப்பட்டு விஷம் தீண்டி மற்றும் விபத்தில் இளம் வயதில் இறக்கும் ஆன்மாவை சாந்தி படுத்த செய்யும் வழிபாடு.
- அது தெய்வமாக நம் வீட்டையே பாதுகாக்கும்.