காலை எழுந்தவுடன் நாம் முதல் வேலையாக செல்போன் பார்க்கக் கூடாது உள்ளங்கைகள் மற்றும் மஞ்சள் நிறம் தான் பார்க்க வேண்டும்.
படுக்கையை எழுந்தவுடன் மடித்து வைத்து விட வேண்டும் பல்துலக்கி விட்டு தான் டீ காபி பருக வேண்டும் முடிந்தவர்கள் குளிப்பதற்கு சாதாரண தண்ணீரை உபயோகிக்கவும் சுறுசுறுப்பாக இருக்கும்.
இப்படி சில சின்ன சின்ன விஷயங்களை மாற்றிக் கொள்வதால் நம் வாழ்க்கை வெற்றி பெறும்.
நம் வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டிய சில விஷயங்கள்:
- காலை எழுந்தவுடன் உள்ளங்கைகளை முதலில் பார்க்கவும், பிறகு மஞ்சள் நிறம் மங்களகரமான பொருள்கள் ஏழு குதிரை படம் இவைகளை பார்த்தால் வாழ்க்கை வளமாகும்.
- எழுந்தவுடன் படுக்கைகளை முதலில் மடித்து வைத்து விட வேண்டும்.
- முதல் வேலையாக துடைப்பத்தை கையில் எடுத்து வீடு வாசல் சுத்தம் செய்ய வேண்டும்.
- குளித்தவுடன் சூரியனைப் பார்த்து “ஓம் சூரிய பகவானே நமக” என்று வணங்கி விட்டு அடுத்த வேலைகளை தொடர வேண்டும்.
- குளித்துவிட்டு சமைத்தால் குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகும்.
- சமையலில் உப்பு சேர்க்கும்போது உங்கள் இஷ்ட தெய்வத்தை நினைத்து போட வேண்டும்.
- காலை, மாலை நேரத்தில் வீட்டில் தீபம் ஏற்றி தூபம் போட வேண்டும்.
- குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவ வாசனை மலர்களை சூடிக்கொள்ளலாம், கடவுள் படத்திற்கும் போடலாம்.
- வீட்டுக்கு அருகில் இருக்கும் கோவிலுக்கு வாரம் ஒரு முறையாவது செல்ல வேண்டும்.
- வீட்டிற்குள் நுழையும் போது கை கால்களை கழுவ வேண்டும்.
- இரவு தூங்குவதற்கு முன் ஒரு நிமிடமாவது உங்கள் இஷ்ட தெய்வத்திடம் அன்றைய நிலை குறைகளை சொல்லிவிட்டு தூங்கச் செல்ல வேண்டும்.
நம் வாழ்க்கையில் மாற்றிக் கொள்ள வேண்டிய சில விஷயங்கள்:
- காலை எழுந்தவுடன் சாப்பிடும் போதும் சண்டை போடக்கூடாது.
- சனியனே என்று யாரையும் திட்டக்கூடாது அது சனி பகவானை நாமே அழைப்பதற்கு சமம்.
- முடியை விரித்து போடக்கூடாது குடும்பத்தில் கணவன் மனைவி ஒற்றுமை இருக்காது. முடிந்தவரை வீட்டில் இருக்கும் நேரத்தில் ஆவது முடியை கட்டிவைக்க வேண்டும்.
- முடியை துடைப்பதால் கூட்டக் கூடாது ஐஸ்வரியம் குறையும்.
- குளித்து முடித்ததும் முதலில் முகத்தை துவட்டக்கூடாது வறுமை வந்து சேரும் முதலில் முதுகை தான் துவட்ட வேண்டும்.
- குளியலறை கதவை திறந்தே வைக்கக் கூடாது எதிர்மறை எண்ணங்கள் பெருகும்.
- வீட்டிற்குள் அமர்ந்து நகம் வெட்டக்கூடாது காலை வேளையில் வீட்டிற்கு வெளியே அமர்ந்து தான் நகங்களை வெட்ட வேண்டும் இரவு நேரத்தில் நகம் வெட்ட கூடாது.
- வீடுகளைக் கூட்டி குப்பைகளை மூலையில் தள்ளி அதன் மீது துடைப்பத்தை சாற்றி வைக்கக் கூடாது.
காலையில் எத்தனை மணிக்கு எழுந்திருக்க வேண்டும்?
- 4 மணி மிகவும் நல்லது
- 5 மணி நல்லது
- 6 மணி பரவாயில்லை
- 7 மணி சோம்பேறி
- 8 மணி அட்ட சோம்பேறி
- 9 மணி நோயாளி
- 10 மணி வாழ்வதே வீண்
நேரத்தைவீணடிக்காதீர்கள் – இரவு வேலை பார்ப்பவர்களுக்கு இது பொருந்தாது .