விநாயகர் வழிபாடு என்பது மிகவும் எளியது பெரிதாக பூஜைகள் செய்ய தேவையில்லை கையில் கிடைத்த மஞ்சள் குங்குமம் மண் சாணம் என எதில் பிடித்து வைத்து மனதார வழிபட்டாலும் அதை ஏற்றுக் கொண்டு நம் வேண்டுதலுக்கு செவி சாய்ப்பார்
பிள்ளையார் பிடித்து வைப்பதன் பலன்கள்:
- மஞ்சள் – சகல சௌபாக்கியம் பெருகும்
- குங்குமம் – குழந்தைகள் கல்வி சிறக்கும்
- சந்தனம் – குழந்தை பாக்கியம் கிட்டும்
- விபூதி – உஷ்ண நோய்கள் நீங்கும்
- உப்பு – எதிரிகள் தொல்லை நீங்கும்
- பழங்கள் – ஆரோக்கியம் மேம்படும்
- பூக்கள் – நினைத்தது நிறைவேறும்
- வெள்ளெருக்கு – தீய சக்திகள் விலகும்
- தங்கம் – செல்வ செழிப்பு பெருகும்
- வெள்ளி – மன அமைதி கிடைக்கும்
- வெண்ணெய் – கடன் தொல்லை நீங்கும்
- வாழைப்பழம் – வம்ச விருத்தி உண்டாகும்
- புற்று மண் – வியாபாரம் தொழில் பெருகும்
- அருகம்புல் – ஆன்மீக முன்னேற்றம் ஏற்படும்
- கருங்கல் – நினைத்த காரியம் வெற்றியாகும்
- வெல்லம் – இனிமையான வாழ்க்கை அமையும்
- சர்க்கரை – சர்க்கரை நோயின் தாக்கம் குறையும்
- கற்கண்டு – கணவன் மனைவி ஒற்றுமை கூடும்
- களிமண் – அரசு வேலை மற்றும் பதவி உயர்வு
- பசு சாணம் – அனைத்து தோஷங்களும் நீங்கும்
விநாயகர் எளிமையான கடவுள் என்பதால் அவரை எப்படி வழிபட்டாலும் அதை ஏற்றுக் கொள்வார்.