வருடத்திற்கு ஒரு முறை வரும் இந்த 14 நாட்கள் நாம் வழிபாடு செய்வதால் நம்முடைய அனைத்து முன்னோர்களையும் வழிபாடு செய்த பலன் கிடைக்கும்.
இதுவரை திதி தர்ப்பணம் கொடுக்காதவர்கள் முன்னோர்கள் வழிபாடு செய்யாதவர்கள் இந்த வழிபாடு செய்வதால் அந்த வருடம் முழுவதும் முன்னோர்களை வழிபாடு செய்த பலன் கிடைக்கும்.
2025 மகாளய பட்சம்:
- 8 செப்டம்பர் 2025 திங்கள் கிழமை முதல், 20 செப்டம்பர் 2025 சனிக்கிழமை வரை 13 நாள் மகாளய பட்சம்
- மகாபரணி 2025: 12/9/2025
மகாளய அமாவாசை 2025:
- 21 செப்டம்பர் 2025 ஞாயிற்றுக்கிழமை.
- நேரம் : அதிகாலை 1:42 முதல் மறுநாள் அதிகாலை 2:49 வரை.
14 நாள் மகாளய பட்சம் வழிபாடு:
- காலை எழுந்து குளித்து முடித்து சூரிய உதயத்திற்கு பின் காகத்திற்கு நெய் சாதம் வைக்கவும்.
- மாலை 6 மணிக்கு மேல் தெற்கு பார்த்தவாறு முன்னோர்களுக்கு ஒரு புது அகல் விளக்கில் நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும்.
மகாபாரணி வழிபாடு:
- மகா பரணி (12/9/2025) அன்று மாலை ஆறு மணிக்கு மேல் அருகில் உள்ள ஆலயத்திற்கு சென்று ஒரு நெய் தீபம் (பரணி தீபம்) எமதர்மராஜன் மற்றும் முன்னோர்களை நினைத்து ஏற்ற வேண்டும்.
- ஏதேனும் இரு ஜீவராசிகளுக்கு அன்று உணவு தானம் அளிக்கவும்.
வீட்டில் 14 நாட்கள் தர்ப்பணம் கொடுக்கும் முறை:
- ஒரு தாம்பூலம் வைத்து அதன் மேல் வலது கை கட்டைவிரல் ஆள்காட்டி விரலுக்கு நடுவே சிறிது கருப்பு எள் வைத்து நீர் ஊற்றி முன்னோர்கள் அனைவரையும் நினைத்து மூன்று முறை நீர் விடவும்.
- இந்த நீரை கால் படாத இடத்தில் அதாவது ஆறு குளம் ஏரி கிணறு போன்ற நீர் நிலைகளில் ஊற்றி விடவும்.
சுமங்கலி பெண்கள், தந்தை உள்ள மகன்கள் எள் தண்ணீர் இறைத்து தர்ப்பணம் கொடுக்கக் கூடாது.
முன்னோர்கள் வழிபாடும் முடியும் வரை பூஜை அறையில் விளக்கு ஏற்றி வழிபாடு செய்ய கூடாது.