ஆடி செவ்வாய் தேடிக் குளி” என்பது பழமொழி.
ஆடி மாதம் முழுவதும் தட்சிணாய காலம் என்பதால் அம்மனுக்கு மாலை நேர வழிபாடு செய்வது சிறப்பு.
மூன்று தெய்வங்களின் அருளை பெற்று தரும் ஒரு வழிபாடு
வழிபடும் முறை மற்றும் பலன்கள்:
- ஆடி செவ்வாய் அன்று பெண்கள் மஞ்சள் தேய்த்து குளித்து விரதம் இருந்து அம்பாளை வழிபாடு செய்தால் நினைத்த காரியம் நிறைவேறும்.
- முழு விரதம், ஒருவேளை விரதம், பால் பழ இளநீர் விரதம் அல்லது சைவம் மட்டும் சாப்பிடுதல், இவற்றில் உங்களால் முடிந்த விரதம் இருக்கலாம்.
- செவ்வாய் தோஷம் மற்றும் நாகதோஷம் உள்ளவர்கள் ஆடி செவ்வாய் விரதம் இருந்து ராகு காலத்தில் புற்றிற்கு தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் தோஷம் நீங்கி குழந்தை பாக்கியம் கிடைக்கும் மற்றும் திருமண வரன் கைகூடும்.
- பாம்பு புற்றிற்கு பால் ஊற்றி மஞ்சள் தூவி பூக்கள் வைத்து தீப தூபம் காட்டி வழிபட வேண்டும்.
- கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டில் உள்ள ஏதேனும் ஒரு அம்மன் படத்திற்கு 2 நெய் தீபம் ஏற்றி நெய்வேத்தியமாக பால் வைத்து வழிபாடு செய்யலாம்.
- இவ்வாறு ஆடி செவ்வாய் அன்று விரதம் இருந்து வழிபாடு செய்வதால் திருமணத்தடை நீங்கும் குழந்தை பாக்கியம் கிடைக்கும் தொழிலில் முன்னேற்றம் கிடைக்கும்.
- ஆடி செவ்வாயில், அம்மனுக்கு சிவப்பு நிற மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட்டால், கடன் தொல்லைகள் நீங்கும்.
- அம்மனுக்கு வேப்பிலை அலங்காரம் அர்ச்சனை மற்றும் வேப்பிலை சாற்றி வழிபடலாம்.
- ஆடி செவ்வாய் மற்றும் ஆடி வெள்ளி அன்று அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்வது மிக மிக சிறப்பு.
- ஆடி வெள்ளியில், ஐந்து வெற்றிலை அதன் மீது ஐந்து ஒரு ரூபாய் நாணயம் வைத்து நடுவில் மஞ்சள் குங்குமம் வைத்து ஒரு நெய் தீபம் ஏற்றுவது சிறப்பு.
யார் யார் செவ்வாய் கிழமை விரதம் இருப்பது சிறப்பு?
- ஜாதகத்தில், நாக தோஷம் உள்ளவர்கள் ராகு திசை புத்தி நடப்பவர்கள் கேது திசை புத்தி நடப்பவர்கள் செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் செவ்வாய் திசை புத்தி நடப்பவர்கள் செவ்வாய்க்கிழமை பிறந்தவர்கள் செவ்வாய் அன்று ருது ஆனவர்கள் கோச்சாரத்தில் ராகு கேது சரியில்லாதவர்கள் செவ்வாய் கிழமை விரதம் கண்டிப்பாக இருக்க வேண்டும்.
- லக்னத்தில் இருந்து வலப்புறமாக எண்ணினால் லக்னம், 2, 4, 7, 8, 12 இந்த 6 கட்டங்களில் செவ்வாய் இருந்தால் அவர்களுக்கு செவ்வாய் தோஷம் உள்ளது என்று அர்த்தம்.
- செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் அதிக கோபக்காரர்களாக இருப்பார்கள் செவ்வாய் விரதம் இருப்பதால் கோபம் குறையும் மனம் அமைதி பெறும்.
ஆடி செய்வாய் அன்று பெண்கள் கடைபிடிக்க வேண்டியவை:
- ஆடி மாதத்தில் வரும் செவ்வாய்க்கிழமைகளில் பெண்கள் எண்ணெய் தேய்த்து குளித்து அம்மனை வழிபட வேண்டும்.
- முகம் மற்றும் உள்ளங்கை, கால்களில் மஞ்சள் பூசி குளிக்கவும்.
- வீட்டில் புனித நீர் இருந்தால் ஒரு பக்கெட் நீரில் சிறிதளவு ஊற்றி குளிக்கலாம் அல்லது அனைத்து புண்ணிய தீர்த்தங்களிலும் நீராடிய பலன் கிடைக்கட்டும் என்று சிறிதளவு உப்பு, மஞ்சள் தூள், பன்னீர் சேர்த்து குளிக்கலாம்.
- வீட்டில் உள்ள அம்மன் படத்திற்கு அருகில் குங்குமம் வைத்து 108 அம்மன் போற்றி கேட்கலாம்.
- அருகில் உள்ள அம்மன் கோவிலுக்கு குங்குமம் வாங்கி கொடுப்பது மிக சிறப்பு.
- அம்மனுக்கு அரளி பூ சாற்றி மாவிளக்கு தீபம் ஏற்றவும்.
- நெய்வேத்தியமாக கற்கண்டு சாதம், பானகம் வைக்கலாம்.
- விரைவில் திருமணம் கைகூட, மாங்கல்ய பலம் கூட, குழந்தை பாக்கியம் பெற பெண்கள் விரதம் இருந்து வழிபாடு செய்யலாம்.
- ஆடி முழுவதும் வரும் செவ்வாய்க்கிழமைகளில் இந்த வழிபாட்டை செய்யலாம் அல்லது ஏதேனும் ஒரு ஆடி செவ்வாய்க்கிழமை செய்தாலும் சிறப்பு.