முழுமுதற்கடவுளான விநாயகரை முழு மனதுடன் உண்மையான பக்தியுடன் வழிபட வேண்டியது கிடைக்கும்.
தினமும் அரச மர விநாயகருக்கு தண்ணீர் ஊற்றி 11 முறை வலம் வந்து சிறிது அருகம்புல் வைத்து வழிபடவும்.
இது அரசு வேலை , பதவி உயர்வு, வேலையில் பிரச்சனை மற்றும் மனதிற்கு பிடித்த வேலை கிடைப்பதில் உள்ள தடைகள் தாமதங்களை நீக்கும்.
இந்த வழிபாட்டைத் தொடர்ந்து 12 வாரம் செய்வது நல்ல பலனளிக்கும்.
அஸ்வினி நட்சத்திர வழிபாடு:
- அரசு வேலை, விரும்பிய வேலை கிடைக்க சூரியன் ஒருவரது சுய ஜாதகத்தில் நல்ல இடத்தில் அமர்ந்திருக்க வேண்டும்.
- தினமும் காலையில் குளித்து முடித்து சூரிய உதயத்திற்கு பின் சூரியன் முன் நின்று “ஓம் ஹ்ரீம் சூர்யாய நமஹ” இந்த மந்திரத்தை 108 முறை உச்சரிக்கவும்.
- ஞாயிறு அன்று வரும் அஸ்வினி நட்சத்திரத்தில் சிவன் கோயிலில் உள்ள விநாயகர் வழிபாடு செய்தால் அரசு வேலை மற்றும் உயர் பதவி கிடைக்கும்.
- சிவன் – சூரியன் (மூளை)விநாயகர் – கேது.
- அஸ்வினி நட்சத்திரம் அன்று வரும் ராகு கால நேரத்திலும் சிவன் கோவிலில் உள்ள விநாயகரை வழிபடலாம்.
வழிபடும் முறை:
- ஒரு முறை வலம் வந்து 9 தோப்புக்கரணம் 9 சிதறு தேங்காய் உடைத்து வழிபடலாம்.
- 9 செவ்வாழை பழங்கள் கொண்ட மாலை சாற்றி வழிபடலாம்.
- கோதுமை மாவு தீபம் ஏற்றி வழிபடலாம் (நல்லெண்ணெய் அல்லது நெய்).
விநாயகர் மந்திரம்:
“ஓம் கிலி அங் உங் நம” என்பதை 27 முறை சொல்லவும்.
- கேது என்ற அஸ்வினி நட்சத்திரத்தில் தான் சூரியன் உச்சம் பெறுகிறார் ஆக இந்த வழிபாட்டை செய்வதால் அரசு வேலை நிச்சயம் கிடைக்கும்.
- அஸ்வினி நட்சத்திரத்தில் சிவன் கோயிலில் உள்ள விநாயகரை வழிபடுவதால் ஒருவரின் மூளை திறன் அதிகமாக செயல்படும் நினைவாற்றலை பெருக்கும், அரசு வேலைக்காக படிப்பவர்கள் இந்த வழிபாட்டால் மிகுந்த பலன் பெறுவர்.