நாம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய சில பூஜை அறை குறிப்புகள் மற்றும் பூஜை அறை எப்படி அமைய வேண்டும் என்பது பற்றிய வாஸ்து சாஸ்திர குறிப்புகள் சிலவற்றையும் பூஜை செய்யும் போது தவிர்க்க வேண்டிய சில விஷயங்கள் பற்றியும் வீட்டில் பூஜை செய்யும் போது நாம் கடைபிடிக்க வேண்டிய சில விஷயங்களையும் இந்த பதிவில் விரிவாக பார்ப்போம்.
பூஜையறை அமைப்பதற்கான சில குறிப்புகள்
- பூஜையறைக்கு மேல் பரண், படிக்கட்டு அமைக்கக்கூடாது.
- கழிவறைக்கு அருகில் அல்லது மேலே பூஜை அறை இருக்கக்கூடாது.
- பூஜை அறை படுக்கையறைக்குள் வரும்படி அமைக்கக்கூடாது.
- பூஜையறையில் உள்ள சாமி படங்கள் தரையில் இருந்து ஒரு அடிக்கு மேல் தான் அமைக்க வேண்டும்.
- பூஜை அறையின் தரைப்பகுதி மற்ற அறைகளை விட சற்று உயரமாக இருக்க வேண்டும்.
- பூஜை அறைக்குப் போடப்படும் கதவுகள் எப்போதும் இரட்டைக் கதவுகளாக இருப்பது நல்லது.
- பூஜை அறை வடக்கு, வடகிழக்கு அல்லது கிழக்கில் அமைக்கப்பட வேண்டும்.
- ஈசான்ய மூலையில் பூஜை அறையை அமைக்க முடியாதவர்கள் தென்மேற்கில் பூஜை அறையை அமைத்துக்கொள்ளலாம்.
- பெரிய வீடாக இருந்தால், வீட்டின் மையப் பகுதியில் பூஜை அறையை அமைப்பது சிறந்தது.
- பிரமிடு வடிவிலான கூரை அமைப்பு நல்ல ஆற்றலை அதிகரிக்கும்.
- பூஜை அறைக்கு லேசான நிறங்கள், வெள்ளை, வெளிர் மஞ்சள், வெளிர் நீளம் போன்றவற்றை பயன்படுத்தலாம்.
பூஜை அறையில் தவிர்க்க வேண்டிய சில விஷயங்கள்
- சிலைகள் மற்றும் புகைப்படங்களை அதிகளவில் பூஜையறையில் வைப்பதைத் தவிர்க்கவும்.
- பழைய கோவில்களில் இருந்து கொண்டுவரப்பட்ட சிலைகளை வைக்கக்கூடாது.
- இறந்தவர்களின் புகைப்படங்களை பூஜையறையில் வைக்கக்கூடாது.
- பூஜையறையில் அதிக எடையுள்ள சிலைகளை வைப்பதைத் தவிர்க்கவும்.
- பூஜை அறை சுவரை ஒட்டி சுவாமி சிலைகளை வைக்கக்கூடாது.
- சுவாமி படங்களை அடிக்கடி மாற்றி வைப்பதை தவிர்க்கவும்.
- சாமி படங்களை எதிரும் புதிருமாக வைக்கக் கூடாது.
- பூஜை அறையில் ஒரே கடவுளின் படம் இரு முறை இருக்கக் கூடாது.
- கடவுள் உருவங்களின் பாதங்கள் மற்றும் முகத்தை பூக்களால் மறைக்கக் கூடாது.
- ஒன்றுக்கு மேற்பட்ட சங்குகள் இருந்தால் தோஷம் ஏற்படும்.
- பழைய வாடிய பூக்கள், உடைந்த பொருட்களை பூஜை அறையில் வைக்கக்கூடாது.
- காய்ந்த எலுமிச்சை பழங்களை பூஜை அறையில் வைத்திருப்பதைத் தவிர்க்கவும்.
- பூஜை அறையில் யந்திரங்கள் போன்ற தந்திர பொருட்களை வைக்கக் கூடாது.
- பூஜை அறையில் சண்டை போடுதல் சப்தமாக பேசுதல் கூடாது.
- பழைய மத புத்தகங்கள் போன்ற எதிர்மறை சக்தியை அதிகரிக்கும் பொருட்களை பூஜை அறையில் வைக்கக் கூடாது.
- பூஜை அறையில் உக்கிரமான அல்லது கோபமான தெய்வங்களின் படங்களை வைக்கக் கூடாது.
- சனி பகவானின் சிலையை பூஜை அறையில் வைக்கக் கூடாது.
- தெற்கு நோக்கி தெய்வப் படங்களை வைக்கக் கூடாது, கிழக்கு பக்கம் முடியாவிட்டால் தெற்கு பக்கத்தை தவிர பிற திசைகளை பார்த்து படங்களை வைத்து வணங்கலாம்.
வீட்டில் பூஜை செய்யும் போது கவனிக்க வேண்டிய சில விஷயங்கள்
- சுப்ரபாதம் காலை வேளையில் மட்டுமே கேட்க வேண்டும்.
- தீட்சை பெற்றவர்கள் மட்டுமே விபூதியை நீரில் குழைத்து பூசலாம் மற்றவர்கள் நீரில் குழைத்து பூசக்கூடாது.
- எச்சில் பாத்திரத்தை சுவாமிக்கு பயன்படுத்தக் கூடாது.
- எச்சில் பாத்திரத்தில் உள்ள பொருட்களையும் சுவாமிக்கு பயன்படுத்தக் கூடாது.
- கையில் விளக்குகளை ஏந்தி ஆராதனை காட்டக் கூடாது.
- தீபத்தில் உள்ள திரி எரிந்து கருகாமல் இருக்க வேண்டும்.
- வீட்டில் பின் வாசல் கதவை மூடிவிட்டு பிறகு தீபம் ஏற்றவும்.
- விளக்கு எரியும் போது கைவிரலால் எண்ணெயிலுள்ள தூசியை எடுப்பதோ திரியை தூண்டுவதோ கூடாது.
- வீட்டு பூஜையில் சுவாமிக்கு வைக்கும் வாழைப்பழத்தில் ஊதுபத்தியை சொருகி வைக்கக் கூடாது.
- தேங்காய் உடைக்கும் போது இரண்டுக்கு அல்லது அதற்கு மேற்பட்ட துண்டுகளாக உடைந்தால் அதை தெய்வத்திற்கு நிவேதனம் செய்யக்கூடாது.
- சுவாமிக்கு வெற்றிலை பாக்கு பூக்கள் பழங்களை பூமியில் நேரடியாக வைக்கக் கூடாது.
- பூஜை செய்யும் போது ஈர உடையுடனும் தோளில் துண்டை போட்டுக் கொண்டும் வழிபாடு செய்யக்கூடாது.
- பெண்கள் தலை முடியை விரித்தவாறும் தலையில் துணி கட்டிக் கொண்டும் வழிபாடு செய்யக்கூடாது.
- பூஜையறையில் ஒரு டம்ளர் அல்லது சொம்பில் தண்ணீர் வைத்துவிட்டு பிறகு பூஜை செய்ய வேண்டும்.
- வீட்டில் கோலம் போடாமலும் விளக்கேற்றாமலும் ஆலயங்களுக்கு ஒருபோதும் செல்லக்கூடாது.
- சுவாமி படங்களில் உள்ள உலர்ந்த பூக்களை உடனே அப்புறப்படுத்த வேண்டும்.
- நிவேதனம் செய்த தேங்காயை சமையலில் சேர்த்து அந்த உணவை மறுபடியும் சுவாமிக்கு நிவேதனம் செய்யக்கூடாது.
- சுவாமிக்கு நிவேதனம் செய்யும் போது வாழை மரத்திலிருந்து நறுக்கப்பட்ட பகுதி சுவாமி படத்திற்கு வலது பக்கம் வரவேண்டும்.
- எவர் சில்வர் பாத்திரங்களில் உணவுகளை நேரடியாக வைத்து தெய்வங்களுக்கு நிவேதனம் செய்யக்கூடாது.
- பாத்திரத்தில் இலை வைத்து அதில் உணவை வைத்து நிவேதனம் செய்யலாம்.
- செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பூஜை அறை மற்றும் பூஜை பொருட்களை சுத்தம் செய்யக்கூடாது.
- கடவுளை ஒரு விருந்தினராக பாவித்து மனதார பிரார்த்தனை செய்யவும்.
மேலும் பல ஆன்மீக தகவல்கள் பற்றி தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.