ஆடிப்பெருக்கு 2025 வழிபடும் நாள் நேரம் வாங்க வேண்டிய பொருட்கள் மற்றும் பூஜை செய்யும் முறை

காவேரி தாயை வரவேற்கும் நாள் ஆடி 18, ஆண்டு முழுவதும் விவசாயம் செழிப்படைய வேண்டும் அனைவரும் நலமுடன் வாழ வேண்டும் என வழிபட வேண்டிய நாள் ஆடிப்பெருக்கு.

காவேரி தாய் அனைவரையும் வந்து சேரும் நாள்.

தண்ணீரை பாதுகாத்து கொண்டாட வேண்டிய நாள்.

பஞ்சபூதங்களில் ஒன்றான நீரை வரவேற்று நன்றி தெரிவிக்கும் திருநாள்.

நாம் வாழ்வதற்கு ஆதாரமான நீருக்கு நன்றி செலுத்த வேண்டிய நாள் ஆடிப்பெருக்கு பிரபஞ்சத்திற்கும் இயற்கைக்கும் நன்றி சொல்லி வழிபட வேண்டிய நாள்.

நீர் நிலைகளில் புனித நீராடி இயற்கை வழிபட வேண்டிய நாள்.

ஸ்ரீ ரங்கநாதர் தனது தங்கையான காவிரிக்கு சீர் கொண்டு செல்லும் நாள்.

குலதெய்வ வழிபாடு, முன்னோர்கள் வழிபாடு, உக்கிர தெய்வங்களை வழிபாடு செய்வது மிகவும் சிறப்பு.

18 என்ற எண்ணிற்கான சிறப்புகள்:

  • சித்தர்கள் 18
  • கணங்கள் 18
  • புராணங்கள் 18
  • பகவத்கீதை அத்தியாயம் 18
  • மகாபாரதம் அத்தியாயம் 18
  • குருசேத்திரப் போர் 18 நாட்கள்
  • பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் 18
  • பதினெண் மேற்கணக்கு நூல்கள் 18
  • சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்யும் படிகள் 18

இப்படி 18 என்ற எண்ணிற்கு பல சிறப்புகள் உண்டு.

ஆடிப்பெருக்கு 2025 நாள் நேரம்:

3/8/2025 ஞாயிற்றுக்கிழமை ஆடிப் 18

பூஜை செய்ய உகந்த நேரம் : காலை 6 மணி முதல் 9 மணி வரை மாலை 3:15 முதல் 4:15 வரை

தாலிக்கயிறு மாற்ற உகந்த நேரம் : காலை 11 மணி முதல் 12 மணி வரை

கடவுளை வேண்டி முற்பகல் நல்ல நேரத்தில் தாலி கயிறு மாற்ற வேண்டும்.

ஆடி 18 என்னென்ன வழிபாடு செய்வது சிறப்பு :

  • புனித நீராடல்
  • அம்மன் வழிபாடு
  • குலதெய்வ வழிபாடு
  • உக்கிர தெய்வ வழிபாடு
  • முன்னோர்கள் வழிபாடு
  • இயற்கையை வழிபடுவது

என்னென்ன ஆடிப்பெருக்கு அன்று செய்யலாம் செய்யக்கூடாது?

  • ஆடிப்பெருக்கு அன்று புதிதாக தொழில் வியாபாரம் கடை தொடங்கலாம்.
  • புதிய பொருட்கள் வாங்கினால் அவை பன்மடங்கு பெருகும் என்பது ஐதீகம்.
  • முக்கியமாக வாங்க வேண்டும் என்று நீண்ட நாள் ஆசைப்பட்ட பொருட்களை வாங்கலாம்.
  • திருமணம் போன்ற மங்கள காரியங்களுக்கு பொருட்கள் வாங்குவது சிறப்பு.
  • தங்கம் வெள்ளி போன்றவை வாங்குவதும் சிறப்பு.
  • கடன் வாங்குவது கடன் கொடுப்பது கூடாது.
  • வீட்டில் சண்டை போடுவது அழுவது கூடாது.

வாங்க வேண்டிய பொருட்கள்:

  • மஞ்சள் குங்குமம் கல் உப்பு மாங்கல்ய சரடு பச்சைக் கற்பூரம் அரிசி துவரம் பருப்பு போன்ற மங்கள பொருட்கள் கண்டிப்பாக வாங்க வேண்டும்.

ஆடிப்பெருக்கு வீட்டில் வழிபடும் முறை :

  • நீர்நிலைகளில் புனித நீராடி அவைகளை வழிபடுவது இந்நாளில் மிக சிறப்பு.
  • ஆற்றிற்கு செல்ல முடியாதவர்கள் வீட்டில் கிணறு, ஆழ்துளை கிணறு (bore well) போன்றவை இருந்தால் மஞ்சள் குங்குமம் வைத்து வழிபாடு செய்யலாம்.
  • நிறை சொம்பு தண்ணீரில் சிறிது மஞ்சள் குங்குமம் கல் உப்பு பச்சை கற்பூரம் ஏலக்காய் போட்டு குலதெய்வ கலசத்தை தயார் செய்து கொள்ளவும்.
  • மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்து வெற்றிலை பாக்கு பூ பழங்கள் வைத்து வழிபாடு செய்ய வேண்டும்.

நெய்வேத்தியம் :

  • நெய்வேத்தியமாக பச்சரிசி துள்ளு மாவு வெல்லம் கலந்து வைக்கவும்.
  • முடிந்தவர்கள் கலவை சாதங்களை நெய்வேத்தியமாக வைக்கலாம்.

தானம்:

  • மஞ்சள் குங்குமம் 2 கண்ணாடி வளையல் தாலிக்கயிறு சிறிது பூ வைத்து மூன்று சுமங்கலி பெண்களுக்கு தானமாகவும் கொடுக்கலாம் மாங்கல்ய பலம் கூடும்.

ஆடிப்பெருக்கு அன்று கண்டிப்பாக வாங்க வேண்டிய மூன்று பொருட்கள்:

மகாலட்சுமி கடாட்சம் வீட்டில் நிலைத்திருக்க ஆடிப்பெருக்கு அன்று வாங்க வேண்டிய பொருட்கள்.

  • கல் உப்பு
  • விரலி மஞ்சள்
  • துவரம் பருப்பு

இவை மூன்றையும் நல்ல நேரத்திற்குள் வீட்டுக்குள் வாங்கி வந்து பூஜையறையில் வைத்து விட்டு சிறிது நேரம் கழித்து சமையலறைக்கு எடுத்துச் செல்லவும்.

மாலை 6:00 மணிக்கு முன்பாக வீட்டிற்குள் இந்த மூன்று பொருட்களை முடிந்தவரை வாங்கி வர வேண்டும்.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *