விரதங்கள் அதன் பலன்கள் மற்றும் விரதத்தின் போது கடைபிடிக்க வேண்டியவை

விரதம் என்றால் சாப்பிடாமல் இருந்து கடவுளை வணங்குவது அல்ல எண்ணங்களை கட்டுப்படுத்தி மனதை தூய்மையாக வைத்து கடவுளின் அன்பை பெறுவதே விரதம் ஆகும்.

விரதம் என்றால் என்ன?

உடம்பிற்கு ஓய்வு கொடுப்பதும் உடலை சுத்தம் செய்வதும் விரதம், இது ஒருவகை மருத்துவம்.

நியாயமான முறையில் தன்னுடைய வேண்டுதல் நிறைவேற இறைவனின் துணையை நாடும் ஒரு வகை வழிபாட்டு முறை.

மனமும் உடலும் ஓய்வு பெறும் ஒரு அற்புதம் விரதம்.

விரதங்களும் அதன் பலன்களும் :

  • பிரதோஷம் : மன நிம்மதி அமைதி பெற
  • மகா சிவராத்திரி : சகல நன்மை உண்டாகும்
  • விநாயகர் சதுர்த்தி : முன்வினை பாவம் தீரும்
  • சங்கடஹர சதுர்த்தி : தடைகள் அகலும்
  • வைகாசி விசாகம் : நினைத்தது நிறைவேறும்
  • தைப்பூசம் : தீராத பிரச்சனை தீரும்
  • பங்குனி உத்திரம் : திருமண தடை நீங்கும்
  • கந்த சஷ்டி : குழந்தை பாக்கியம் பெற
  • வரலட்சுமி விரதம் : மாங்கல்ய பாக்கியம் பெற
  • வைகுண்ட ஏகாதசி : மோட்சம் கிட்டும்
  • திருவோணம் : குடும்ப ஒற்றுமை, மகிழ்ச்சி
  • கிருஷ்ண ஜெயந்தி : செல்வம் பெருகும்
  • பௌர்ணமி : வேலைவாய்ப்பு பெற நோய் நீங்க
  • திரு கார்த்திகை : கல்வி, செல்வம், ஞானம் கிட்டும்

யார் யார் விரதம் இருக்கக் கூடாது ?

  • கர்ப்பிணி பெண்கள்
  • மருந்து எடுப்பவர்கள்
  • வயதானவர்கள்
  • குழந்தைகள்

விரதத்தின் போது கடைபிடிக்க வேண்டியவை :

  • விரதத்தின் போது தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும்.
  • சுட வைத்து ஆற வைத்த தண்ணீரை குடிக்கலாம்.
  • தண்ணீர் குடிக்காமல் விரதம் இருக்கவே கூடாது.
  • தண்ணீர் தானே என்று டீ, காபி, சூப், ஜூஸ் குடிக்கக்கூடாது.
  • கசப்பு உணவுகள், கீரைகள், அசைவம் சாப்பிடக்கூடாது.
  • மது, புகை கண்டிப்பாக எடுக்க கூடாது.
  • பகலில் தூங்கக் கூடாது, இரவில் தூங்கலாம்.
  • சிவராத்திரி, வைகுண்ட ஏகாதசி விரதத்தில் மட்டும் இரவு நேரத்தில் தூங்க கூடாது.
  • இறைவனை நினைத்துக் கொண்டே இறைவன் நாமத்தை சொல்லி மனதை ஒருநிலைப்படுத்த வேண்டும்.
  • விரதம் இல்லாதவர்கள் கூட சாப்பிடாமல் சாமியை தரிசனம் செய்தால் நல்ல சிந்தனை, காரிய வெற்றி கிடைக்கும் என்பர்.
  • நட்சத்திரம், திதிக்கு உரிய தினங்களில் விரதம் இருப்பதால் ஜாதகத்தில் அந்த கிரகத்தின் பலம் இல்லை என்றாலும் விரதத்தால் அதன் முழு பலனை பெறலாம்.
  • மனிதன் கைப்படாத உருவாக்காத உணவுகள் தோஷமற்றது என்பர் ஆக பால், பழம், இளநீர் அருந்தலாம்.
  • மாதத்திற்கு ஒரு முறை விரதம் மேற்கொள்வது உடலின் இயக்கத்தையும் மனதையும் சீர்படுத்தும் என்பர்.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *