முருகனின் முக்கிய விரத தினங்களில் விரதம் இருப்பவர்கள் இந்த திருப்புகழை குறைந்தபட்சம் 108 முறை படிக்க அல்லது கேட்க மிகுந்த பலனை தரும்
திருப்புகழ் படிக்கும் முறை:
- வேண்டியது நிறைவேறும் வரை தினம்தோறும் குறைந்தபட்சம் 6, 9, அல்லது 12 முறை படிக்கலாம் கேட்கலாம்
- முருகனுக்கு 2 நெய் தீபம் ஏற்றி பின்வரும் இந்த திருப்புகழை படிப்பதும் கேட்பதும் மிக மிக கூடுதல் பலன் தரும்
- வேண்டுதலுக்கு ஏற்ப திருப்புகழை மனதில் ஏற்றி நேரம் இருக்கும் போது எல்லாம் மனதிற்குள் உச்சரிக்கலாம்
முருகன் திருப்புகழ் மற்றும் பலன்கள்:
- குழந்தை வரம் பெற : செகமாயையுற்று திருப்புகழ் 218 (சுவாமிமலை)
- திருமண வரன் கூட : நீலங்கொள் மேகத்தின் திருப்புகழ் 1296 (பொதுத்திருப்புகழ்)
- கல்வியில் தேர்ச்சி : மதியால் வித்தகனாகி திருப்புகழ் 923 (கருவூர்)
- சொந்த வீடு அமைய : அண்டர்பதி குடியேற திருப்புகழ் 724 (சிறுவாபுரி)
- தீராத நோய் தீர : இருமலு ரோக திருப்புகழ் 243 (திருத்தணிகை)
- நினைத்தது நடக்க : நினைத்தது எத்தனையில் திருப்புகழ் 278 (திருத்தணிகை)
- வருமானம் பெருக : பெருக்கச் சஞ்சலித்து திருப்புகழ் 83 (திருச்செந்தூர்)
- அரசு வேலை கிடைக்க : ஆங்குடல் வளைந்து திருப்புகழ் 899 (திருமாந்துறை)
- சொத்து, வழக்கு பிரச்சனை : கண் கயற்பிணை திருப்புகழ் 729 (திருவாமாத்தூர்)
- கருத்து வேறுபாடு நீங்க : தொந்தி சரிய திருப்புகழ் 68 (திருச்செந்தூர்)
- எதிரிகள் தொல்லை : தரிக்குங்கலை திருப்புகழ் 64 (திருச்செந்தூர்)
- சகலமும் சரியாக : முத்தைத்தரு பத்தித்திரு திருப்புகழ் 6 (திருவருணை)