108 மணிகள் கொண்ட இரண்டு ருத்ராட்ச மாலைகள் அணிய வேண்டும்.
மாலை அணிவதற்கு முதல் நாளில் இருந்து வீடு சுத்தம் செய்து விரதம் ஆரம்பிக்க வேண்டும்.
தாய், தந்தை, குரு, கோவில் அர்ச்சகர்கள் மூலம் மாலை அணிந்து கொள்ளலாம்.
தானாக மாலை அணிந்து கொள்ளக்கூடாது.
பூஜை செய்யும் போது கடைபிடிக்க வேண்டியவை:
- காலை 7 மணிக்கு முன் பூஜை செய்ய வேண்டும்.
- மாலைக்கு இரண்டு நேரமும் சந்தன குங்குமம் இடவேண்டும்.
- பச்சை, நீல நில ஆடை அணிய வேண்டும்.
- ஆண்கள் மேல் துண்டு கட்டாயம் அணியவும்.
- நகம், முடி வெட்டுதல் முக சவரம் செய்தல் கூடாது. இரண்டு நேரமும் தலைக்கு குளிக்க வேண்டும்.
- தனி தட்டு டம்ளர் பயன்படுத்த வேண்டும்.
- பாய் தலையணை பயன்படுத்தக்கூடாது.
- தரையில் புது துணி விரித்து உறங்கலாம்.
- தாம்பத்தியத்தில் இருக்கக்கூடாது.
- பகலில் நேரத்தில் தூங்கக் கூடாது.
- செருப்பு அணியக்கூடாது.
- தீட்டு வீட்டிற்கு செல்லக்கூடாது.
- கசப்பு உணவுகள், கீரைகள் சாப்பிடக்கூடாது.
- மது, புகை, மாமிசம் கண்டிப்பாக எடுக்க கூடாது.
- ஒரு வேளையாவது விரதம் இருக்க வேண்டும்.
- எளிமையாக பால் பழம் ஒரு வேளை சாப்பிடலாம்.
- 3 வேளையும் அரை வயிறு உணவு எடுத்துக் கொள்ளலாம்.
- தீட்டு ஆனவர்கள் மாலை அணிந்தவர்களுக்கு சமைக்க கூடாது.
- தண்ணீர் குடிக்காமல் விரதம் இருக்கவே கூடாது.
- கோபம், வீண் வார்த்தைகள் பேசக்கூடாது.
- முருகன் சிந்தனை உள்ள நாமங்களை உச்சரிக்கவும்.
- பெண்களுக்கு 21 நாட்கள் விரதம் சிறப்பானது.
- 48, 21, 18, 12, 6 மாலை அணிபவர்களின் விரத நாட்கள்.
- கர்ப்பிணி பெண்கள், மருந்து எடுப்பவர்கள் விரதம் இருக்கக் கூடாது.
சாப்பிடாமல் விரதம் இருப்பவர்கள் கவனிக்க வேண்டியவை:
- விரதத்தின் போது தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும்.
- தண்ணீர் தானே என்று டீ, காபி, சூப், ஜூஸ் குடிக்கக்கூடாது.
- மனிதன் கைப்படாத உருவாக்காத உணவுகள் தோஷமற்றது என்பர் ஆக பால், பழம், இளநீர் அருந்தலாம்.
மாலை கழட்டும் முறை:
- ஏதேனும் ஒரு முருகன் கோவிலுக்கு வேண்டி மாலை அணிவது வழக்கம்.
- கோவிலுக்கு சென்று வந்தவுடன் மாலையை நாமாக கழட்டக்கூடாது
- தாய் தந்தை குழந்தைகள் கைகளால் கழட்டி பால் சொம்பில் போடலாம்.
- கோவிலில் உள்ள குருக்களிடம் சென்று மாலையை கழட்டிக் கொள்ளலாம்.
- மாலையை சுத்தம் செய்து பத்திரமாக பூஜையறையில் ஒரு துணியில் கட்டி எடுத்து வைத்து விடவும்.
- மறுமுறை மாலை அணியும் போது அதே மாலையை அணிந்து கொள்ளலாம்.
- விரதம் முடிந்த மறுநாளே அசைவம் சாப்பிடக்கூடாது.