புரட்டாசி மாதத்தில் புதன் ஆதிக்கம் அதிகமாக இருப்பதால் பெருமாள் வழிபாடு செய்வதால் வாழ்வில் இன்னல்கள் நீங்கி அனைத்து நன்மைகளும் நடைபெறும்.
நாள் : 17/9/2025 புதன்கிழமை, புரட்டாசி 1
நேரம்: காலை 6:00 to 7:00, 9:15 to 10:15
கிழமை புதன், திதி ஏகாதசி, மாதம் புரட்டாசி இந்த மூன்றும் இணைந்து வருவதால் இந்த வருடம் புரட்டாசி முதல் நாள் வழிபாடு செய்வது மிகவும் சிறப்பு.
வழிபடும் முறை:
- காலை சூரிய உதயத்திற்கு முன்பாக வீடு பூஜை அறை சுத்தம் செய்யவும்.
- பெருமாள் படத்தை சுத்தம் செய்து சந்தன குங்குமம் இட்டு சிறிதாவது துளசி சாற்ற வேண்டும்.
- நெய்வேத்தியமாக கற்கண்டு, துளசி தீர்த்தம் அல்லது பானகம் வைக்கவும்.
- ஓம் நமோ நாராயணாய நமக என்ற மந்திரத்தை 108 முறை ஜெபம் செய்யலாம்.
- விஷ்ணு சகஸ்ரநாமம் முடிந்தால் படிக்கலாம் அல்லது கேட்கலாம்.
- ஒரு சிறு பித்தளை தட்டில் பச்சரிசி பரப்பி ஏலக்காய், பச்சை கற்பூரம், 11 ஒரு ரூபாய் நாணயம் பச்சை நிற துணியில் மூட்டையாக கட்டி அதன் மீது வைக்கவும்.
- புரட்டாசி மாதம் முழுக்க இந்த மூட்டையை கடவுளாக பாவித்து இதற்கு தீப தூப ஆராதனை செய்யவும்.
- முதல் வாரம் அல்லது நான்காம் வாரத்திற்குள் ஏதேனும் ஒரு சனிக்கிழமை படையல் போட்டு வழிபட வேண்டும்.
- மற்ற சனிக்கிழமைகளில் எளிமையாக மாவிளக்கு தீபம் ஏற்றி வழிபாடு செய்யலாம்.
- சனிக்கிழமைகளில் அருகில் உள்ள ஏதேனும் ஒரு பெருமாள் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்வது மிக சிறப்பு.
2025 புரட்டாசி சனிக்கிழமை:
5 சனிக்கிழமை விரதம் இருப்பவர்கள் ஐப்பசி மாதத்தில் வரும் ஒரு சனிக்கிழமையும் சேர்த்து விரதம் இருக்க வேண்டும்.
- 20 9 2025 புரட்டாசி 4
- 27 9 2025 புரட்டாசி 11
- 4 10 2025 புரட்டாசி 18
- 11 10 2025 புரட்டாசி 25
- 18 10 2025 ஐப்பசி 1
பெருமாளுக்கு பிடித்தமான புளி சாதம், எலுமிச்சை சாதம், நெல்லிக்காய் சாதம், தேங்காய் சாதம், தயிர் சாதம், சுண்டல் சர்க்கரை பொங்கல் போன்றவற்றையும் பெருமாளின் முகம் போன்று படயலாக போடலாம்.
சாதம் சாம்பார் ரசம் சக்கரை பொங்கல் சுண்டல் வடை பாயசம் பொரியல் இவற்றையும் படையலாக போடலாம்.
சனிக்கிழமைகளில் படையல் போட சிறந்த நேரம் மதியம் 12:30 மணி முதல் 1:20 வரை.
அவரவர்கள் குடும்ப வழக்கத்திற்கு ஏற்றவாறு விரதம் இருந்து வழிபாடு செய்யலாம்.
கண்டிப்பாக புரட்டாசி மாதம் முழுவதும் அசைவம் தவிர்ப்பது நல்லது.