விநாயகர் சதுர்த்திக்கு புதிதாக விநாயகர் சிலை வைத்து வழிபடும் முறை

விநாயகர் சதுர்த்திக்கு புதிதாக விநாயகர் சிலை வைத்து வழிபடும் முறை பற்றி விரிவாக இந்த பதிவில் பார்ப்போம்.

விநாயகரை வீட்டிற்கு அழைக்கும் முறை:

  • மனையில் அல்லது தாம்பூலத்தில் ஸ்வஸ்திக் கோலம் போட்டு மஞ்சள் அரிசி பரப்பி களிமண் பிள்ளையாரை வாங்கி வரவும்.
  • வெற்றிலை பாக்கு ஒரு ரூபாய் நாணயம் இரண்டு வாழைப்பழம் நெய்வேத்தியமாக வைத்து கண் திறந்து அழைத்து வரவும்.
  • வாசலிலேயே வயது பூஜை செய்து ஆரத்தி எடுத்து வீட்டிற்குள் விநாயகரை அழைக்கவும்.
  • ஒரு ரூபாய் நாணயத்தை விநாயகர் மடியில் அதாவது வயிற்றில் வைக்கவும்.
  • பூஜை முடிந்து அந்த நாணயத்தை பணம் வைக்கும் இடத்தில் வைக்க வேண்டும்.

விநாயகருக்கு எந்த பொருளால் அபிஷேகம் செய்தால் என்ன பலன்

புது சிலை வைத்து வழிபடும் முறை:

  • களிமண் பிள்ளையார் புதிதாக வாங்கி வழிபடுபவர்கள் ஒன்று மூன்று ஐந்து என ஒற்றைப்படை நாட்கள் வழிபட வேண்டும்.
  • விநாயகர் சிலைக்கு கண்டிப்பாக பூணூல் அணிவிக்க வேண்டும்.
  • படம் அல்லது வீட்டில் உள்ள விநாயகர் சிலைக்கு வழிபடுபவர்கள் ஒரு நாள் வழிபாடு போதுமானது.
  • மாலை நேர வழிபாடு மிகவும் சிறப்பானது ஏனெனில், விநாயகரை மாலையில் சந்திரன் வழிபட்டு பலன் பெற்றார்.
  • பூஜை செய்யும் நேரம் ராகு காலமாகவும் எமகண்டமாகவும் இருக்கக்கூடாது.
  • வீட்டிற்கு புதிதாக சிலை வாங்கி வரும் நேரமும் புனர்பூஜை செய்யும் நேரமும் நல்ல நேரமாக இருக்க வேண்டும்.
  • விநாயகரை மரியாதையுடன் நல்ல நேரத்தில் ஆரத்தி எடுத்து அழைத்து வந்து மரியாதையுடன் வழி அனுப்பி வைக்க வேண்டும்.
  • எளிமையாக நெய்வேத்தியம் வைத்து செய்தாலும் குறைந்தது மூன்று நாட்களாவது பூஜை செய்ய வேண்டும்.
  • விநாயகர் சதுர்த்தி அன்று மட்டும் சிறப்பாக வழிபட வேண்டும்.

நெய்வேத்தியம்:

  • சர்க்கரை பொங்கல் சுண்டல் கொழுக்கட்டை அப்பம் அவல் பொறி கடலை பருப்பு அவரை பால் தேன் இளநீர் பச்சரிசி புட்டு வெள்ளரி பழம் கிழங்கு நாவல் பழம் மாதுளை பழம் கரும்பு அன்னம் முடிந்தவற்றை வைக்கலாம்.
  • முடிந்தவர்கள் விரதம் இருந்து இலை போட்டு படையல் வைக்கலாம்.

பூஜை செய்யும் முறை:

  • பச்சரிசி பரப்பி மனையில் ஸ்வஸ்திக் கோலம் போட்டு விநாயகரை அமர வைக்க வேண்டும்.
  • வீட்டில் இருக்கும் விநாயகரையும் வைத்து வழிபட வேண்டும்.
  • முதலில் மஞ்சள் பிள்ளையார் வழிபாடு பின் குலதெய்வ வழிபாடு செய்து விநாயகர் பூஜையை ஆரம்பிக்கவும்.
  • நிறை சொம்பு நீர் கண்டிப்பாக வைக்க வேண்டும்.
  • சுவாமிக்கு பருக வைக்கும் நீரின் மேல் வலது கை வைத்து ஓம் என்று ஏழு முறை சொல்ல அது சுவாமி பருக உகந்த சுத்தமான நீராகும்.
  • விநாயகருக்கு மிகவும் பிடித்த வெள்ளை நிற வஸ்திரம் அணிவிப்பது மற்றும் சிறப்பு.
  • மாவிலை தோரணம் மாக்கோலம் குடை வாழைமரகன்று வைத்து விநாயகரை அலங்காரம் செய்வது மிக சிறப்பு.
  • சாமி படம் கிழக்கு பார்த்த வாரும் நாம் வடக்கு பார்த்த வரும் அமர்ந்து பூஜை செய்ய வேண்டும்.
  • வாழைப்பழம் வெற்றிலை பாக்கு நுனி வடக்கு பார்த்தவாறு இருக்க வேண்டும்.
  • விநாயகரின் 16 நாமங்களை சொல்வதால் 16 வகை செல்வங்களையும் பெறலாம்.
  • விநாயகருக்கு உகந்த 21 இலைகளைக் கொண்டு அர்ச்சனை செய்வது மிகவும் சிறப்பு.
  • அர்ச்சனைக்காக ரோஜா தாமரை மட்டும் தான் இதழ்களை பிரிக்க வேண்டும் சாமந்தி போன்ற மலர்களை பிரிக்க கூடாது.
  • கற்பூர ஆரத்தியில் பச்சைக் கற்பூரம் காட்டுவது மிகவும் சிறப்பு.

விசர்ஜனம் செய்யும் முறை:

  • புனர் பூஜை செய்து சுவாமியை தக்க வைத்துக் கொண்டு சிலையை கரைக்க கொண்டு செல்ல வேண்டும்.
  • ராகு காலம் எமகண்டம் நேரம் மற்றும் மாலை 6 மணிக்கு மேல் பிள்ளையாரை கரைக்க ஆரம்பிக்கக் கூடாது.
  • மூன்றாவது நாள் மதியத்திற்குள் அல்லது ஆறு மணிக்கு முன்னதாக விநாயகரை கரைத்து விட வேண்டும்.
  • ஏரி குளம் கடல் ஆறு கிணறு போன்ற நீர் நிலைகளில் கரைக்கலாம்.
  • வீட்டில் ஒரு சுத்தமான பாத்திரம் எடுத்து அதில் விநாயகரை கரைத்து செடிகளுக்கும் ஊற்றலாம்.

அரசு வேலை பதவி உயர்வு வேண்டி வழிபாடு

விநாயகரின் மகிமைகள்:

  • பிள்ளையார்பட்டி விநாயகர் காரிய தடை நீக்க கூடியவர் ஒவ்வொரு வீட்டின் நுழைவு வாசலில் இருப்பது மிகவும் சிறப்பு.
  • விநாயகர் கையில் கலசம் இருக்கும் அது அமிர்த கலசமாக இருந்தால் மோட்சம் கிடைக்கும் மற்றும் சுவர்ண கலசமாக இருந்தால் வாக்கு சக்தி அதிகரிக்கும்.
  • வாஸ்து குறைபாடு இருந்தால் வாசலில் பிள்ளையார் வைத்தால் போதும் அனைத்து தோஷமும் நீங்கும்.
  • தொழில் செய்யும் இடம் சொந்த இடமாக இருந்தால் வாசலில் பிள்ளையார் வைத்தால் வருமானம் முன்னேற்றம் பெருகும்.
  • விநாயகர் கையில் இருக்கும் ஆயுதத்திற்கும் பலன் உண்டு மற்றும் முகம் கைகள் வாகனம் என ஒவ்வொன்றிற்கும் வேறுபாடு உண்டு.

விநாயகர் சதுர்த்தி சிறப்புகள்

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *