முதல் நாளே வீடு சுத்தம் செய்து செவ்வாய் வியாழன் வெள்ளி ஞாயிறுக்கிழமைகளில் விரதம் ஆரம்பிக்கலாம்.
வளர்பிறை தேய்பிறை சஷ்டி திதிகளிலும், விசாகம் கார்த்திகை பூசம் நட்சத்திரத்திலும் விரதம் ஆரம்பிக்கலாம்.
விரதத்தில் கடைபிடிக்க வேண்டியவை:
- முதல் நாள் முடியும் நாள் மட்டும் ஒரு வேளை விரதம் இருந்தால் கூட மிக சிறப்பு.
- முடிந்தால் ஒரு வேளை விரதம் இருக்கலாம் அல்லது எளிமையாக நெய்வேத்தியம் மட்டும் சாப்பிடலாம்.
- மூன்று வேளை உணவு எடுப்பவர்கள் அரை வயிறு உணவு எடுத்துக் கொள்வதாக வேண்டி விரதம் இருக்கலாம்.
- பெண்களுக்கு தொடர் விரதத்தில் மாதவிடாய் காலத்தில் விரதத்தை நிறுத்திவிட்டு 25 வது நாள் என்றால் மறுபடி மாதவிடாய் முடிந்து பூஜை அறைக்கு செல்லும் நாளிலிருந்து 26 வது நாள் என தொடர வேண்டும்.
- சைவம் மட்டும் எடுத்துக் கொள்பவர்கள் ஒரு வேளை உணவு எடுக்காமல் இருப்பது அல்லது ஒரு வேளை முருகனுக்கு வைத்த நெய்வேதியம் மட்டும் எடுப்பது நல்ல பலன் தரும்.
- வாரம் ஒரு முறை வீடு மற்றும் பூஜை அறை சுத்தம் செய்யதால் போதும்.
- இல்லறத்தில் இருந்தால் அடுத்த நாள் வீடு சுத்தம் செய்து தலை குளித்துவிட்டு விரதத்தை தொடரலாம்.
- வேலைக்கு செல்பவர்கள் காலை எழுந்ததும் குளித்து முடித்து முருகனுக்கு தீபம் ஏற்றி முருகன் திருப்புகழ் கேட்டுக் கொண்டே வேலைகளை தொடரவும்.
- வெளியில் இருப்பவர்கள் முருகனை நினைத்து அசைவத்தை தவிர்த்து “ஓம் சரவணபவ” என்ற மந்திரத்தை முடிந்தவரை உச்சரித்து மனதோடு வேண்டினால் போதும்.
- தினமும் தலை குளிக்க முடியவில்லை எனில் செவ்வாய் வெள்ளி தலைக்கு குளிக்கலாம்.
- விரதம் இருப்பவர்கள் மட்டும் அசைவம் சாப்பிடாமல் இருக்கவும் வீட்டில் உள்ளவர்களுக்கு சமைத்து கொடுக்கலாம்.
- உனக்காக வாரத்தில் ஒரு நாள் அசைவம் சாப்பிட மாட்டேன் என்றும் வேண்டி விரதம் இருக்கலாம்.
- 48 நாள் விரதம் முடிந்த அடுத்த நாளே அசைவம் சாப்பிடக்கூடாது.
விரதம் இருக்கும் முறை:
- முதல் நாள் அருகில் உள்ள முருகன் கோவிலுக்கு சென்று எதற்கு விரதம் என்று சொல்லி ஆரம்பிக்கவும்.
- கோவிலுக்கு செல்ல முடியவில்லை என்றால் வீட்டில் முருகர் படம் வைத்து பூ போட்டு, பால் தேன் கற்கண்டு நெய் வைத்தியம் வைத்து விரதத்தை ஆரம்பிக்கவும்.
- 2 நெய் தீபம் காலை மாலை போடவும், எதற்காக விரதம் என்று ஒரு பேப்பரில் எழுதி முருகன் பாதத்தில் வைத்து விரதத்தை ஆரம்பிக்கலாம்.
- காலை 7 மணிக்கு முன்பாக தீபம் போடவும், வழிபட சிறந்த நேரம் காலை 6 to 7 மாலை 6 to 7 மணி.
- உங்கள் வேண்டுதலுக்கு ஏற்ப ஏதேனும் ஒரு திருப்புகழ் தினமும் கேட்கலாம் படிக்கலாம்.
- 108 முறை ஓம் சரவணபவ மந்திரம் மனதிற்குள் ஜெபம் செய்யவும், முடிந்தவரை சொல்லலாம்.
- உங்கள் வேண்டுதலைக்கு ஏற்ப எந்த பதிகங்கள் திருப்புகழ் பாராயணம் செய்கிறீர்களோ அதை 48 நாளும் தவறாமல் செய்ய வேண்டும்.
- வீட்டில் தீபம் ஏற்ற முடியவில்லை என்றாலும் அருகில் உள்ள முருகன் கோவிலுக்கு சென்றும் தீபம் ஏற்றலாம்.
விரதத்தின் பலன்கள்:
- வளர்பிறை சஷ்டி விரதம் செல்வம் பெருக, வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய, சுப காரியம் நடக்க வேண்டி இருப்பது.
- தேய்பிறை சஷ்டி விரதம் கடன் துன்பம் நீங்க, பிரச்சினைகள் தீர வேண்டி இருப்பது.
- கஷ்டம் தீர கந்த சஷ்டி கவசம், நோய் நீங்க சண்முக கவசம் படிக்கலாம் கேட்கலாம்.
- ஆறு வெற்றிலை தீபம் ஏற்றி வேல்மாறல், செகமயயுற்ற திருப்புகழ் குழந்தைக்காக வேண்டுபவர்கள் படிக்கலாம்.
- நிறைய சோதனைகள் வரும் அதை தாண்டி வைராக்கியமாக முழு அர்ப்பணிப்போடு செய்ய வேண்டும்.
- கர்ம வினைகளை குறைத்து முருகன் அருள்வார் என்பது ஐதீகம்.
- 48 நாள் முடிந்து நினைத்துப் பார்க்க முடியாத அற்புதம் நடக்கும் கேட்டதற்கான வழியும் கிடைக்கும்.