ஹோமங்களில் போடும் சமித்துக்களின் பயன்கள்

ஹோமங்களில் பலவித சமித்துக்களை அக்னியில் போடுகிறோம் அவை ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதமான பலன்கள் உண்டு. 

சமித்து என்பது ஹோமகுண்டத்தில் சேர்க்கப்படும் பல்வேறு வகையான குச்சிகள் இலைகள் போன்றவை ஆகும்.

கடவுளுக்கு பிடித்தமான சமித்துகள் :

  • வில்வம் : சிவன்
  • துளசி : விஷ்ணு
  • தாமரை பூ : மகாலட்சுமி
  • அத்திமரசமித்து : சுக்கிரன்
  • நாயுருவிசமித்து : புதன்
  • பலாமரசமித்து : சந்திரன்
  • அரசமரசமித்து : குரு
  • அருகம்புல் : ராகு
  • தர்ப்பை : கேது
  • வெள்ளை எருக்கு : சூரியன்
  • வன்னிமரசமித்து : சனீஸ்வரன்
  • செம்மரசமித்து : அங்காரகன்

ஹோமத்தில் போடப்படும் சில சமித்துக்களும் அதன் பலன்களும் :

  • துளசி : திருமணம் கைகூடும்
  • அத்திக்குச்சி : மகப்பேறு அருளும்
  • நாயுருவிகுச்சி : மகாலட்சுமி கடாட்சம்
  • எருக்கன்குச்சி : எதிரிகள் இல்லாத நிலை உண்டாகும்
  • அரசங்குச்சி : அரசு வேலை அரச பதவி கிடைக்கும்
  • கருங்காலிகுச்சி : ஏவல் பில்லி சூனியம் அகலும்
  • வன்னிக்குச்சி : சனிகிரக கோளாறுகள் நீங்கும்
  • புரசங்குச்சி : குழந்தைகளின் கல்வி வளர்ச்சி
  • அருகம்புல் : விஷபயம் நீங்கும்
  • ஆலங்குச்சி : புகழைச் சேர்க்கும்
  • நொச்சி : காரியத்தடை விலகும்
  • வில்வம் : ராஜ யோகம் கிட்டும்
  • தர்ப்பை : ஞானம் பெருகும்
  • சோமவல்லிகொடி : தீராத நோய்கள் நீங்கும்
  • மாமரகுச்சி : சர்வமங்களங்களையும் தரும்
  • மாதுளைகுச்சி : வசீகரம் உண்டாகும்
  • கரும்புச்சாறு : விரும்பிய வரன் அமையும்
  • நவதானியங்கள் : கிரக தோஷங்கள் விலகும்
  • புங்கங்குச்சி : வெற்றியைத் தரும்
  • இலந்தை : குடும்பம் இனிது வாழ வழி உண்டாகும்
  • தேவதாரு : சகல தெய்வங்களின் அருள் கிடைக்கும்
  • வல்லாரைக் கொடி : கல்வி சிறப்பாக வரும்
  • எள் : தீராத கடன் தொல்லை தீரும்
  • ஆலங்குச்சி : ஆயுள் நீடிக்கும்
  • மகிழம்பூ : சிக்கல்கள் அனைத்தும் தீரும்
  • முழு மஞ்சள் : சகல வியாதிகளை நீக்கும்
  • சந்தனமரகுச்சி : சகல பீடைகளும் விலகும்
  • செம்மரகுச்சி : ரண ரோகங்கள் நீங்கும்
  • பலாமரகுச்சி : சந்தர தோஷம் நீங்கும்
  • பூவரசு : மன அமைதி உண்டாகும்

நவகிரகங்களுக்குரிய சமித்து குச்சிகள் மற்றும் விரிவான பலன்கள் :

பலாமர சமித்து :
  • பலாமர சமித்து என்பது சந்திரனுக்குப் பிடித்தமானது.
  • ப்ரம்ம ஞானம் அடையலாம்.
  • எல்லா இஷ்ட காரியங்களும் வெற்றியாகும்.
  • ஞானமும் சிறந்த புத்தியும் பெறலாம்.
  • சந்திர தோஷம் உள்ளவர்கள் பலாமர சமித்தை ஹோமத்தில் சேர்ப்பதன் மூலம் சந்தர தோஷம் நீங்கும்.
அரசமர சமித்து :
  • அரசு சமித்து என்பது அரச மரத்தின் குச்சிகளைக் குறிக்கிறது.
  • இது குரு கிரகத்திற்கு பிடித்தமான சமித்தாகும்.
  • பதவி உயர்வு, தலைமைப் பதவி வரும்.
  • அரசியல் வெற்றி அரசு வேலை கிடைக்கும்.
  • ஸ்திரீ வசிய சக்திகளை அருளும்.
  • எதிரிகளை வெல்வதற்கு உதவும்.
வெள்ளை எருக்கு சமித்து :
  • சூரிய கிரகத்திற்கு பிடித்தமான சமித்தாகும்.
  • இந்த மூலிகை சர்வசக்தி பொருந்தியது.
  • எடுத்த வேலை நன்றாக முடியும்.
  • சர்வ வசியங்களையும் அடையலாம். (ராஜ வசியம், ஸ்திரீ வசியம், மிருக வசியம், சர்ப்ப வசியம், லோக வசியம், சத்ரு வசியம், தேவ வசியம்)
செம்மர சமித்து :
  • அங்காரக கிரகத்திற்கு பிடித்தமான சமித்தாகும்.
  • ரண ரோகங்கள் நீங்கும்.
  • தைரியம் தன்னம்பிக்கை பெருகும்.
நாயுருவி சமித்து :
  • இது புதன் கிரக சமித்தாகும்.
  • லட்சுமி கடாட்சம் ஏற்படும்.
  • சுதர்சன ஹோமத்திற்கு இதுவே சிறந்தது.
அத்திமர சமித்து :
  • சுக்கிர கிரகத்தின் சமித்தாகும்.
  • புத்திர பேரு உண்டாகும்.
  • பித்ரு ப்ரீதி பெற்று விரும்பியது கைகூடும்.
  • வாக்கு சித்தியும் உண்டாகும்.
  • பில்லி சூனியம் பிசாசு பயம் நீக்கும்.
  • பகைவர்கள் எதிரிகளை வெல்லலாம்.
  • பைத்தியமும் ரோகங்களும் அகலும்.
  • பசு யானை குதிரை நோய் நீங்கும்.
வன்னிமர சமித்து :
  • வன்னி சமித்து சனிக் கிரகத்தின் சமித்தாகும்.
  • சனி தோஷம் நிவர்த்தியாகும்.
  • அக்னிப் பகவான் இதில் இருப்பதாகப் புராணங்கள் கூறுகின்றன.
  • வன்னி சமித்து பஸ்பம் (சாம்பல்) மும்மூர்த்திகளையும் மூன்று உலகங்களையும் மூன்று அக்னிகளையும் மூன்று குணங்களையும் குறிக்கும்.
  • வன்னிமரசமித்து யாக பஸ்பத்தை நெற்றியில் வைத்துக் கொள்வது யம பயத்தை போக்கும்.
  • சகல தெய்வங்களும் தேவர்களும் மகிழ்ச்சி அடைகிறார்கள்.
  • பூகம்பங்களால் உண்டாகிற பயங்கள் நீங்கும்.
தர்ப்பை சமித்து :
  • கேது பகவானுக்கு தர்ப்பை சமித்து மிகவும் பிடித்தமானது.
  • இது ஞான விருத்தியைத் தரும்.
அருகம்புல் :
  • ராகு பகவானுக்கு அருகம்புல் சமித்து மிகவும் பிடித்தமானது.
  • பூர்வ ஜென்ம வினைகள் நீங்கும்.
  • விஷ பயம் நீங்கும்.
  • சர்வ இடையூறுகள் நீங்கும்.
  • காரியம் சித்தியடையும்.
  • கீர்த்தியும் புகழும் பெறலாம்.
  • அறிவும் அழகும் வசீகரமும் உண்டாகும்.
  • விநாயகப் பெருமானுக்கு மிகவும் பிடித்தது.
  • கணபதி ஹோமத்தில் இதைப் பயன்படுத்துவர்.

யாகத்தில் போடப்படும் சில பொருட்களின் பயன்கள் :

எள் :
  • தீராத கடன் தொல்லை தீரும்.
  • பல ஜென்மங்களில் செய்த பாவங்கள் நீங்கும்.
மகிழம்பூ :
  • சிக்கல்கள் அனைத்தும் தீரும்.
  • சகல துக்கங்களும் சரியாகும்.
  • மனம் அமைதி பெறும்.
முழு மஞ்சள் :
  • சகல வியாதிகளை நீக்கும்.
  • கல்வியும் செல்வமும் தரும்.
  • ஸ்ரீ வித்யா ஹோமத்துக்குச் சிறந்தது.
ஆலமர சமித்து :
  • ஆயுள் நீடிக்கும்.
  • நோய்கள் நீங்கும்.
  • யமனுக்குப் பிடித்தமானது.
  • ம்ருத்யஞ்சய வேள்வியில் முக்கியமானது.
சந்தனமரம் :
  • சகல பீடைகளும் விலகும்.
  • லட்சுமி கடாட்சம் ஏற்படும்.
  • சகல சம்பத்துடன் வாழ்வார்கள்.
பூவரசு :
  • பூலோக அரச மரம் என்று வழங்கப்படுகிறது.
  • மன நிம்மதி அமைதி உண்டாகும்.
  • அரசு சமித்திற்கு இணையான பலன் இதற்கும் உண்டு.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *