தானம் தர்மம் வேறுபாடு மற்றும் பலன்கள்

தானம் தர்மம் இரண்டுமே நாம் மனதார செய்தால் நம் தலைமுறையை தாண்டியும் காக்கும்.

தானம் என்பது ஒருவர் கேட்டு நாம் ஏதோ ஒரு பலனை எதிர்பார்த்து கொடுப்பது அது நம் பாவங்களை போக்கும்.

தர்மம் என்பது ஒருவர் கேட்காமல் நாம் எவ்வித பலனையும் எதிர்பாராமல் கொடுப்பது அது நமக்கு புண்ணியங்களை சேர்க்கும்.

அன்னதானம் எந்த உயிர்களுக்கு வேண்டுமானாலும் செய்யலாம் மிகச்சிறந்த தான தர்ம பலன் கிடைக்கும். (எறும்பு, காகம், நாய், மனிதன்..)

தானம் தர்மம் வேறுபாடு :

  • தன்னைவிட மேலானவர்களுக்கு கொடுத்தால் அது தானம், உதாரணமாக மகான்களுக்கு பட்டு எடுத்துக் கொடுப்பது.
  • தன்னை விட கீழானவர்களுக்கு கொடுப்பது தர்மம், உதாரணமாக எளியவர்களுக்கு துண்டு வாங்கிக் கொடுப்பது.
  • தானம் என்பது பாவங்களை போக்கக்கூடியது.
  • தர்மம் என்பது புண்ணியங்களை சேர்ப்பது.
  • தானம் என்பது ஒருவர் கேட்டோ அல்லது அவர் நிலையை பிறர் எடுத்து சொல்லி நாம் செய்வது.
  • தர்மம் என்பது ஒருவர் கேட்காமல் அல்லது தேவைப்படுபவருக்கு கூட தெரியாமல் நாம் செய்வது.
  • ஒருவர் பசி என்று கூறி உதவி கேட்ட பிறகு செய்வது தானம்.
  • ஒருவர் பசி அறிந்து அவர் கேட்காமலே உணவு கொடுப்பது தர்மம்.
  • கேட்டுக் கொடுப்பது தானம், கேட்காமலே கொடுப்பது தர்மம்.
  • ஏதோ ஒரு பலனை எதிர்பார்த்து செய்வது தானம்.
  • எந்தவித பலனையும் எதிர்பாராமல் செய்வது தர்மம்.

நம்மை விட வசதி குறைந்தவர்களுக்கு அவர்கள் கேட்கும்போது நாம் தருவதை தானம் என்று சொல்லலாம்.

தர்மம் என்பது நாமாக மனம் ஒப்பி எதிர்பார்ப்பு எதுவும் இன்றி கொடுப்பது.

பொதுநலம் கருதி செய்வது உதாரணமாக, கோயில் கும்பாபிஷேகம் போன்ற தர்ம காரியங்களில் ஈடுபடுவது.

மொத்தம் 32 வகையான தானங்கள் செய்ய வேண்டும் என்று வேதங்களும் சைவ சித்தாந்தங்களும் கூறுகின்றன.

தானம் தர்மம் பலன்கள் :

ஒருவர் கேட்டு நாம் கொடுப்பது தானம், ஒருவர் கேட்காமல் அவர்கள் நிலை அறிந்து நாம் கொடுப்பது தர்மம்.

  • அரிசி : முன் ஜென்ம பாவங்கள் விலகும்
  • அன்னதானம் : கடன் தொல்லைகள் தீரும்
  • பால் : துன்பங்கள் விலகும்
  • நெய் : நோய்கள் நீங்கும்
  • தேங்காய் : எடுத்த காரியம் வெற்றியாகும்
  • தீபம் : முன்னோர்கள் ஆசி கிட்டும்
  • தேன் : புத்திர பாக்கியம் உண்டாகும்
  • மாங்கல்ய சரடு : தீர்க்க மாங்கல்ய பலன் தரும்
  • குடை : குழந்தைகள் எதிர்காலம் சிறப்பாகும்
  • பாய் : அமைதியான மரணம் உண்டாகும்
  • காய்கறிகள் : குழந்தைகள் ஆரோக்கியம் மேம்படும்
  • பூக்கள் : விரும்பிய இல்வாழ்க்கை அமையும்
  • மாங்கல்யம் : திருமண தடைகள் நீங்கும்
  • எள் : பாவ விமோசனம் உண்டாகும்
  • வெல்லம் : வம்ச விருத்தி உண்டாகும்
  • பூமி : பிறவா நிலையும் சிவா அருளும் கிட்டும்
  • பழங்கள் : புத்தியும் சித்தியும் உண்டாகும்
  • ஆடைகள் : சுகபோக வாழ்வு உண்டாகும்
  • நெல்லிக்கனி : அறிவு மேம்படும்
  • வஸ்திரம் : ஆயுள் விருத்தி உண்டாகும்
  • தயிர் : இந்திரய விருத்தி உண்டாகும் (ஐம்புலன்கள் மற்றும் உணர்வு உறுப்புகள்)
  • கோதானம் (பசு) : பிதுர் கடன் நீங்கும்
  • புத்தகம் : கல்வி சிறக்கும்
  • தங்கம் : குடும்ப தோஷம் நீங்கும்
  • வெள்ளி : மன கவலை நீங்கும்
  • மஞ்சள் : சுபிக்ஷம் உண்டாகும்
  • சந்தனம் : கீர்த்தி உண்டாகும்
  • போர்வை : கெட்ட கனவுகள் பயம் நீங்கும்
  • கோதுமை : ரிஷிகள் தேவர்கள் கடன் நீங்கும்
  • எண்ணெய் : ஆரோக்கியம் உண்டாகும்
  • தண்ணீர் : மன அமைதி மகிழ்ச்சி உண்டாகும்
  • காலனி : பெரியோர்களை அவமதித்த பாவம் போகும்

பாவங்களைப் போக்க கூடியது தானம் புண்ணியங்களை சேர்ப்பது தர்மம்

கர்ணன் நிறைய தர்மங்கள் செய்து சேர்த்து வைத்த மொத்த புண்ணியத்தையும் கிருஷ்ண பகவான் தானமாக கேட்டு தான் வாங்கினாரே தவிர தர்மமாக பெறவில்லை.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *