அம்மன் கோவிலில் சூலத்தில் எலுமிச்சை பழம் சொருகுவது இரத்த பலிக்கு பதிலாக ஏற்படுத்தப்பட்ட ஒரு ஆன்மீக பரிகாரம் ஆகும்.
எலுமிச்சைபழம் சூட்சமம்:
எலுமிச்சை பழத்தை ராஜகனி அல்லது தேவகனி என்பர்.
- தோல் – தோஷம்
- சாறு – ரத்தம்
- உள் பகுதி – மாமிசம்
ஆகையால் இது புனித பலியாக கருதப்படுகிறது.
சரஸ்வதி லட்சுமி காளி தேவிகளின் அருளை பெறும் எளிய பரிகாரம் ஆகும்.
எலுமிச்சை பழத்திற்கு ஒன்பது நாள் வரை சக்தியை தக்க வைத்துக்கொள்ளும் சக்தி உண்டு.
என்ன சொல்லி ஜெபிக்கிறோமோ அதை தக்க வைத்துக்கொள்ளும் சக்தி எலுமிச்சைக்கு உண்டு.
குருமார்கள் மந்திரித்தால் 18 முதல் ஒரு மாதம் வரை கூட (காய்ந்த பழமாக இருந்தாலும்) சக்தி இருக்கும்.
எந்த நிற கண்ணாடி வளையல் அணிவதால் என்ன பலன்
நரம்பு உள்ள எலுமிச்சை பழம் பயன்கள்:
- எலுமிச்சை பழத்தில் 1, 2, 3 என 8 கோடு வரை இருக்கும் இதை நரம்பு உள்ள பழம் என்பர்.
- நரம்பு உள்ள பழத்தை கழுவி சுத்தம் செய்து சந்தனம் குங்குமம் வைத்து அம்மன் காலடியில் அல்லது இஷ்ட தெய்வத்தை வேண்டி நம் வேண்டுதலை சொல்லவும்.
- “ஓம் ஐம் ஹ்ரீம் க்லீம் சாமுண்டாயை விச்சே” என்ற மந்திரத்தை 108 முறை உச்சரித்து பழத்தை நம்மிடம் வைத்துக் கொண்டால் நினைத்த காரியம் சித்தியாகும்.
- அதிக உடல்நிலை பிரச்சினை இருந்தால் முழு பழமும் உடம்பில் படும்படியாக சுற்றி உடைக்கவும்.
- கெட்ட கனவு தூக்கம் வரவில்லை பயம் அதிகமாக இருந்தால் இஷ்ட தெய்வம் பெயரை சொல்லி வேண்டி தலைமாட்டில் வைக்கவும்.
- காம்பு உள்ள பழத்தை பூஜை செய்து நகை இருக்கும் இடத்தில் வைத்தால் அடமானத்திற்கு செல்லாது.
- ஐந்து கோடு உள்ள பழங்களை காய்ந்தாலும் பத்திரப்படுத்தவும், அவற்றில் ஆணியை சொருகி வீட்டு வாசலில் கட்டினால் கெட்ட சக்திகள் அண்டாது.
ஓம் ஐம் ஹ்ரீம் க்லீம் சாமுண்டாயை விச்சே மந்திரத்தின் அர்த்தம்:
- ஓம் – பிரணவ மந்திரம்
- ஐம் – சரஸ்வதி தேவி
- ஹ்ரீம்- லட்சுமி தேவி
- க்லீம்- காளி
- சாமுண்டாயை – தீய சக்திகள் விலகும்
- விச்சே – பாதுகாப்பு மற்றும் பலம்