ஆடித்தபசு என்றால் என்ன? அதன் சிறப்புகள் மற்றும் பலன்கள்

அன்னை பராசக்தி பசு கூட்டங்களுடன் கோமதி அம்மன் ஆக வடிவெடுத்து ஊசி முனையில் ஒற்றை காலில் தவம் செய்து சங்கரநாராயணர் தரிசனம் பெற்ற நாள் ஆடித்தபசு.

தபசு ( தவம்) என்பது கடுமையான பயிற்சியின் மூலம் ஒருவரின் ஆன்மீக ஆற்றலை மேம்படுத்தும் ஒரு முறை.

சிவன் பெருமாள் பார்வதி தேவி ஆகிய மூன்று தெய்வங்களின் அருளையும் ஒரே நாளில் பெற்று தரும் வழிபாடு.

ஆடித்தபசு சிறப்புகள்:

  • ஆடி தபசு அன்று என்ன வேண்டும் என்பதை அன்னை பார்வதி தேவியிடம் முறையிட்டால் அவற்றை அம்பிகை இறைவனிடத்தில் சொல்லி நிறைவேற்றுவதாக ஐதீகம்.
  • ஹரியும் ஹரனும் ஒன்று என்பதை உணர்த்த சங்கரநாராயணராக சிவனும் பெருமாளும் ஒன்றாக அவதரித்த நாள்.
  • நீண்ட நாள் வேண்டுதல் எதுவாயினும் நிறைவேற வழிபாடு செய்ய வேண்டிய நாள் ஆடிதபசு.
  • சைவமும் வைணவமும் ஒன்று என்பதை உலகிற்கு உணர்த்தும் அற்புதமான நாள்.
  • சங்கன் பதுமன் ஆகிய இருவரும் நாகர்குல அரசர்கள்.
  • சிவ பக்தனாகிய சங்கனும் பெருமாள் பக்தன் ஆகிய பதுமனும் தான் வணங்கும் கடவுள்களில் யார் பெரியவர் என்ற சந்தேகத்தை தீர்க்க அம்பாளிடம் முறையிட்டனர்.
  • அன்னை பார்வதி தேவி, சிவன் பெருமாள் இருவரும் ஒன்று என்பதை உலகிற்கு உணர்த்த ஊசி முனையில் ஒற்றை காலில் நின்று கடும் தவம் செய்கிறாள்.
  • பசுக்கூட்டங்களுடன் தவம் செய்ததால் அம்பாளுக்கு கோமதி அம்மன் என்று பெயர்.
  • அம்பாளின் விரதத்தை ஏற்று இறைவன் சங்கரநாராயணராக ஆடி தபசு நாளில் காட்சி காட்சி கொடுக்கிறார்.
  • கோமதி அம்மன் தவம் செய்து வரம் பெற்ற காரணத்தால் சங்கரநாராயணன் கோவிலில் கொடியேற்றத்துடன் 12 நாள் ஆடி தபசு விழா சிறப்பாக நடைபெறும்.
  • வேண்டியதை வேண்டியபடி கொடுக்கும் தெய்வம் கோமதி அம்மன்.

ஆடித்தபசு வீட்டில் வழிபடும் முறை :

  • ஆடி தபசு அன்று உங்கள் வீட்டிற்கு அருகில் கோமதி அம்மன் கோவில் ஏதேனும் இருந்தால் சென்று வழிபடலாம்.
  • அர்ச்சனை : சிவப்பு நிற மலர்கள்
  • உடை : மஞ்சள் நிறம்
  • தீபம் : மாவிளக்கு
  • சங்கரன்கோவில் செல்ல முடியாதவர்கள் வீட்டில் உள்ள அம்மன் படத்திற்கு பூஜை செய்து அருகில் உள்ள ஏதேனும் ஒரு அம்மன் கோயிலுக்கு சென்று வழிபடலாம்.
  • மங்கள பொருட்களை 3 அல்லது 5 பெண்களுக்கு கோவிலுக்கு சென்று தானமாக கொடுக்கலாம்.

சங்கரன்கோவில் தபசு பலன்கள்:

  • திருமண வரம் வேண்டி
  • கணவன் மனைவி குடும்ப ஒற்றுமை
  • கவலைகள் அனைத்தும் தீர
  • நினைத்தது நிறைவேற
  • தள்ளிப்போகும் சுப நிகழ்வுகள் நடைபெற

சங்கரன்கோவில் சென்று ஆடி தபசு நாளில் கோமதி அம்மனை வழிபடுவதால் ஹரியும் ஹரனும் இணைந்து நம் வேண்டுதலை நிறைவேற்றுவதாக ஐதீகம்.

இங்கு சிவராத்திரி வைகுண்ட ஏகாதசி இரண்டும் விமர்சயாக கொண்டாடப்படும்.

சங்கரன்கோவிலில் உள்ள புற்று மண் வீட்டில் இருந்தால் தீராத நோய் நீங்கும் பாம்பு கனவு வராது.

ஆடிதபசு 12 நாள் திருவிழா கொடியேற்ற நாளிலிருந்து கோவிலை 108 முறை சுற்றி வந்தால் வேண்டியது வேண்டியபடி கிடைக்கும் என்பது ஐதீகம்.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *