விஷ்ணுபதி புண்ணிய காலம் ஆண்டில் நான்கு நாட்கள் மட்டுமே வரும் பெருமாளுக்கு உரிய மிக சிறப்பான நாள்.விஷ்ணுபதி
விஷ்ணுபதி புண்ணிய நேரம்:
விடியற்காலை 1:30 மணி முதல் காலை 10:30 மணி வரை வரும் 9 மணி நேரமும் விஷ்ணுபதி புண்ணிய நேரம், இவற்றை விஷ்ணு பூஜை செய்ய உகந்த நேரம் என்பர்.
இந்த நேரத்தில் செய்யும் வழிபாடு மன அமைதியையும் செல்வ வளத்தையும் வாழ்க்கையில் முன்னேற்றத்தையும் தரும் என்பது ஐதீகம்.
விஷ்ணுபதி புண்ணிய காலம்:
விஷ்ணுபதி புண்ணியகாலம் ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை, வருடத்தில் நான்கு முறை மட்டுமே வரும் புண்ணியகாலம்.
லட்சுமி நரசிம்மராக மகாவிஷ்ணு மாறிய காலம் விஷ்ணுபதி புண்ணிய காலம் இது ஏகாதசி விரதத்தை விட பல மடங்கு உயர்வானது.
- வைகாசி 1
- ஆவணி 1
- கார்த்திகை 1
- மாசி 1
சிவன் கோயில்களில் பிரதோஷ கால பூஜை நடத்தப்படுவது போல் பெருமாள் கோயில்களிலும் இந்த விஷ்ணுபதி புண்ணியகால வழிபாடு பூஜை செய்யப்படும்.
வழிபடும் முறை மற்றும் பலன்கள்:
- அதிகாலை 4:30 AM முதல் 10:30 AM வரை பெருமாள் கோவிலுக்கு சென்று கொடிமரத்தை 27 முறை சுற்றி பிரார்த்தனை செய்தால் நியாயமான கோரிக்கைகள் அனைத்தும் அடுத்த மூன்று விஷ்ணுபதி காலம் முடிவதற்குள் நிறைவேறும்.
- ஜாதகத்தில் உள்ள குறைபாடுகள் நீங்க இந்த விஷ்ணுபதி புண்ணிய காலத்தில் விஷ்ணுபதி நேரத்தில் மிக தொன்மையான பெருமாள் கோவிலுக்கு சென்று ஜாதகத்தை வைத்து வழிபட கிரக தோஷங்கள் நீங்கும்.
- விஷ்ணுபதி புண்ணிய காலத்தில் விஷ்ணு பகவானை வழிபடுவதற்கான மந்திரம் “ஓம் ஸ்ரீ ஹரி விஷ்ணு ஹரி ஓம்” இது விஷ்ணுவின் அருளைப் பெறவும், பாவங்களைப் போக்கவும், வாழ்வில் வளம் பெறவும் சொல்லப்படும் மந்திரம்.
- இந்த வழிபாட்டினால், கடன் தொல்லை தீரும் குழந்தை பாக்கியம் கிடைக்கும் திருமணம் கைகூடும் தொழிலில் முன்னேற்றம் மற்றும் உடல் ஆரோக்கியம் மேம்படும்.
இந்த வழிபாட்டினால்,
- கடன் தொல்லை தீரும்
- குழந்தை பாக்கியம் கிடைக்கும்
- திருமணம் கைகூடும்தொழிலில்
- தொழிலில் முன்னேற்றம் அடையும்
- உடல் ஆரோக்கியம் மேம்படும்
- வாழ்வில் செல்வ நிலை உயரும்