வீட்டில் எளிமையாக சாமி சிலைகளுக்கு அபிஷேகம் செய்யும் முறை

அபிஷேகம் என்பது இயங்கும் இறை சக்தியை குளிர்விக்க கோவில்களிலும் வீட்டிலும் உள்ள சிலைகளுக்கு செய்யப்படும் ஒரு சடங்கு.

திருமுழுக்கு என்று தீந்தமிழில் கூறப்படும் அபிஷேகத்துக்கு ஆரம்பத்தில் நம் முன்னோர் 26 வகை திரவியங்களைப் பயன்படுத்தினார்கள் தற்போது அது 18-ஆக குறைந்துவிட்டது.

எந்த வகை அபிஷேகமும் 24 நிமிடங்கள் மட்டுமே செய்யவேண்டும் என்று ஆகம விதி உள்ளது.

ஆனால், சில ஆலயங்களில் 48 நிமிடங்கள் வரை அபிஷேகங்கள் செய்யப்படுவது உண்டு.

எளிமையாக சாமி சிலைகளுக்கு அபிஷேகம் செய்யும் முறை:

  • உங்கள் வீட்டில் இருக்கும் சிலைகளைப் பொறுத்து அதற்கு உகந்த நாட்களில் மாதம் ஒரு முறையாவது அபிஷேகம் செய்யுங்கள்.
  • கருங்கல் திருமேனியாக இருந்தால் நல்லெண்ணெய் சாற்றி ஐந்து நிமிடம் கழித்து பிறகு அபிஷேகத்தை தொடரவும்.
  • ஒவ்வொரு அபிஷேகம் முடிந்ததும் சந்தனம் குங்குமம் இட்டு ஒரு பூ வைத்து நெய்வேத்தியம் எளிமையாக உலர் திராட்சை கற்கண்டு வைத்து தீப தூபம் காட்டி பிறகு தண்ணீர் ஊற்றி களையவும்.
  • மறுமுறை பின் ஒவ்வொரு அபிஷேகத்திற்கும் இதனை தொடரவும் குறைந்தது 6 அல்லது 16 பொருட்கள் கொண்டு அபிஷேகம் செய்ய வேண்டும்.

முக்கியமான 6 அபிஷேக பொருட்கள்:

  • தண்ணீர் : மன அமைதி தரும்
  • பஞ்சகவ்வியம் : பாவத்தை போக்கும்
  • அரிசி மாவு : அபயம் அளிக்கும்
  • மஞ்சள் :கடன் நிவர்த்தி
  • பால் : நீண்ட ஆயுள்
  • தயிர் : மகப்பேறு தரும்

கடைசியாக வஸ்திரம் பூ சாற்றி தீப தூப ஆராதனை செய்யவும்.

ஏனெனில் விக்கிரகங்களை காய விடக்கூடாது.

இவற்றை கோவில்களுக்கு அபிஷேகத்திற்கும் கொடுக்கலாம் அதே பலன் தரும்.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *