கருடபஞ்சமிக்கு முன்பு சதுர்த்தி திதி அமையும் நாள் நாகசதுர்த்தி நாளாகும்.
நாகர்களும், கருடனும் அவதரித்த தினமே நாக சதுர்த்தி மற்றும் கருட பஞ்சமி கொண்டாடப்படுகிறது.
நாகர்கள் முதலில் பிறந்ததால் நாக சதுர்த்தி முதலிலும், கருட பஞ்சமி மறுநாளும் வருகிறது.
பாற்கடலிருந்து வெளிவந்த ஆலகால விஷத்தை சிவபெருமான் உண்ட தினமாக நாக சதுர்த்தி கருதப்படுகிறது.
தன்னுடைய தாயையும், தன்னையும் அடிமைத்தனத்தில் இருந்து கருடன் மீட்ட தினத்தையே கருட பஞ்சமியாக கொண்டாடப்படுகிறது.
நாகச்சதுர்த்தி வழிபாடு:
ஜாதகத்தில் ராகு திசை, கேது திசை, கால சர்ப்ப தோஷம், நாக தோஷம் உள்ளவர்கள் கண்டிப்பாக நாக சதுர்த்தி வழிபாடு செய்ய வேண்டும்.
நாக தேசத்திற்காக இந்த நாளில் நாக கற்களை வழிபடுதல், புற்றுக்கு பால் ஊற்றுதல் போன்ற சடங்குகளை செய்யலாம்.
நாக சதுர்த்தி 2025 நாள் நேரம்:
நாள்:
28/7/2025 அதிகாலை 12:44 மணி முதல் 29/7/2025 அதிகாலை 1:22 மணி வரை
நேரம் :
காலை 6:00 மணி முதல் 7:20 வரை
காலை 9:00 மணி முதல் 10:20 மணி வரை
மாலை 6:00 மணிக்கு மேல் வழிபடலாம்
நாக சதுர்த்தி எளிய வழிபாடு முறை:
எளிமையாக அரச மரப் பிள்ளையாரை 12 முறை மௌனமாக வலம் வந்து வணங்கினால் நாக தோஷம் நிவர்த்தி ஆகும்.
வாழ்வில் உள்ள அனைத்து தடைகளும் அகன்று நன்மை நடைபெறும்.
சர்பம் சார்ந்த கோவில் மற்றும் புற்று கோவிலுக்கு சென்று வழிபடுவது மிகவும் சிறந்த பலனைத் தரும்.
நெய்வேத்தியம் :
- பால், கருப்பு உளுந்து சுண்டல், கொள்ளு சுண்டல்
வீட்டில் நாக சதுர்த்தி வழிபடும் முறை:
- வீட்டில் நாகர் சிலை இருந்தால் அல்லது நாகர் உருவத்தை தன் மேல் வைத்திருக்கும் சாமி படம் சிலை அல்லது பிள்ளையார் படத்திற்கு பூஜை செய்யலாம்.
- பிள்ளையார் வயிற்றில் அரையாண்டு கயிறாக நாகர் இருப்பார்.
- புற்று கோவிலுக்கு சென்று மஞ்சள் குங்குமம் இட்டு பாலை மரத்திற்கு அடியில் ஊற்ற வேண்டும்.
- நெய்வேத்தியம் : பால், கருப்பு உளுந்து சுண்டல், கொள்ளு சுண்டல்.
- பாலை அரச மரத்திற்கு ஊற்றலாம், நாக சிலைக்கு ஊற்றலாம் அல்லது வீட்டில் உள்ள செடிக்கு (துளசி, வெற்றிலை) ஊற்றலாம்.
- ஏனெனில் நாகலோகம் பூமிக்கு கீழ் உள்ளதாக ஐதீகம்.
- மனதார வேண்டி பூமியில் பால் ஊற்றினால் நாகருக்கு போய் சேர்வதாக நம்பப்படுகிறது.
- அம்பிகை நாகர் வழிபாடு மிகவும் சிறப்பு வாய்ந்தது.
நாக சதுர்த்தி கருட பஞ்சமி வழிபாடு பயன்கள்:
- நாக தோஷம் உள்ளவர்கள்
- ராகு கேது திசை நடப்பவர்கள்
- கால சர்ப்ப தோஷம் உள்ளவர்கள்
- கடுமையான கண் திருஷ்டி நீங்க
- தொழிலில் முன்னேற்றம் அடைய
- குடும்ப உறுப்பினர்கள் ஒற்றுமை
- கணவன் மனைவி ஒற்றுமை வேண்டி
- சகோதர சகோதரிகள் மனக்கசப்பு தீர
- பயணத்தில் பாதுகாப்பு வேண்டி
- திருமணம் தடை குழந்தை தடை நீங்க
- வாழ்க்கையில் முன்னேற்றம் இல்லை
- அனைத்திலும் போராட்டம் என்பவர்கள்
நாக சதுர்த்தி கருட பஞ்சமி நாக பஞ்சமி வழிபாடு செய்ய வேண்டும்.
கருட பஞ்சமி நாக பஞ்சமி வழிபாடு:
காஷ்யபர்- வினதை தம்பதிகளுக்கு பிறந்த கருடன் நாகலோகத்தை வெற்றி பெற்று தேவலோக அமிர்த கலசத்தை கொண்டு வந்து தான் தாயின் அடிமை தனத்தை நீக்கினார்.
கௌரியை வழிபட வேண்டிய விரத நாள் நாக சதுர்த்தி கருட பஞ்சமி, அம்பிகையின் திருநாமம் தான் கௌரி,
அம்மனுக்கு குங்கும அர்ச்சனை செய்வது சிறப்பு .
வீட்டில் உள்ள எந்த அம்மன் படமாக இருந்தாலும் இறை நாமங்களை சொல்லி வழிபாடு செய்யலாம், கருடரும் பெருமாளும் உள்ள படம் இருந்தால் வழிபடலாம்.
பெருமாளை வழிபட்டால் கருடர் மனம் மகிழ்வார் ஆக கருடனை வழிபட்டு நம்முடைய வேண்டுதலை சொல்லும் போது பெருமாளிடம் அது விரைவாக சென்றடையும் என்பது நம்பிக்கை.
இந்நாளில் விரதம் இருந்து பூஜை செய்தால் கருடனைப் போல பலசாலியாகவும், அறிவு நிறைந்தும் பிள்ளைகள் பிறப்பார்கள் என்பது நம்பிக்கை. ஆதிசேஷனுக்கும் இந்நாளில் பூஜை செய்வது வழக்கமாகும்.
கருட பஞ்சமி 2025 நாள் நேரம்:
நாள் :
29/7/2025 அதிகாலை 1.23 மணி முதல் 30/7/2025 அதிகாலை 2:29 மணி வரை
நேரம் :
காலை 6:00 மணி முதல் 8:45 வரை
காலை 10:35 மணி முதல் 1:00 மணி வரை
மாலை 6 மணிக்கு மேல் வழிபடலாம்
நெய்வேத்தியம் :
- பால், பால் பாயசம், பால் கொழுக்கட்டை
கருட பஞ்சமி எளிய வழிபாடு முறை:
- ஒரு சிவப்பு கயிற்றில் 10 முடிச்சு போட்டு அம்பிகைக்கு வலது பக்கத்தில் வைத்து பூஜை செய்யவும்.
- பூஜை முடிந்து இந்த கயிற்றை வீட்டில் உள்ளவர்கள் கையில் கட்டிக் கொள்ள வேண்டும்.
- இந்த சிவப்பு கயிற்றை வீட்டில் திருஷ்டி உள்ளவர்கள், பயணம் செல்பவர்கள், விபத்தில் அடிக்கடி மாட்டுபவர்கள் கட்டிக் கொள்ளலாம்.
- யார் ஒருவர் விரதம் இருந்தாலும் குடும்பத்தில் உள்ள அனைவரும் பயன் கிடைக்கும்.