குரு பார்க்க கோடி தோஷ நிவர்த்தி குரு முழு சுபர் குரு அருள் இல்லை என்றால் ஒரு அருளும் இல்லை.
2025 – 2026 குரு பெயர்ச்சியில் சிம்ம ராசிக்கான பலன்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் பற்றி விரிவாக பார்ப்போம்.
சிம்மம் 11 ல் குரு (3-5-7) ஆம் இடம் குரு பார்வை – லாப ஸ்தானம் எதிலும் பொறுமை அவசியம் தேவை.
சிம்ம ராசிக்கான பலன்கள் :
- 11 ல் குரு (3-5-7) பார்வை பலன் – லாபஸ்தானம்.
- தொட்டதெல்லாம் லாபம் தரும்.
- 11-ல் குரு படாத கஷ்டம் பட்ட காலம் இனி மாறும்.
- பட்ட அவமானங்களை துடைத்து எரியும் காலம்.
- வெறுத்தவர்கள் நட்பாக மாறுவார்கள்.
- குடும்பத்திற்குள் சந்தோஷம் வரும்.
- நடக்காது என்று நினைத்த காரியங்கள் நடக்கும்.
- அரசு பணி அரசியலில் வெற்றி.
- வியர்வை வந்தால் பாதிப்பு குறைவு.
- பெற்றோர்களுக்கு வாழ்க்கையில் ஏற்றம் உண்டு.
- துணை உங்களுக்கு அதிக நன்மை செய்யும் காலம்.
- வாகன மாற்றம் உண்டு, இரவு நேர பயணத்தை தவிர்க்கவும்.
- பொருள் திருட்டு போக வாய்ப்பு உள்ளது கவனம்.
- பிள்ளைகள் படிப்பு வேலை மன கஷ்டம் தீரும்.
- குழந்தைகளுடன் அன்யோன்யம் வளரும்.
- ஆண் வாரிசு உருவாகும் யோகம் உண்டு.
- நகை எடுப்பது லாபம், இடமாற்றம் வரலாம்.
- பூர்வீக சொத்து பிரச்சனை சரியாகும்.
- குலதெய்வம் ஆசீர்வாதம் கிடைக்கும் நேரம்.
- பணக்கஷ்டம் கடன் வழக்கு தீரும்.
- மனமும் புத்தியும் வேலை செய்யும்.
- இனி கஷ்டம் குறையும் தூக்கம் வரும்.
- செய்யும் தொழில் சிறப்பாக இருக்கும்.
- இளைய சகோதர சகோதரி திருமணம் வாய்ப்பு உண்டு.
- படிப்பில் உள்ள தடைகள் நிவர்த்தி ஆகும்.
- புது பாசைகளை கற்றுக் கொள்வீர்கள்.
- வெளிநாடு யோகம் உண்டு.
- தர்மம் அறம் தவறாமல் நடந்தால் வெற்றி உங்களுக்கே.
கவனமாக இருக்க வேண்டிய பகுதி :
- முதுகு தண்டுவடம்
- முட்டி
- பாதம்
வழிபட வேண்டிய ஸ்தலங்கள் :
- தட்சிணாமூர்த்தி
- திட்டை குரு
- சிதம்பரம் நடராஜர்
- திருநள்ளாறு