வீட்டிற்குள் இந்த உயிரினங்கள் வந்தால் அதிர்ஷ்டமா? துரதிஷ்டமா?

வீட்டிற்குள் எந்தெந்த உயிரினங்கள் வந்தால் அதிர்ஷ்டம் என்பது பற்றியும் எந்தெந்த உயிரினங்கள் வந்தால் துரதிஷ்டம் என்பது பற்றியும் இந்த பதிவில் பார்க்கலாம்.

வீட்டிற்குள் இந்த உயிரினங்கள் வந்தால் அதிர்ஷ்டம் :

  • சிட்டுக்குருவி : சுப காரியம் நடக்கும்
  • வெட்டுக்கிளி : பணம் சேரும்
  • நாய் : கண் திருஷ்டி விலகும்
  • அரணை : வாரா கடன் வசூல் ஆகும்
  • பல்லி : குலதெய்வ அருள் உண்டு
  • செங்குளவி : மகிழ்ச்சி உண்டாகும்
  • அணில் : சிக்கல்கள் தீரும்
  • புறா : பணத்திற்கு பஞ்சமில்லை
  • தட்டான் : நல்ல சக்திகள் உள்ளன
  • கிளி : எதிர்பாராத நல்லது நடக்கும்
  • பொன்வண்டு : காரிய வெற்றி
  • சேவல் : வியாபாரத்தில் முன்னேற்றம்
  • பட்டாம்பூச்சி : முன்னோர்கள் வருகிறார்கள்
  • ஆந்தை : லட்சுமி தேவியின் அருள் உண்டு
  • செங்குளவி கூடு கட்டினால் : குழந்தை பாக்கியம் உண்டாகும்
  • பசுமாடு வீட்டிற்கு வந்தால் : தெய்வீக அருள் உள்ளது
  • காகம் வீட்டிற்கு வந்தால் : முன்னோர்கள் ஆசி உண்டு
  • பறவை இனம் கூடு கட்டினால் : மன அமைதி நிலவும்
  • மயில் கழுகு வீட்டிற்கு வருவது மிக மிக அரிது வந்தால் மிகவும் அதிர்ஷ்டத்தை தரும்

வளர்ப்பு பிராணிகளுக்கு இவை பொருந்தாது

வீட்டிற்குள் இந்த உயிரினங்கள் வந்தால் துரதிஷ்டம் :

  • பாம்பு : வருமானம் பாதிக்கும்
  • வௌவால் : மன கஷ்டம் வரும்
  • தவளை : நோய் வரும்
  • கரையான் : பணம் கரையும்
  • கருங்குளவி : தீயவை நடக்கப் போகிறது
  • குரங்கு : எதிரிகள் பக்கத்தில் உள்ளனர்
  • மூட்டை பூச்சி : தரித்திரம் உண்டாக்கும்
  • தேரை : சண்டை சச்சரவு உண்டாக்கும்
  • ஆமை, உடும்பு : தீராத கஷ்டம் வரும்
  • தேள், பூரான் : தீய சக்திகள் வீட்டில் உள்ளன
  • தேனீ : எதிர்மறை சக்தியை கொண்டு வரும்
  • சிவப்பு எறும்பு வரிசையாக வந்தால் : தேவையில்லாத பிரச்சனைகள் வரும்
  • கருப்பு பட்டாம்பூச்சி : ஆபத்து வரப்போகிறது என்று முன்னோர்கள் உணர்த்துவது
  • கருப்பு பூனை : வீட்டில் உள்ளவர்களுக்கு பிரச்சனை வரும் (வளர்ப்பு பூனைக்கு இது விதிவிலக்கு)
  • காகம் கொத்துவது தலையில் தட்டுவது எச்சம் இடுவது வரப்போகும் ஆபத்தை முன்கூட்டியே உணர்த்துவதற்காக

இவ்வாறு நடக்கும் நேரங்களில் சற்று சிந்தித்து அமைதியாக செயல்படுங்கள்

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *