12 ராசிக்கான பஞ்சபூத ஸ்தலங்கள்

எந்த ராசியினர் எந்த கோவிலுக்கு செல்ல வேண்டும் 12 ராசிக்கான சிவபெருமானின் பஞ்சபூத ஸ்தலங்களில் வழிபாடு செய்தால் நினைத்தது நிறைவேறும் எடுத்த காரியம் வெற்றியாகும்.

சிவபெருமானின் பஞ்சபூத ஸ்தலங்கள்:

  • நிலம்: காஞ்சிபுரம் – ஏகாம்பரேஸ்வரர் கோவில் (Ekambareswarar Temple, Kanchipuram)
  • நீர்: திருவானைக்காவல் – ஜம்புகேஸ்வரர் கோவில் (Jambukeshwarar Temple, Thiruvanaikaval)
  • நெருப்பு: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் (Arunachaleswara Temple, Tiruvannamalai)
  • காற்று: ஸ்ரீ காளஹஸ்தி – ஸ்ரீகாளகஸ்தீஸ்வரர் கோவில் (SriKalahasti Temple, Srikalahasti)
  • ஆகாயம்: சிதம்பரம் – நடராஜர் கோவில் (Nataraja Temple, Chidambaram)

பஞ்சபூத அடிப்படையில் 12 ராசிகளின் பிரிவுகள்:

12 ராசிகளும் நெருப்பு நிலம் காற்று நீர் என்ற நான்கு வகையில் ஏதேனும் ஒரு பிரிவில் வரும்.

  • நெருப்பு ராசிகள் : மேஷம், சிம்மம், தனுசு
  • நிலம் ராசிகள் : ரிஷபம், கன்னி, மகரம்
  • காற்று ராசிகள் : மிதுனம், துலாம், கும்பம்
  • நீர் ராசிகள் : கடகம், விருச்சிகம், மீனம்

பஞ்சபூதங்களின் வேறு பெயர்கள்:

  • நிலம்: பிருதிவி, பூமி, மண்
  • நீர்: அப்பு, ஜலம், புனல்
  • நெருப்பு: தேயு, அக்னி, அனல
  • காற்று: வாயு, கால், கனல்
  • ஆகாயம்: வெளி, வானம், விசும்பு

நெருப்பு ராசிகள்:

  • மேஷம், சிம்மம், தனுசு
  • திருவண்ணாமலை – அண்ணாமலையார் கோவில்
  • லிங்கம் – “அக்னி லிங்கம் அல்லது ஜோதி லிங்கம்”
  • பண்புகள் – துணிச்சலானவர்கள், ஆற்றல் மிக்கவர்கள், உற்சாகமானவர்கள் மற்றும் விரைவாகச் செயல்படும் குணம் கொண்டவர்கள்.

நிலம் ராசிகள்:

  • ரிஷபம், கன்னி, மகரம்
  • காஞ்சிபுரம் – ஏகாம்பரேஸ்வரர் கோவில்
  • லிங்கம் – “ப்ருத்வி லிங்கம்”
  • பண்புகள் – யதார்த்தமான அணுகுமுறை, பொறுமை, மற்றும் உறுதியான தன்மையை கொண்டவர்கள்.

காற்று ராசிகள்:

  • மிதுனம், துலாம், கும்பம்
  • ஸ்ரீ காளஹஸ்தி – ஸ்ரீ காளகஸ்தீஸ்வரர் கோவில்
  • லிங்கம் – “வாயு லிங்கம்”
  • பண்புகள் – அறிவுப்பூர்வமானவர்கள், சுதந்திரமானவர்கள் மற்றும் சமூக தொடர்புகளை விரும்புபவர்களாக இருப்பார்கள்.

நீர் ராசிகள்:

  • கடகம், விருச்சிகம், மீனம்
  • திருவானைக்காவல் – ஜம்புகேஸ்வரர் கோவில்
  • லிங்கம் – “அப்பு லிங்கம் அல்லது ஜம்பு லிங்கம்”
  • பண்புகள் – உணர்ச்சிவசப்படுதல், கனிவான குணம், மற்றவர்களுடன் ஒன்றிணைக்கும் தன்மையை கொண்டிருப்பார்கள்.

ஆகாயம்:

  • ராசி நட்சத்திரம் தெரியாதவர்கள் மற்றும் அனைத்து ராசிக்காரர்களும் வழிபடலாம்.
  • சிதம்பரம் – தில்லை நடராஜர் கோவில்
  • லிங்கம் – “இந்திர லிங்கம் அல்லது ஆகாச லிங்கம்”
  • பண்புகள் – நிலம், நீர், நெருப்பு, காற்று ஆகிய பூதங்கள் தோன்றுவதற்கு அடிப்படையாகவும், அனைத்தையும் உள்ளடக்க கூடிய தன்மையையும் கொண்டது.

லக்னம் எந்த ராசியை குறிக்கின்றதோ அதற்குரிய பஞ்சபூத ஸ்தலத்தை தரிசனம் செய்தால் லக்ன தோஷம் நிவர்த்தியாகும்.

நமக்கு நடக்கும் திசைக்குரிய ராசி அதிபதி தற்போது எந்த ராசியில் இருக்கிறதோ அந்த பஞ்சபூத ஸ்தலத்திற்கு சென்று வழிபடுவதும் சிறப்பு.

சனி பகவான் தொழில் காரகன் அவர் எந்த ராசியில் தற்போது அமர்ந்திருக்கிறாரோ அந்த ராசிக்குரிய பஞ்சபூத ஸ்தலத்திற்கு சென்று வழிபாடு செய்தால் வேலை தொழில் மற்றும் வியாபார முன்னேற்றம் ஏற்படும்.

நாம் பிறந்த ஜென்ம நட்சத்திர நாளன்று நமது ராசிக்குரிய பஞ்சபூத ஸ்தலத்திற்கு சென்று வழிபட வாழ்வில் மாற்றங்கள் நிகழும்.

12 ராசிக்காரர்களும் வழிபட உகந்த பஞ்சபூதத் தலம் – ஶ்ரீ பஞ்சலிங்கேஸ்வரர்.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *