கண்ணாடிகள் புதன் மற்றும் சந்திரனை குறிப்பது, கண்ணாடி வளையலின் ஓசை மகாலட்சுமியின் அருளைப் பெற்றுத் தரும்.
எந்த நிற வளையல் அணிய வேண்டும்?
- பச்சை : வாழ்வில் அமைதியை தரும்
- சிவப்பு : தைரியம் கொடுக்கும், கண் திருஷ்டி விலகும்
- ரோஸ் : எடுத்த காரியம் எளிதில் நிறைவேறும்
- மஞ்சள் : நேர்மறை எண்ணங்கள் பெருகும்
- ஆரஞ்சு : மகிழ்ச்சி மற்றும் உற்சாகம் தரும்
- பழுப்பு : காரிய வெற்றி உண்டாகும்
- வெளிர் நீளம் : உடல் உஷ்ணம் குறையும்
- வெள்ளை : அன்பு பாசம் நிறைந்திருக்கும்
- கருப்பு : துக்கம் மற்றும் எதிர்மறை ஆற்றல்
செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் புது வளையல் வாங்க கூடாது.
சூரிய அஸ்தமனம் ஆன பிறகு புதுவளையல் அணியக்கூடாது.
எதிர்மறை ஆற்றல்களை எளிதில் ஈர்க்கும் தன்மை கொண்டதால் கருப்பு நிற கண்ணாடி வளையல்களை அணிய வேண்டாம்.
கண்ணாடி வளையல் அணிவதால் கிடைக்கும் நன்மைகள்:
- ஜாதகத்தில் எந்த கிரகம் பாதகமான பலன்களை ஏற்படுத்தினாலும் கண்ணாடி வளையல் அணிவதால் அவற்றின் பாதக பலன் குறையும்.
- மணிக்கட்டில் கண்ணாடி வளையல்கள் உராய்வதால் இரத்த ஓட்டம் சீராகும் மற்றும் உயர் ரத்த அழுத்தத்தை தடுக்கும்.
- எதிர்மறை ஆற்றல்களை விரட்டவும், திருமண வாழ்க்கையில் பிணைப்பை அதிகரிக்கவும் உதவும்.
- ஆரோக்கியம் மேம்படும், மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வில் இருந்து விடுபடலாம்.
- கர்ப்பிணி பெண்கள் கண்ணாடி வளையல் அணிவதால் அதன் ஒலி குழந்தையின் மூளை வளர்ச்சியையும், கேட்கும் திறனையும் தூண்டும்.
- பெண்களின் ஹார்மோன் சமநிலையின்மை பிரச்சனைகள் நீங்கும், சீரற்ற மாதவிடாய் ஏற்படாமல் தடுக்கும்.
- திருமணமான பெண்கள் சிவப்பு வளையல் அணிவது சிறந்தது.
- திருஷ்டி விலகி, தீய சக்திகள் நெருங்காமல் பாதுகாக்கும்.
- சனி திசை அல்லது சனிப் பெயர்ச்சி சமயங்களில் கருப்பு நிறத்தைத் தவிர்க்கவும்.
- பச்சிளம் குழந்தைகளுக்கு ஓராண்டு வரையிலும் கருப்பு வளையல் அணிவது திருஷ்டியை போக்கும்.
- அடுக்கு அடுக்காக வளையல்கள் அணிவது நல்லது மற்றும் தளர்வான வளையல்களை அணியக்கூடாது.