ஆடி மாதம் 2025 ஆம் ஆண்டு ஜூலை 17 ஆம் தேதி வியாழக்கிழமை துவங்கி ஆகஸ்ட் மாதம் 16 ஆம் தேதி சனிக்கிழமை முடிவடைகிறது.
ஆடி மாதம் புண்ணிய காலத்தில் நதிகளில் நீராடுவது மிகவும் விசேஷமானது.
இந்த ஆண்டு ஆடி மாதத்தில் இரண்டு கிருத்திகை நட்சத்திரங்கள் அமைந்துள்ளது சிறப்பு.
ஆடி மாதம் சிறப்புகள் :
- ஆடி மாதம் முழுவதும் அம்மன் கோயில்களில் திருவிழாக்கள் நடைபெறும்.
- ஆடி மாதத்தில் வரும் செவ்வாய், வெள்ளி, கிருத்திகை, அமாவாசை, பெளர்ணமி ஆகிய நாட்களில் விரதம் இருப்பது வழிபாடு செய்வது மிகவும் சிறப்பு.
- தேவர்களின் இரவு பொழுதான தட்சணாயகாலம் துவங்குவதும் ஆடி மாதம்.
- தட்சணாயனம் என்பது சூரிய பகவான் வடதிசையில் இருந்து தென்திசை நோக்கி பயணம் செய்யும் காலமாகும்.
- இது ஆடி மாதம் தொடங்கி மார்கழி மாதம் வரை ஆறு மாத காலம் ஆகும்.
- இம்மாதத்தில் சுப நிகழ்ச்சிகளுக்கு பதிலாக இறை வழிபாட்டிற்கு மிகவும் உகந்ததாக கருதப்படுகிறது.
- பெண் தெய்வ வழிபாட்டிற்கு சிறந்த மாதம் ஆடி மாதம்.
- முன்னோர்கள் வழிபாடு குலதெய்வ வழிபாடு கிராம தெய்வ வழிபாடு மிகவும் சிறந்தது.
- ஆண்டாள் அவதரித்த தினம் ஆடிப்பூரம் ஆகும்.
- ஆடி பௌர்ணமி தினத்தில் தான் ஹயக்ரீவர் அவதரித்தார்.
- ஆடி மாதத்தில் அம்மனுக்கு கூழ் வார்க்கும் திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெறும்.
முக்கிய விசேஷ விரத நாட்கள் ஆடி மாதம் 2025 :
- ஆடி கிருத்திகை : ஜூலை 20 – ஆடி 4 ஞாயிற்றுக்கிழமை
- நேரம் : இன்று 12.14 AM முதல் 10.36 PM வரை
- ஆடி அமாவாசை : ஜூலை 24 – ஆடி 8 வியாழன்
- நேரம் : இன்று 03.06 AM முதல் அடுத்த நாள் 01.48 AM வரை
- ஆடிப்பூரம் : ஜூலை 28 – ஆடி 12 திங்கட்கிழமை
- நேரம் : முதல் நாள் 06.55 PM முதல் இன்று 08.00 PM வரை
- கருட பஞ்சமி நாக பஞ்சமி : ஜூலை 29 – ஆடி 13 செவ்வாய்க்கிழமை
- நேரம் : இன்று 01.23 AM முதல் அடுத்த நாள் 02.29 ஆம் வரை
- ஆடிப்பெருக்கு : ஆகஸ்ட் 3 – ஆடி 18 ஞாயிற்றுக்கிழமை
- ஆடி பௌர்ணமி (வரலட்சுமி விரதம்) : ஆகஸ்ட் 8 – ஆடி 23 வெள்ளிக்கிழமை
- நேரம் : இன்று 02.52 PM முதல் அடுத்த நாள் 02.26 PM வரை பௌர்ணமி
- ஆவணி அவிட்டம் : ஆகஸ்ட் 9 – ஆடி 24 சனிக்கிழமை
- நேரம் : இன்று 04.05 PM முதல் அடுத்த நாள் 03.35 PM வரை
- ஆடி 28 : ஆகஸ்ட் 13 புதன் கிழமை
- கோகுலாஷ்டமி (ஆடி கிருத்திகை) : ஆகஸ்ட் 16 – ஆடி 31 சனிக்கிழமை
- அஷ்டமி நேரம் : இன்று 01.41 AM முதல் இன்று 11.13 PM வரை
- கிருத்திகை நேரம் : இன்று 08.27 AM முதல் அடுத்த நாள் 06.48 AM வரை
ஆடி விசேஷ நாட்களின் பலன்கள் :
- ஆடி மாத வெள்ளி விநாயகர் அம்பிகை வழிபட்டால் வீட்டில் சுப காரியங்கள் தடையின்றி நடைபெறும்.
- ஆடி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை வரலட்சுமி விரதம் இருப்பது மிகவும் சிறப்பு.
- ஆடி செவ்வாய் பெண்கள் விரதம் இருந்து எண்ணெய் தேய்த்து குளித்து அம்மனை வழிபட்டால் மாங்கல்ய பலம் கூடும்.
- அம்மனை வழிபடும்போது லலிதா சகஸ்ர நாமம் சொல்லி வழிபட கூடுதல் பலன் கிடைக்கும்.
- ஆடி மாதத்தில் அம்மனுக்கு சாற்றப்படும் வளையல்களை பெண்கள் அணிந்து கொண்டால் திருமண வரன் கூடும் குழந்தை பாக்கியம் கிடைக்கும் செல்வம் பெருகும்.
- ஆடி பௌர்ணமி அன்று சிவபெருமானுக்கு கருப்பு ஊமத்தம் பூமாலை அணிவித்து வழிபாடு செய்தால் சகல நன்மைகளையும் பெறலாம்.
ஆடி 1 அம்மனை வீட்டிற்கு அழைக்கும் எளிய வழிபாடு