விநாயகர் அவதரித்த திருநாள் விநாயகர் சதுர்த்தி. ஆவணி மாதம் அமாவாசை முடிந்து 4 ஆம் நாள் வரும் சதுர்த்தி திதியை நாம் விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடுகிறோம்.
விநாயகருக்குரிய 11 முக்கிய விரதம்
விநாயகரின் சிறப்புகள்:
- விநாயகர் அனைவருக்கும் பிடித்தமான கடவுள் நினைத்த இடம் எங்கும் பார்க்கலாம்.
- கணங்களின் அதிபதியாக இருப்பதால் கணபதி என்றும் விக்னங்களை தீர்க்கக் கூடியவர் ஆதலால் விக்னேஸ்வரர் என்பர்.
- தனக்கு ஒரு மேல் நாயகன் இல்லாதவர், எல்லா தெய்வத்தின் சக்தியையும் உள்ளடக்கியவர் விநாயகர்.
- பிள்ளையாய் இருக்கும்போதே பிள்ளை யார் என மரியாதையாக அழைக்க கூடிய தெய்வம் பிள்ளையார்.
- ஏகதந்தனாக இருந்து நம் துயரங்களை கலைந்து ஐந்து கரங்களால் ஐம்பெரும் தொழிலை செய்யக்கூடிய கீர்த்தி வாய்ந்த மூர்த்தி பிள்ளையார்.
- பிடி மண்ணில் இருக்கும் விநாயகருக்கு வீட்டில் செய்யும் இனிப்பு பதார்த்தங்களை கொடுத்தால் எது கேட்டாலும் கிடைக்கும்.
- விநாயகரை வழிபட அனைத்து தேவதைகளையும் வழிபட்ட பலன் கிடைக்கும்.
- விநாயகரிடம் 5 முறை தலையில் குட்டி கொண்டால் பஞ்சபூதங்களின் அருளை பெறலாம்.
- மூலாதாரத்தில் உள்ளவர் கணபதி ஆகையால் தோப்புக்கரணம் போட்டால் பேச்சு திறன் நினைவாற்றல் அதிகரிக்கும்.
- விநாயகர் சதுர்த்தி அன்று மற்றும் துளசி சேர்க்கலாம் மற்ற நாட்களில் விநாயகருக்கு துளசி சேர்க்கக்கூடாது.
- நல்ல கல்வி ஒழுக்கம் நிம்மதியான வாழ்க்கை கடுமையான கிரக தோஷங்கள் விலகும்.
வழிபடும் நாள் நேரம்:
நாள்:
27 ஆகஸ்ட் 2025 ஆவணி 11 புதன்கிழமை
சதுர்த்தி திதி:
26/8/2025 பிற்பகல் 2.22 முதல் 27/8/2025 மாலை 3.52 வரை
நேரம்:
- காலை 6: 00 மணி முதல் 7:30 வரை
- காலை 9:15 மணி முதல் 10:15 வரை
- காலை 10:45 மணி முதல் 11:45 வரை
- மதியம் 1:45 மணி முதல் 2:45 வரை
- மாலை 6:00 மணிக்கு மேல் வழிபடலாம்
வழிபடும் முறை:
- விநாயகர் எளிய கடவுள் என்பதால் எளிமையாக வழிபட்டாலும் ஏற்றுக்கொள்வார்.
- வீட்டில் சிலை இருந்தால் அபிஷேகம் செய்யலாம், படம் இருந்தால் மஞ்சள் நீரால் சுத்தம் செய்து சந்தன குங்குமம் இட்டு பூக்கள் சாற்றி வழிபடலாம்
- சிறிய சிலையாக இருந்தாலும் பூணூல் போட்டுக் கொள்ளவும்.
- அருகம்புல் மற்றும் வெள்ளெருக்கு சிறிதாவது வைக்க வேண்டும்.
- மஞ்சள் பிள்ளையார் பிடித்து வெற்றிலை பாக்கு ஒரு ரூபாய் நாணயம் வைத்து குலதெய்வத்தை வணங்கி பின் தீப தூப ஆராதனை செய்து விநாயகரை வழிபடவும்.
நெய்வேத்தியம்:
மோதகம் கொழுக்கட்டை சர்க்கரை பொங்கல் சுண்டல் அவல் பொரிகடலை பால் தேன் பழங்கள் இவற்றில் முடிந்தவற்றை வைத்து வழிபடலாம்.
மந்திரம்:
- “ஓம் கம் கணபதயே நம” இந்த மந்திரத்தை ஒரு முறை உச்சரித்தால் 1008 முறை உச்சரித்ததற்கு சமம் முடிந்தவரை சொல்லலாம்.
- விநாயகர் அகவல் படிப்பது மற்றும் கேட்பது மிகவும் சக்தி வாய்ந்தது நினைத்த காரியம் நினைத்த படி நிறைவேறும்.
- தடைகள் நீங்கி திருமண வரன் கைகூட குழந்தை பேரு உண்டாக பதவி கிடைக்க வழிபாடு செய்யலாம்.
விநாயகரின் 16 முக்கிய திரு நாமங்கள்
விநாயகருக்கு வைக்கும் நெய்வேத்தியத்தின் பலன்:
தடைகள் நீங்கி வேண்டியது கிடைக்கவும் வினைகள் நீங்கி மோட்சம் கிடைக்கவும் விநாயகருக்கு வைக்க வேண்டிய நெய்வேத்தியங்கள்
- அப்பம் – எல்லாம் சமம், நான் என்ற கர்வம் அடங்கும் சூட்சமம்
- அவல் – அதிக துன்பப்படுபவர்களுக்கு இனி பிறவியில்லை என்பதை உணர்த்துவது
- பொரிகடலை- கர்ம வினைகள் மீண்டும் முளைத்து வராமல் இருக்க
கண்டிப்பாக வைக்க வேண்டிய 4 பொருட்கள்:
- பால்
- தேன்
- பாகு பலகாரம்
- சுண்டல்
குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவர்.
தெளிவான அறிவும் ஞானமும் கிடைக்கும்.
விநாயகருக்கு உகந்த புதன்கிழமை அன்று சதுர்த்தி திதி வருவது மிகவும் சிறப்பு.
விநாயகருக்குரிய எளிய வழிபாடு:
- விநாயகன் என்றால் தனக்கு மேல் நாயகன் (தலைவன்) இல்லாதவன் என்று பொருள்.
- தடைகள் மாற்றும் தாமதங்கள் நீங்கி குறுகிய காலத்தில் மிகப்பெரிய வெற்றி பெற வழிபட வேண்டிய தெய்வம் விநாயகர்.
- விநாயகப் பெருமானுக்கு அருகம்புல் சமர்ப்பணம் செய்து ஒரு முறை வலம் வந்து 5 முறை தலையில் குட்டி கொண்டு 9 தோப்புக்கரணம் போட்டு ஒரு சிதறு தேங்காய் உடைத்தால் காரிய தடைகள் அனைத்தும் நீங்கி சிதறு தேங்காய் உடைவதை போல் நம் கர்மா வினைகளும் சிதறி ஓடும் மற்றும் கடுமையான கிரக தோஷங்களும் விலகும்.
- வெற்றியின் நாயகன் விநாயகனே வழிபட அனைத்து தெய்வங்களையும் வழிபட்ட பலன் கிடைக்கும்.