முன்னோர்கள் பித்ரு லோகத்தில் இருந்து புறப்படும் நாள் ஆடி அமாவாசை பூமிக்கு வந்து சேரும் நாள் புரட்டாசி அமாவாசை திரும்ப பித்ருலோகத்திற்கு செல்லும் நாள் தை அமாவாசை.
குலதெய்வத்தின் அருள் முழுமையாக கிடைக்க வேண்டும் என்றால் பித்ருகளின் அருள் இருக்க வேண்டும்.
மறந்து போன, திதி தெரியாத, மற்ற அமாவாசைகளில் வழிபடாமல் இப்படி எந்த காரணமாக இருந்தாலும் ஒரு ஆண்டு முழுவதும் வழிபட்ட பலன் மகாளய பட்ச அமாவாசை அன்று வழிபட கிடைக்கும்.
புரட்டாசி மகாளய அமாவாசை 2025:
- நாள் : 21/09/2025 புரட்டாசி 5, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1:03 AM முதல் மறுநாள் அதிகாலை 1:42 AM வரை.
- மகாளய என்றால் பெரிய கூட்டம், பட்சம் என்றால் 15 நாள் கொண்ட கால அளவு.
- நம் முன்னோர்கள் அனைவரும் பித்ருலோகத்தில் இருந்து கூட்டமாக ஒன்று சேர்ந்து பூமிக்கு வந்து நாம் அளிக்கும் தர்ப்பணம், தானம் மற்றும் வழிபாடுகள் போன்றவற்றை ஏற்று நமக்கு ஆசி வழங்கும் காலம் இந்த புரட்டாசி மகாளய அமாவாசை.
படையலில் கண்டிப்பாக வைக்க வேண்டியவை:
- பாசிப்பருப்பு சாம்பார்
- வாழைக்காய் பொரியல்
- அகத்திக்கீரை மற்றும் இளநீர்
- வெங்காயம் சேர்க்காத உளுந்து வடை
தர்ப்பணம் யார் கொடுக்கலாம் யார் கொடுக்கக் கூடாது:
- அப்பா இல்லை என்றால் ஆண் பிள்ளை தர்ப்பணம் கொடுக்கலாம்.
- அம்மா அப்பா இல்லை என்றால் ஆண் பிள்ளை தர்ப்பணம் கொடுக்கலாம்.
- அம்மா இல்லை என்றால் அப்பா தான் தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.
- அப்பா இருந்தால் மகன் அம்மாவுக்காக தர்ப்பணம் கொடுக்க கூடாது.
- ஒரு ஆணின் குழந்தை, மனைவி இறந்து விட்டால் அவரின் அப்பா இருந்தாலும் தர்ப்பணம் கொடுக்கலாம்.
- அண்ணன் தம்பிகள் 2, 3 பேர் இருந்தால் ஒவ்வொருவரும் முறையாக தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.
- கணவனை இழந்த பெண்கள் விரதம் இருந்து தர்ப்பணம் கொடுக்கலாம்.
- தர்ப்பணம் கொடுக்கும் வரை, தர்ப்பணம் கொடுப்பவர்கள் கண்டிப்பாக விரதமாக இருக்க வேண்டும்.
- தந்தை உள்ள மகன்கள், சுமங்கலி பெண்கள் தர்ப்பணம் கொடுக்க கூடாது.
- பெண் பிள்ளைகள் பெற்றோர்களுக்காக எள் தண்ணீர் இறைத்து பிண்டம் வைக்க கூடாது.
- அமாவாசை அன்று சுமங்கலி பெண்கள் விரதம் இருக்க கூடாது மற்றும் தர்ப்பணம் கொடுக்க கூடாது.
- தர்ப்பணம் கொடுப்பவர்கள் சூரிய உதயத்திலிருந்து மதியம் 12 மணிக்குள் தர்ப்பணம் கொடுத்து விட வேண்டும்.
- பெண் பிள்ளைகள் பெற்றோர்களுக்காக வீட்டில் படையல் இட்டு வழிபடலாம் அன்னதானம் செய்யலாம்.
அமாவாசை அன்று முன்னோர்கள் வழிபாட்டில் செய்ய வேண்டியது மற்றும் செய்ய கூடாதது:
- அமாவாசை அன்று வீட்டு வாசலில் கோலம் போடக்கூடாது.
- வீட்டில் அசைவம் சமைக்கக்கூடாது மற்றும் சாப்பிடக்கூடாது.
- நகம் வெட்டுதல், மூடி வெட்டுதல் போன்றவை செய்யக்கூடாது.
- எலுமிச்சை அறுத்து நிலை வாசலில் இருந்தால் எடுத்து விடவும்.
- அமாவாசையன்று நிலை வாசலுக்கு மஞ்சள் குங்குமம் இட கூடாது.
- முன்னோர்கள் பூஜையில் மணி அடித்து வழிபாடு செய்யக்கூடாது.
- நம் பித்ருகளுக்கு எள் கடனாக வாங்கி தர்ப்பணம் செய்யக்கூடாது.
- தர்ப்பணம் செய்ய ராகு காலம் எமகண்டம் பார்க்க தேவையில்லை.
- படையல் போடும் போது ராகுகாலம் எமகண்டமாக இருக்கக்கூடாது.
- வாழைக்காய் உளுந்து வடை இளநீர் படையலில் வைக்க வேண்டும்.
- பூஜை அறையில் உள்ள விளக்கை முன்னோர்கள் வழிபாட்டிற்காக ஏற்றக்கூடாது, அதற்கென தனியாக விளக்கு வைத்துக் கொள்ளவும்.
- முன்னோர்கள் வழிபாடும் முடியும் வரை வீட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றி நாம் வழிபாடு செய்தல் கூடாது.
- முன்னோர்கள் படம் இல்லாதவர்கள் தெற்கு பார்த்தவாறு ஒரு அகல் விளக்கு மட்டும் ஏற்றி வழிபாடு செய்யலாம்.
- காகத்திற்கு கிழக்கு பார்த்தவாறு சாதம் வைத்து பிறகு நீர் விலவி அதை காகம் எடுத்த பிறகு தான் நாம் சாப்பிட வேண்டும்.
- ஏதேனும் இரு ஜீவராசிகளுக்கு கண்டிப்பாக அன்னதானம் கொடுக்க வேண்டும் (காகம், பசு, நாய், மனிதன்).
- பெண்களுக்கு மாதவிடாய் காலமாக இருந்தால் தலை குளித்துவிட்டு படையலுக்கு உணவு சமைக்கலாம்.
- அமாவாசை அன்று இரவு ஒரு கைப்பிடி சாதம் ஆவது கண்டிப்பாக பெண்கள் சாப்பிட வேண்டும்.
- தந்தை உள்ள மகன்கள், சுமங்கலி பெண்கள், பெண் பிள்ளைகள் பெற்றோருக்காக எள் தண்ணீர் இறைத்து பிண்டம் வைக்கக்கூடாது.
- மாலை 6 மணிக்கு மேல் அருகில் உள்ள கோவிலுக்கு சென்று ஒரு நல்லெண்ணெய் தீபம் முன்னோர்களை வேண்டி ஏற்ற வேண்டும்.
முன்னோர்களுக்கு எளிமையாக வீட்டில் பூஜை செய்யும் முறை:
- சூரிய உதயத்திற்கு பின் குளித்துவிட்டு ஒரு நிமிடம் மனதார முன்னோர்களை நினைத்து பிரார்த்தனை செய்து கொள்ளவும்.
- வீட்டில் தர்ப்பணம் செய்ய ஒரு தாம்பூலம் வைத்து அதன் மேல் வலது கை கட்டைவிரல் ஆள்காட்டி விரலுக்கு நடுவே சிறிது கருப்பு எள் வைத்து நீர் ஊற்றி முன்னோர்கள் அனைவரின் பெயர்களை சொல்லி மூன்று முறை நீர் விடவும்.
- இந்த நீரை கால் படாத இடத்தில் ஆறு குளம் ஏரி கிணறு போன்ற நீர் நிலைகளில் ஊற்றி விடவும்.
- என் முன்னோர்கள் அனைவரும் ஏற்று கொள்ள வேண்டும் என மனதில் நினைத்து வழிபாடு செய்ய வேண்டும்.
- தெற்கு பார்த்தவாறு முன்னோர்கள் படத்தை வைத்து ஒரு அகல் விளக்கு ஏற்ற வேண்டும்.
- முன்னோர்கள் படத்திற்கு துளசி மாலை அணிவித்து சாம்பிராணி தூபம் போட வேண்டும்.
- நிறை சொம்பு நீர் வெற்றிலை பாக்கு 2 வாழைப்பழம் மல்லிகை பூ சிறிதளவு வைக்க வேண்டும்.
- படையல் போட்டு வழிபட்டால் வாழைக்காய் பொரியல், உளுந்து வடை கண்டிப்பாக வைக்க வேண்டும்.
- சாதத்தில் சிறிது தயிர், கருப்பு எள் கலந்து காக்கைக்கு கிழக்கு திசை பார்த்து உணவு வைத்து நீர் விலவ வேண்டும்.
- பசுவிற்கு அகத்திக்கீரை மற்றும் வாழைப்பழம் கொடுப்பது, தெரு நாய்களுக்கு உணவு அளிப்பது, அன்னதானம் செய்வது சிறப்பு.
- மாலை 6 மணிக்கு மேல் அருகிலுள்ள கோயிலுக்கு சென்று ஒரு நல்லெண்ணெய் தீபம் முன்னோர்களுக்காக ஏற்ற வேண்டும்.
கண்டிப்பாக மகாளய அமாவாசை அன்று செய்ய வேண்டிய 4 விஷயங்கள்:
- எள் தண்ணீர் இறைத்து மதியம் 12 மணிக்கு முன்னதாக தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.
- மதிய நேரத்தில் படையல் போட்டு முன்னோர்களை வழிபட வேண்டும்.
- ஏதேனும் இரு ஜீவராசிகளுக்கு அன்னதானம் கொடுக்க வேண்டும்.
- அருகிலுள்ள கோவிலுக்கு சென்று முன்னோர்களை வேண்டி மாலை 6:00 மணிக்கு மேல் தீபம் ஏற்ற வேண்டும்.