ஆடி கிருத்திகை 2025 வழிபடும் முறை நாள் மற்றும் நேரம்

ஆடி கிருத்திகை விரதம் இருந்து முருகனை வழிபட்டால் சிவனே கேட்ட வரம் கொடுப்பார் என்று புராணங்கள் கூறுகிறது.

ஆடி மாதம் அம்மனை வீட்டிற்கு அழைக்கும் எளிய வழிபாடு முறை

நாள் மற்றும் நேரம் :

  • ஆடி கிருத்திகை : 20 ஜூலை 2025 – ஆடி 4 ஞாயிறு
  • நேரம் : இன்று 12.14 AM முதல் 10.36 PM வரை
  • ஆடி கிருத்திகை : 16 ஆகஸ்ட் 2025 – ஆடி 31 சனி
  • நேரம் : இன்று 08.27 AM முதல் அடுத்த நாள் 06.48 AM வரை

முருகன் மந்திரம் :

ஒரு மண் குடுவை அல்லது பித்தளை சொம்பில் நீர் நிரப்பி,

  • ஏலக்காய்
  • மஞ்சள் தூள்
  • பச்சைக் கற்பூரம்

ஆகியவற்றை போட்டு அதன் மீது கை வைத்து 27 முறை ‘ஓம் ஸ்ரீம் கிலீம் சரவணபவ நம’ என்ற நாமத்தை சொல்லி உங்கள் ஒரு வேண்டுதலை கடவுளிடம் சொல்ல அடுத்த தை கிருத்திகைக்குள் நிறைவேறும்.

காலை மாலை இரு வேளையும் பூஜை அறையில் ஷட்கோண கோலம் இட்டு நெய் தீபம் ஏற்றி வழிபடவும்.

பஞ்சாமிர்த வண்ணம் கேட்கலாம் முருகனே வீட்டிற்கு வந்து அமர்வதாக ஐதீகம்.

பச்சைக் கற்பூர தீபம் ஏற்றி முருகனை வழிபட கேட்டது கிடைக்கும்.

அம்பாள் சன்னதியில் உள்ள முருகனை வழிபாடு செய்வது மிகவும் சிறப்பு.

ஆடி கிருத்திகை பூஜை செய்யும் முறை :

  • முதல் நாளே வீடு பூஜையறை சுத்தம் செய்யவும். அதிகாலை எழுந்து நீராடி முடிந்தவர்கள் உபவாசம் இருக்கலாம்.
  • குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் பட்டினி விரதம் இருப்பது சிறப்பு.
  • மற்ற வேண்டுதல்களுக்கு பால் பழ விரதம், ஒருவேளை விரதம் அல்லது நெய்வேத்தியம் மட்டும் உண்டு விரதம் இருப்பது போதுமானது.
  • அம்பாள், துர்க்கை, மாரியம்மன் கோவிலில் உள்ள முருகன் வழிபாடு செய்வது மிகவும் சிறந்த பலனை தரும்.
  • அவர்களுடைய ஊரில் உள்ள முருகன் கோவிலில் ஆடி கிருத்திகை எப்பொழுது என்று கேட்டும் விரதம் இருக்கலாம்.

பூக்கள் :

  • செவ்வரளி மலர்
  • வெள்ளை மலர்கள்
  • மல்லிகை பூ
  • வில்வம்

நெய்வேத்தியம் :

  • 2 வாழைப்பழம் , வெற்றிலை பாக்கு
  • பால், தேன், தினை மாவு, பால் பாயசம்
  • பேரிச்சம்பழம், பஞ்சாமிர்தம், தயிர் சாதம்
  • உளுந்து வடை, சர்க்கரைப் பொங்கல்

தீபம் ஏற்றும் முறை :

  • ஷட்கோண கோலம் +ஆறு வெற்றிலை +ஆறு நெய் தீபம் +சிகப்பு திரி
  • ஷட்கோண கோலம் இட்டு அதன் மீது ஆறு வெற்றிலை வைத்து சிவப்பு நிற திரி போட்டு ஆறு நெய் தீபம் ஏற்றி வழிபடவும்.

எளிய வழிபாட்டு முறை :

  • படம் வைத்திருப்பவர்கள் ஜவ்வாது பன்னீர் சேர்த்து துடைத்து பூக்களால் அலங்காரம் செய்து கொள்ளவும்.
  • வேல் சிலை இருந்தால் பால் பன்னீர் சந்தனம் ஜவ்வாது விபூதி இவற்றில் முடிந்த அபிஷேகம் செய்யலாம்.
  • வேல் வைத்திருப்பவர்கள் வேலுக்கு அருகில் ஒரு எலுமிச்சை கனியை வைக்கவும்.
  • பூஜை அறையில் ஷட்கோண கோலம் இட்டு நெய் தீபம் ஏற்றி வழிபடவும்.
  • இரண்டு வாழைப்பழம் வெற்றிலை பாக்கு மற்றும் நெய்வேத்தியமாக முடிந்தவற்றை வைக்கலாம்.
  • கந்த சஷ்டி கவசம், ஓம் சரவணபவ 108 முறை, திருப்புகழ், வேல்மாறல் இவற்றை கேட்கலாம் படிக்கலாம்.
  • பஞ்சாமிர்த வண்ணம் கேட்கலாம் முருகனே வருவான் என்பது ஐதீகம்.
  • நெய்வேத்தியம் மட்டும் உண்டு விரதத்தை முடிப்பதும் சிறப்பு.
  • விரதம் இருக்க முடியாதவர்கள் வழிபாடு மட்டும் செய்யலாம்.

தானம் மற்றும் பலன்கள் :

  • அன்னதானம் : சகல நன்மைகளும் பெற
  • மாங்கல்ய சரடு : திருமண தடை நீங்க
  • குழந்தைகளுக்கு பால் : புத்திர பாக்கியம் பெற
  • பசுவிற்கு கோதுமை : ஆரோக்கியம் சிறக்க
  • முருகனுக்கு ஏலக்காய் : செல்வ வளம் பெருக

ஆடி கிருத்திகை சிறப்புகள் :

  • கிருத்திகை விரதம் இருந்தால் வாழ்வில் உள்ள தடைகள் விலகி கர்ம வினைகள் தீரும்.
  • ஆடி கிருத்திகை மற்றும் தை கிருத்திகைக்கு விரதம் இருந்தால் விதியை மதியால் வெல்லக்கூடிய வாய்ப்பு உண்டு.
  • உத்தராயண காலம் என்பது சூரியன் வடக்கு நோக்கி நகரும் இந்த காலத்தின் தொடக்கத்தில் வருவது தை கிருத்திகை.
  • தட்சிணாயன காலம் என்பது சூரியன் தெற்கு நோக்கி நகரும் இந்த காலத்தின் தொடக்கத்தில் வருவது ஆடி கிருத்திகை.
  • மனம் உடல் தெளிவாக இருந்தால் மனிதனுக்கு தோல்வி என்பது இல்லை என்பதை உணர்த்துவது இந்த கிருத்திகை விரதம்.
  • இந்நாளில் அறுபடை முருகனை தரிசனம் செய்தால் உங்களின் நீண்ட நாள் வேண்டுதல் ஒன்று நிறைவேறும்.
  • ஆடி கிருத்திகை விரதம் இருந்து முருகனை வழிபட்டால் சிவனே கேட்ட வரம் கொடுப்பார் என்று புராணங்கள் கூறுகிறது.
  • முருகனை சரணடைந்தால் அனைத்து பிரச்சனைகளும் தீரும்.
  • எந்த பிரச்சினையாக இருந்தாலும் கந்த கடவுள் பார்த்துக் கொள்வார்.
  • மனிதனை மனிதனாக வாழ வைக்கக்கூடிய தெய்வம் முருகன்.
  • மனிதனின் ஆறு ஆதார சக்கரத்தை உணர்த்தும் கடவுள் முருகப்பெருமான்.
  • கிருத்திகையின் மறு வடிவம் கார்த்திகை, கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டவர் கார்த்திகேயன்.
  • நெற்றிக்கண்னை குறிப்பது கிருத்திகை நட்சத்திரம்.
  • சந்திரன் உச்சம் கிருத்திகை நட்சத்திரத்தில் தான்.
  • ஆறுமுகனை வழிபட்டால் ஆறு வித கஷ்டங்கள் தீரும்.
  • ஞாயிற்றுக்கிழமை ஏகாதசி கிருத்திகை சேர்ந்து வருவது மிகவும் சிறப்பு.
  • திருத்தணியில் மிகவும் சிறப்பாக ஆடி கிருத்திகை கொண்டாடப்படும்.

2025 ஆடி மாதம் விசேஷ நாட்கள் மற்றும் நேரம்

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *