கிருஷ்ணர் அவதரித்த திருநாள் கிருஷ்ண ஜெயந்தி.
அதர்மம் செய்த தன் தாய் மாமன் கம்சனை அளிக்க அவதாரம் புரிந்தவர்.
ஆவணி மாதம் அஷ்டமி திதியில் ரோகினி நட்சத்திரத்தில் சிறைச்சாலையில் வசுதேவர் தேவகிக்கு 8 ஆவது மகனாக பிறந்தவர் கிருஷ்ண பகவான்.
சிறையில் பிறந்த கிருஷ்ண பகவானை வசுதேவர் கூடையில் வைத்து எடுத்துச் சென்று ஆயர்பாடியில் சேர்க்கிறார்.
செல்லும் வழியில் மழை பொழிய பகவானுக்கு ஐந்து தலை நாகம் குடை பிடித்தது என்பது வரலாறு.
கோகுலாஷ்டமி வழிபடும் நாள் நேரம்:
- 16/8/2025 சனிக்கிழமை அதிகாலை 1:41 முதல் இரவு 11:13 வரை அஷ்டமி திதி – வீட்டு வழிபாடு.
- 17/8/2025 ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 6:49 முதல் மறுநாள் அதிகாலை 4:28 வரை ரோகிணி நட்சத்திரம் – கோவில் வழிபாடு.
- வைணவர்கள் கோவிலில் பாஞ்சராத்திர ஜெயந்தியை 15 செப்டம்பர் 2025 அன்று கொண்டாடுவார்கள்.
கோகுலாஷ்டமி வீட்டில் வழிபடும் முறை:
- மாலை நேரத்தில் கிருஷ்ணர் வழிபாடு செய்வது மிக சிறப்பு.
- கிருஷ்ணர் படம் இருந்தால் துடைத்து மனை பலகையில் வைத்துக் கொள்ளவும்.சிவப்பு
- அல்லது பச்சை நிற துணி போட்டு கிருஷ்ண பகவானை அமர வைக்கலாம்.
- பச்சரிசி மாவால் வாசலில் இருந்து பூஜை நடக்கும் இடம் வரை கிருஷ்ணர் கால் தடம் போடவும்.பாதத்திற்கு
- சந்தன குங்குமம் இட்டு பூக்களால் அலங்கரித்துக் கொள்ளவும்.
- வாசனை மலர்களால் அலங்காரம் செய்யவும் பூஜையில் சிறிதாவது துளசி கண்டிப்பாக வைக்க வேண்டும்.
- மாவிலை தோரணம் மாக்கோலம் போட்டு வீட்டை அலங்காரம் செய்து கொள்ளவும்.வகை
- வகையான பலகாரங்கள், பழங்கள், அவல், கலவை சாதம் இவற்றில் முடிந்தவற்றை நெய்வேத்தியமாக வைக்கலாம்.
- ஆலிலை மீது சிறிது வெண்ணெய் வைத்து படைத்தால் பரம ஏழையாக இருந்தாலும் கிருஷ்ணர் அஷ்டலட்சுமி கடாட்சத்தை கொடுப்பார்.
- ஒரு நெய் தீபம் ஏற்றி முதலில் மஞ்சள் பிள்ளையார் மற்றும் குலதெய்வ வழிபாடு செய்யவும்.
- தீப தூப ஆராதனை செய்து “ஓம் கிருஷ்ணாய நமக” என்ற மந்திரத்தை 108 முறை சொல்லவும், பகவத் கீதை படிப்பது சிறப்பு.
- ஹரே ராம ஹரே ராமா ஹரே ராம ஹரே ஹரே ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே என்று நாமத்தையும் சொல்லலாம்.
- சாலகிராமம், சங்கு இருந்த வைத்து வழிபடுவது மிக சிறப்பு.
கிருஷ்ண ஜெயந்தி பூஜையில் கண்டிப்பாக வைக்க வேண்டிய ஐந்து பொருட்கள்:
- பால்
- தயிர்
- மோர்
- வெண்ணெய்
- நெய்
குழந்தை பாக்கியம் பெற கோகுலாஷ்டமி வழிபாடு:
- கிருஷ்ண ஜெயந்தி அன்று கிருஷ்ணர் பாதம் வரைந்து வழிபாடு செய்தால் குழந்தை பேரு நிச்சயம்.கண்
- கண் பார்வையாலேயே அகில உலகத்தை காக்கும் தெய்வமாக விளங்க கூடியவர் அதனால் தான் கண்ணன் என்பர்.கண்ணன்
- கண்ணன் படம் முன்பு தினமும் நிறை சொம்பு தண்ணீர் ஒரு வாழைப்பழம் சிறிது துளசி இலை வைத்தால் போதும் கூப்பிட்ட குரலுக்கு ஓடி வருவான்.
- குழந்தைக்காக வேண்டுபவர்கள் முதல் நாளே வீட்டை சுத்தம் செய்து கணவன் மனைவி இருவரும் விரதம் இருக்க வேண்டும்.
- கிருஷ்ணருக்கு ஒரு நெய் தீபம் ஏற்றி துளசி மாலை சாற்ற வேண்டும்.
- நெய்வேத்தியமாக வெண்ணெய் மற்றும் இனிப்பு அவல் கண்டிப்பாக வைக்க வேண்டும்.
- மாலை 6 மணிக்கு மேல் குட்டி கிருஷ்ணரின் பாதங்கள் வீட்டிற்குள் ஓடி வருவது போல் பச்சரிசி மாவால் வரைந்து வழிபாடு செய்ய வேண்டும்.
- பூஜைக்கு வைக்கும் நெய்வேத்தியங்களை மட்டும் உண்டு விரதத்தை முடிக்கவும்.
- இந்த கால் தடத்தை மறுநாள் காலையில் தான் துடைக்க வேண்டும்.
- குழந்தைகள் ஆரோக்கியமாகவும் கல்வியில் சிறக்கவும் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்றும் வழிபாடு செய்யலாம்.
- குழந்தைக்காக வேண்டி விரதம் இருப்பவர்கள் அஷ்டமி திதியும் ரோகிணி நட்சத்திரமும் சேர்ந்து வரும் நேரத்தில் செய்வது சிறப்பு.
- ஏதேனும் ஒரு சில ஆண்டு மட்டுமே இவ்வாறு அஷ்டமி திதியும் ரோகினி நட்சத்திரமும் சேர்ந்து வரும்.
கோகுலாஷ்டமி அன்று செய்ய வேண்டிய ஐந்து விஷயங்கள்:
- ஒரு நெய் தீபம்
- கிருஷ்ணருக்கு சிறிது
- நெய்வேத்தியமாக இனிப்பு அவல்
- பச்சரிசி மாவால் கிருஷ்ணர் கால் தடம்
- ஆலமரத்தின் இலையில் வெண்ணெய் படையல்