ராகு – கேது பெயர்ச்சி என்பது 1 வருடம் 6 மாதம் எதிர்திசை பயணம்.
மற்ற கிரகங்கள் முன்னோக்கி நகரும், ராகு – கேது மட்டும் பின்னோக்கி நகரும்.
இதை சர்ப்ப கிரகங்கள், நிழல் கிரகங்கள் என்றும் சொல்வார்கள்.
பொதுவாக ராகு – கேதுவுக்கு ஸ்தான பலம் இல்லை.
ராகு கேது பெயர்ச்சி 2025 – 2027 :
கொடுப்பதை கெடுக்கும் கெடுப்பதைக் கொடுக்கும் ராகு கேது.
திருகணிதம் பெயர்சி : 18/05/2025
வாக்கியம் பெயர்சி : 26/04/2025
ராகு மீன ராசியில் இருந்து கும்ப ராசிக்கும் கேது கன்னி ராசியிலிருந்து சிம்ம ராசிக்கும் எதிர்ப்பயணமாக பெயர்ச்சி ஆகிறார்கள்.
நற்பலன் உள்ள ராசிகள்:
- மேஷம், தனுசு, கன்னி, மீனம்
சுமாரான பலன் உள்ள ராசிகள்:
- ரிஷபம், துலாம், மிதுனம், விருச்சிகம்
கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்:
- மகரம், சிம்மம், கும்பம், கடகம்
ராகு கேது உணர்த்துவது :
மிதுன ராசிக்கான பலன்கள் :
- 9 ல் ராகு : பாக்கியஸ்தானம், 3 ல் கேது : முயற்சிஸ்தானம்.
- 1 1/2 ஆண்டு கால எதிர் பயணம் ராகு கேது.
- முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும்.
- உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கிடைக்கும்.
- வெளிநாடு வெளியூர் யோகம் உண்டு.
- தந்தை மாமனார் உடல்நிலை கவனம்.
- நினைத்ததை சாதிக்கும் நேரம்.
- திருமணம், குழந்தை பாக்கியம் தடைக்குப்பின் சரியாகும்.
- உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
- வழக்குகள் சாதகமாக முடியும்.
- உடன்பிறப்புகளை பிரிக்கும்.
- அக்கம் பக்கத்தில் சிறு சிறு பிரச்சனைக்கு வாய்ப்பு உண்டு.
- பேச்சில் மிக மிக கவனம் தேவை.
- மனிதர்களின் மனதை அறியும் பக்குவம் வரும்.
- விளையாட்டில் உள்ளவர்களுக்கு சிறப்பாக இருக்கும்.
- மன நிறைவான வாழ்க்கையை கொடுக்கும்.
- வேலை, ஊதிய உயர்வு, முன்னேற்றம் கொடுக்கும்.
- அவசொல் அவமானம் சரியாகும்.
- பூர்வீக சொத்து பிரச்சனை வில்லங்கம் சரியாகும்.
- கடன்கள் அடைப்படும் நேரம்.
- வாழ்கை துணையின் மூலம் லாபம் உண்டு.
- அலைச்சல் மன கஷ்டம் வரும்.
- குலதெய்வ வழிபாடு நன்மை தரும்.
- அரசு வேலைக்கு வாய்ப்பு உண்டு.
- வயிறு, கால், நரம்பு தொந்தரவு வரும் கவனம்.
வழிபட வேண்டிய ஸ்தலங்கள் :
- ஆஞ்சநேயர்
- ஸ்ரீரங்கநாதர்
- பிள்ளையார்பட்டி விநாயகர்
12 ராசிக்கான ராகு கேது பெயர்ச்சி பலன்கள் :
எளிய வழிபாடு முறை :
ராகு கேது கிரகம் சாதகமாக இல்லையெனில், இது போன்ற பிரச்சனைகள் வந்து சேரும் என்பர்.
- வம்பு வழக்கு வீண்பழி
- குழந்தை, திருமணம் தடை
- அவசொல், அவமானம்
- வறுமை, கடன் தொல்லை
- வேலை, தொழில் முடக்கம்