விநாயகரின் ஷோடச நாமாவளி எனப்படும் 16 திருநாமங்கள் சகல காரியங்களும் சித்தியாகவும், ஆயுள் ஆரோக்கியத்துடன் சகல சம்பத்துகளும் பெறவும், பல்வேறு துன்பங்களை நீக்கி தடைகளற்ற வாழ்வு வாழவும் உதவும்.
விநாயகரின் 16 திருநாமங்கள்:
- ஓம் சுமுகாய நம – மங்கல முகம் உடையவன்
- ஓம் ஏக தந்தாய நம – ஒற்றை தந்தம் உடையவன்
- ஓம் கபிலாய நம – பழுப்பு நிறம் உடையவன்
- ஓம் கஜகர்ணிகாய நம – யானையின் காதுகளை உடையவன்
- ஓம் லம்போதராய நம – பெரிய வயிறுடையவன்
- ஓம் விகடாய நம – அழகிய வடிவம் உடையவன்
- ஓம் விக்னராஜாய நம – தடைகளை நீக்குபவன்
- ஓம் விநாயகாய நம – தனக்கு மேல் நாயகன் இல்லாதவன்
- ஓம் தூமகேதுவே நம – புகை வண்ண மேனியன்
- ஓம் கணாத்யக்ஷாய நம – கணங்களின் தலைவன்
- ஓம் பாலசந்த்ராய நம – குழந்தை சந்திரன் போல் ஒளிர்பவன்
- ஓம் கஜாநநாய நம – யானை முகம் உடையவன்
- ஓம் வக்ரதுண்டாய நம – வளைந்த தும்பிக்கை உடையவன்
- ஓம் சூர்ப்பகர்ணாய நம – முறம் போன்ற காதுகள் உடையவன்
- ஓம் ஹேரம்பாய நம – ஐந்து முகம் கொண்டவன்
- ஓம் ஸ்கந்த பூர்வஜாய நம – கந்தனுக்கு முன் பிறந்தவன்
விநாயகருடைய மந்திரங்களில் சக்தி வாய்ந்த இந்த 16 மந்திரங்களை தினமும் உச்சரிக்க வேண்டிய வேண்டுதல்கள் அப்படியே பலிக்கும் 16 வகை செல்வங்களையும் பெறலாம்.
வழிபடும் முறை:
- விநாயகருடைய மூலமந்திரத்தை உச்சரித்து ஒரு முறை வலம் வந்து சிதறு தேங்காயை உடைத்து வழிபட்டால் காரியத் தடை விலகும் என்பது ஐதீகம்.
- சிதறு தேங்காய் உடைந்து சிதறுவது போல காரிய தடைகள் அனைத்தும் சிதறி வெற்றி கிட்டும்.
- விநாயகர் மூல மந்திரம் “ஓம் கம் கணபதயே நமஹ” என்ற மந்திரத்தை 27 அல்லது 108 முறை ஜெபிக்க வேண்டும்.
- வீட்டில் வழிபாடு செய்பவர்கள் விநாயகருக்கு பிடித்த ஏதேனும் ஒரு நெய்வேத்தியம் வைத்து இந்த 16 மந்திரத்தை சொல்லி வழிபாடு செய்யவும்.
- இந்த பதினாறு மந்திரங்களை நினைவில் ஏற்றி தினமும் உச்சரித்து வாருங்கள் சகலமும் வசமாகும்.