கும்பம் ராசி குரு பெயர்ச்சி பலன்கள் 2025 – 2026

குரு பார்க்க கோடி தோஷ நிவர்த்தி குரு முழு சுபர் குரு அருள் இல்லை என்றால் ஒரு அருளும் இல்லை.

2025 – 2026 குரு பெயர்ச்சியில் கும்ப ராசிக்கான பலன்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் பற்றி விரிவாக பார்ப்போம்.

கும்பம் 5 ல் குரு (9-11- 1) ஆம் இடம் குரு பார்வை – யோக வாழ்வு புதிய தொழில் வேலை சிறப்பு சுப காரியம் நடைபெறும் நல்ல நட்பு கிடைக்கும் பேசும் வார்த்தையில் கவனம் தேவை.

கும்ப ராசிக்கான பலன்கள் :

  • கும்பம் 5 ல் குரு (9-11- 1) பார்வை – யோக வாழ்வு.
  • குடும்பப்பற்றுள்ள சேவை செய்யும் ராசி.
  • இறை பலம் அதிகமாக இருக்கும்.
  • சாமி கும்பிடுவது மிகவும் பிடிக்கும்.
  • ஏழரை வருடம் ஜென்ம சனியில் படாத கஷ்டம் இல்லை.
  • பண கஷ்டம், போராட்டம் கடந்த இரண்டரை வருடமகா இருந்திருக்கும்.
  • 5 ல் குரு பணம் லாபம் பெயர் புகழ் வளர்ச்சியை தருவார்.
  • குபேர யோகம் உண்டு, குலதெய்வ ஆசிர்வாதம் உண்டு.
  • பதவி உயர்வு, உயர் கல்வி, வெளிநாடு படிப்பு, அரசு வேலை, அரசியலில் சிறப்பு.
  • பொருளாதாரம் சிறப்பாக இருக்கும், கடன் அடையும்.
  • வீடு கட்டும் யோகம் வரும் நல்ல நட்பு கிடைக்கும்.
  • எதிரிகள் இல்லாத வருடம் இது, குதூகல பயணம் செல்வீர்கள்.
  • குழந்தைகளால் மன நிம்மதி கிடைக்கும்.
  • உடல் ஆரோக்கியம், மன நிம்மதி, நல்ல மருத்துவம் கிடைக்கும்.
  • போலி உறவுகள் விலகி நல்லவர்கள் உடன் இருப்பர்.
  • குலதெய்வம் கூடவே இருக்கும் காலம் இது வளர்ச்சியை நோக்கி பயணிக்கும்.
  • உங்களை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும்.
  • சுப காரியம் எதுவாயினும் சிறப்பாக செய்யலாம்.
  • பிள்ளைகள் ஆரோக்கியம், படிப்பு வாகனம் கவனம்.
  • உங்களை பகையாக நினைப்பவர்களிடம் பேசுங்கள் சரியாகிவிடும் இப்பொழுது.
  • அசையும் அசையா பொருள் சேர்க்கை உண்டு.
  • துணையின் உடல் நிலையில் கவனம் தேவை.உடல் நலம் பார்த்துக் கொள்ளவும்.
  • பணவரவு சிறப்பு, சுயதொழில், பெரிய தொழில் தொடங்கும் வாய்ப்பு உண்டு.
  • அடிமை என்ற எண்ணம் மாறும்.
  • திருமணத்தடை நீங்கும், காதல் திருமணம், ஆண் வாரிசு வாய்ப்பு உண்டு.
  • அப்பா அம்மாவிடம் சமூக உறவு ஏற்படும்.
  • சன்னியாசிகள் மகான்கள் வழிபாடு கிடைக்கும்.
  • உணவு, இரவு பயணம் இவற்றில் கவனம் தேவை.
  • பெண்களுக்கு வியாபாரம் தொழில் சிறப்பாக இருக்கும்.
  • மாணவர்கள் புதுவிதமான படிப்பு படிப்பார்கள்.

கவனமாக இருக்க வேண்டிய பகுதி :

  • வயிறு
  • நகம்
  • சளி தொந்தரவு

வழிபட வேண்டிய ஸ்தலங்கள் :

  • ஜீவசமாதிராகவேந்திரா
  • திருநாகேஸ்வரம்
  • ஆலங்குடி குரு

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *