அபிஷேகம் என்பது விக்கிரகங்களுக்கு சக்தியை புதுப்பிக்க முறைப்படி செய்யும் ஒரு சடங்கு.
இயங்கும் இறை சக்தியை குளிர்விக்க கோவில்களிலும் வீட்டிலும் உள்ள சிலைகளுக்கு அபிஷேகங்கள் செய்யப்படுகின்றன.
12 ராசிக்கான அபிஷேக பொருள்கள்:
- மேஷம் : மஞ்சள் – துன்பங்கள் நீங்கும்
- ரிஷபம் : தேன் – வாழ்க்கை சிறப்பாக இருக்கும்
- மிதுனம் : எலுமிச்சை சாறு – தடைகள் அனைத்தும் நீங்கும்
- கடகம் : பச்சரிசி மாவு – தன லாபம் உண்டாகும்
- சிம்மம் : பஞ்சாமிர்தம் – தடைபட்ட காரியம் நடைபெறும்
- கன்னி : சாத்துக்குடி சாறு – வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும்
- துலாம் : தேன் – கடுமையான சோதனைகள் நீங்கும்
- விருச்சிகம் : இளநீர் – மதிப்பு மரியாதையான வாழ்வு அமையும்
- தனுஷ் : மஞ்சள் பொடி – நினைத்த காரியம் நிறைவேறும்
- மகரம் : சந்தனம் – பொருளாதார வளர்ச்சி உண்டாகும்
- கும்பம் : பஞ்சாமிர்தம் – எதிர்பாராத நன்மைகள் நடைபெறும்
- மீனம் : மஞ்சள் பொடி – மகிழ்ச்சியான நிறைவான வாழ்க்கை அமையும்
அருகம்புல் சாற்றி மனதார வேண்டிக்கொண்டு சூறை தேங்காய் உடைத்தல் காரிய வெற்றியைத் தரும்.
சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகர் அபிஷேகத்திற்கு நாம் தேன் கொடுத்தால் கடன் தீரும், வீண் செலவுகள் குறையும்.