பொய் பற்றி சில உண்மைகள் :
பொய் பேசுபவர்களுக்கு கிடைக்கும் மிக பெரிய தண்டனை அவர்கள் உண்மையை பேசும் போது யாரும் நம்புவதில்லை.
பொய்யை திரும்ப திரும்ப சொல்ல அது ஒரு நாள் உண்மையாகி விடும்.
பொய் சொல்பவர்களிடம் நியாயம் கேட்காதே அதை நியாயப்படுத்த பல பொய்களை சொல்லுவார்கள்.
பொய்யை உண்மை போல் பேசுபவர் அந்த பொய்யாலே வாழ்க்கை இழப்பர்.
பொய்யை சொல்லி சமாளிப்பதை விட உண்மையை சொல்லி காயப்படுத்தி விடு இல்லையெனில் அந்தப் பொய் உன் மனதிற்கு பிடித்தவர்களை உயிர் உள்ள வரை கொள்ளும்.
காலம் உணர்த்தும் சில உண்மை :
கூட்ட நெரிசலில் தவறவிட்ட சில்லறையை…
எடுக்க சிரமமாக இருக்கும் என்று…
பரவாயில்லை என அப்படியே…
விட்டு செல்வதை போல!!!
சில சில்லறை மனிதர்களையும்…
அப்படியே விட்டு விலகி…
சென்று விடுங்கள் ஏனெனில்…
சிரமப்பட்டு எடுத்து வைத்துக் கொள்ள…
அவர்கள் ஒன்றும் சிறந்தவர்கள் அல்ல!!!
போனது போகட்டும் அடுத்தது அற்புதம் ஆகட்டும்
இதுதான் உலகம் :
நம்மள அசிங்கமா திட்டுவாங்க …
அபாண்டமா பழி போடுவாங்க …
கோபப்படுத்துற மாதிரி பேசுவாங்க …
ஆனா, நாம பொறுமை இழந்து !!
ஒரு வார்த்தை பேசிட்டா அவ்வளவுதான் !!
நம்மள முடிச்சு விட்டுருவாங்க ……..
நாம் சொன்ன அந்த ஒரு வார்த்தை தான் எல்லா இடத்திலும் ஒலிக்கும்.