குரு பார்க்க கோடி தோஷ நிவர்த்தி குரு முழு சுபர் குரு அருள் இல்லை என்றால் ஒரு அருளும் இல்லை.
2025 – 2026 குரு பெயர்ச்சியில் மேஷ ராசிக்கான பலன்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் பற்றி விரிவாக பார்ப்போம்.
மேஷம் 3 ல் குரு (7-9-11) ஆம் இடம் குரு பார்வை – எதிலும் தைரியம் நிதானம் கவனம் வேண்டும்.
மேஷ ராசிக்கான பலன்கள் :
- 3 ஆம் இடம் குரு சிறப்பு இல்லை (7-9-11) பார்வை பலன் உண்டு.
- நிதானமாக எந்த முடிவையும் எடுக்க வேண்டும்.
- இதுவரை தொழில் வேலை திருமணத்தில் இருந்த தடைகள் அனைத்தும் நீங்கும்.
- உறவுகள் பெற்றோர்கள் நண்பர்களிடத்தில் இருந்த மனக்கசப்பு நீங்கும்.
- நீங்களே உங்களை நம்பக்கூடிய காலம் ஆகையால் திமிர் அதிகம் வேண்டாம்.
- குடும்பத்துடன் அதிக நேரம் செலவழிப்பீர்கள்.
- வெளிநாடு வேலை படிப்பு யோகம் உண்டு.
- இரண்டாம் குழந்தை பாக்கியம் உண்டு.
- திருமணம் யோகம் உண்டு.
- பிள்ளைகள் திருமணம் நடைபெறும்.
- தேவையற்ற செலவை குறைக்கும் காலம் இது.
- குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் இருந்தால் நீங்கும்.
- கர்ப்பப்பை தொந்தரவு இருந்தால் சரி ஆகும்.
- அடமான நகை மீட்கும் நேரம்.
- பூர்வீகத்தில் இருந்த வில்லங்கம் சரியாகும்.
- அரசியலில் முன்னேற்ற காலம்.
- பதவி உயர்வு உண்டு.
- தெளிவான எண்ணங்கள் வரும்.
- துணையுடன் சுயதொழில் வாய்ப்பு அதிகம்.
- மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவார்கள்.
- வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும்.
- பிள்ளைகள் சாதனையாளர்களாக மாறுவார்கள்.
- பெண்களின் திறமைகள் வெளிவரும் நேரம்.
கவனமாக இருக்க வேண்டிய பகுதி :
- தொண்டை
- மூக்கு
- கழுத்து
- அடிவயிறு
வழிபட வேண்டிய ஸ்தலங்கள் :
- நவகிரக குரு
- ஜீவசமாதி
- திருச்செந்தூர் முருகன்
- திருவெண்காடு