சந்தனத்தில் இயற்கையாகவே குளிர்ச்சியை கொடுக்கக்கூடிய தன்மை உண்டு.உடலுக்கும்
உடலுக்கும், மனதிற்கும் ஒரு சேர நன்மையை வழங்கும் ஒரு அற்புத அம்சம் சந்தனம்.
ஆக்ஞா சக்கரம் (நெற்றி பொட்டு):
- இரு புருவங்களுக்கு மத்தியில் உள்ள இடம் நெற்றி பொட்டு எனப்படும்.
- மூளைக்கு போகும் அனைத்து நரம்புகளும் சேரும் இடம் நெற்றி போட்டு.
- நெற்றி பொட்டு பகுதியை ஆக்ஞா சக்கரம், மூன்றாவது கண் மற்றும் ஞானக்கண் என்பர்.
- ஆழ்மனதினை கட்டுப்படுத்தும் மையப்புள்ளி இரு புருவம் நடுவே உள்ளது.
தினமும் சந்தனம் அணிவதால் ஏற்படும் நன்மைகள்:
- சந்தனம் உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடியது.
- மன அழுத்தம் குறைந்து புத்துணர்ச்சி கிடைக்கும்.
- பதட்டத்தை போக்கி மன அமைதியை தரும்.
- நம்முடைய விழிப்பு நிலையை தூண்டும்.
- தீய சக்திகள் நமக்குள் பரவாமல் தடுக்கும்.
- மூளையின் பின்பகுதியில் இருக்கும் ஞாபகங்களை தூண்டும்.
- கவனத்தை மேம்படுத்தும் நரம்பு மண்டலம் சீராக்கும்.
- நினைவாற்றலும் சிந்திக்கும் திறனும் அதிகரிக்கும்.
- அடிக்கடி மறந்து போவது குறைந்து ஞாபக சக்தி மெல்ல மெல்ல அதிகரிக்கும்.
- குழந்தைகள் தினமும் சந்தனம் வைப்பதால் படிப்பாற்றல் மேம்படும்.
சந்தனம் வைக்கும் முறை:
- சந்தனத்தை மோதிர விரலால் எடுத்து உள்ளங்கையில் சிறிது வைத்து லட்சுமி தேவியை வேண்டி பிறகு நெற்றியில் வைக்க வேண்டும்.
- கிழக்கு அல்லது வடக்கு திசை பார்த்தவாறு நின்று வைப்பது சிறப்பு
மந்திரம்:
- “ஓம் நமோ பகவதே வாசுதேவாய நமஹ”இந்த மந்திரத்தை நாம் சந்தனம் வைக்கும் போது ஒரு முறை சொல்லி வைக்க விஷ்ணு பகவானின் அருள் கிடைக்கும்.
மந்திரத்தின் அர்த்தம்:
நான் வாசுதேவனுக்கு (விஷ்ணு) வணக்கம் செலுத்துகிறேன் என்று பொருள்.
- திருநீறு – சிவன்
- சந்தனம் – விஷ்ணு
- குங்குமம் – சக்தி
குரு பகவானின் முழு பலனும் தினமும் சந்தனம் அணிவதால் கிடைக்கும்.
6 மாதத்திற்கு குறைந்த குழந்தைகள், குளிர் காலங்களில் வயதானவர்கள் மற்றும் வலிப்பு, ஒவ்வாமை பிரச்சனை உள்ளவர்கள் அதிக அளவில் பயன்படுத்தக் கூடாது.