ஆடி வெள்ளி அம்மனை வீட்டிற்கு அழைக்கும் எளிய வழிபாடு

ஆடி மாதம் முழுவதும் அம்மனுக்கு மிகவும் விசேஷமான நாள் இதில் சில பூஜைகள் எளிய வழிபாடுகள் செய்வதன் மூலம் அம்மனை வீட்டிற்கு அழைத்து குளிர் வைத்து பரிபூரண அருளை பெறலாம்.

ஆடி மாதம் 1 ஆம் நாளே இந்த முறையில் குலதெய்வ வழிபாட்டின் மூலம் அம்மனை வீட்டிற்கு அழைப்பது மிகவும் சிறப்பு.

நாள் 17 ஜூலை 2025 வியாழக்கிழமை ஆடி 1

ஒவ்வொரு ஆடி வெள்ளிக்கிழமையும் இந்த வழிபாட்டை தொடர்ந்து செய்வது சிறந்த பலனை தரும்.

2025 ஆடி வெள்ளிக்கிழமை

  • நாள் 18 ஜூலை 2025 வெள்ளிக்கிழமை ஆடி 2
  • நாள் 25 ஜூலை 2025 வெள்ளிக்கிழமை ஆடி 9
  • நாள் 1 ஆகஸ்ட் 2025 வெள்ளிக்கிழமை ஆடி 16
  • நாள் 8 ஆகஸ்ட் 2025 வெள்ளிக்கிழமை ஆடி 23
  • நாள் 15 ஆகஸ்ட் 2025 வெள்ளிக்கிழமை ஆடி 30

ஆடி வெள்ளி பூஜை செய்யும் எளிய முறை

  • முதல் நாளே வீடு பூஜை அறை சுத்தம் செய்யவும் முடியவில்லை எனில் சூரிய உதயத்திற்கு முன் சுத்தம் செய்யலாம்.
  • அதிகாலை குளித்து முடித்து பூஜையறையில் தீபம் ஏற்றி வைத்துவிட்டு ஒரு கொத்து வேப்பிலையை வீட்டு நிலை வாசலில் வைக்கவும்.
  • பூஜையறையில் சாமி படங்களுக்கும் வேப்பிலை வைத்து ஒரு தட்டில் மங்கல பொருட்கள் ஆன வெற்றிலை பாக்கு, ஜாக்கெட் பிட், மாங்கல்ய சரடு, பூ வைத்து பூஜை செய்யவும்.
  • முடிந்தால் ஒருவருக்காவது இந்த மங்கள பொருட்களை தானமாக கொடுக்கலாம் மிகவும் சிறப்பு.
  • வேலைக்குச் செல்பவர்கள் மாலையிலும் இந்த பூஜையை செய்து அருகில் உள்ள அம்மன் கோவிலுக்கு சென்றும் வழிபடலாம்.
  • குலதெய்வ கலச வழிபாடு செய்து பானகம் நீர்மோர் இவற்றை நெய்வேத்தியமாக வைத்து குலதெய்வதை வீட்டிற்கு அழைப்பது சிறப்பு.
  • ஆடி வெள்ளி முழுவதும் இந்த பூஜையை தொடர்ந்து செய்ய குலதெய்வ அருள் பரிபூரணமாக கிடைக்கும்.

குலதெய்வ கலசம் தயார் செய்யும் முறை

  • ஒரு பித்தளை சொம்பில் நீர் நிரப்பி மஞ்சள் தூள், பச்சை கற்பூரம், ஏலக்காய், ஒரு ரூபாய் நாணயம், ஒரு எலுமிச்சை பழம், ஒரு கொத்து வேப்பிலை சேர்த்து அதன் மீது தட்டு வைத்து மூடி சிறிது பூ வைத்து ஒரு மண் அகல் விளக்கில் பஞ்சு திரி போட்டு நெய் தீபம் ஏற்றி வழிபடவும்.
  • வாரம் ஒரு முறை இந்த குலதெய்வ கலசத்தில் உள்ள நீரை மாற்றி விட்டு அவற்றை பூச்செடிகளுக்கோ அல்லது கால் படாத இடத்தில் ஊற்றி விட்டு மறுபடியும் புது கலச நீரை தயார் செய்து வழிபாடு செய்யவும்.
  • ரூபாய் நாணயத்தை அருகில் உள்ள அம்மன் கோவில் உண்டியலிலோ அல்லது குலதெய்வ கோயில் உண்டியலில் சேர்தது விடலாம்.

இதை தொடர்ந்து ஒவ்வொரு ஆடி வெள்ளி கிழமையும் செய்வது மிகவும் சிறப்பு, முடியவில்லை எனில் ஆடி மாதம் ஏதேனும் ஒரு வெள்ளி கிழமை அன்று இந்த எளிய வழிபாட்டு முறையை செய்து அம்மனை குளிர வைத்து குலதெய்வத்தை வீட்டிற்கு அழைத்து வழிபாடு செய்து அம்மனின் பூரண ஆசியை பெற்றுக் கொள்ளுங்கள்.

குறிப்பு

ஆடி முதல் நாள் அன்றே இம்முறையில் வழிபாடு செய்து குலதெய்வத்தையும் அம்மனையும் வீட்டிற்கு அழைத்து பிறகு ஆடியில் வரும் அனைத்து வெள்ளிக்கிழமையும் இந்த வழிபாட்டை தொடர்ந்து செய்வதால் அம்பாள் மனம் குளிர்ந்து ஆடி முழுவதும் நம் வீட்டில் அமர்ந்து அருள் தருவதாக ஐதீகம்.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *