தமிழகத்தின் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் நவ கைலாயம் சர்ப்பரூப ஒன்பது நவகிரக சிவன் கோயில்கள் தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ளது.
நவகைலாய கோவில்கள்
1. பாபநாசம் – பாபநாசநாதர் கோவில் (சூரியன்)திருநெல்வேலியிலிருந்து 45 கி.மீ
2. சேரன்மகாதேவி – அம்மநாதர் கோவில் (சந்திரன்)பாபநாசத்திலிருந்து 15 கி.மீ
3. கோடகநல்லூர் – கைலாசநாதர் கோவில் (செவ்வாய்)சேரன்மகாதேவியிலிருந்து 12 கி.மீ
4. குன்னத்தூர் – கோத பரமேஸ்வரர் கோவில் (ராகு)கோடகநல்லூரிலிருந்து 8 கி.மீ
5. முறப்பநாடு – கைலாசநாதர் கோவில் (குரு)குன்னத்தூரிலிருந்து 12 கி.மீ
6. ஸ்ரீவைகுண்டம் – கைலாசநாதர் கோவில் (சனி)முறப்பநாட்டிலிருந்து 10 கி.மீ
7. தென்திருப்பேரை – கைலாசநாதர் கோவில் (புதன்)ஸ்ரீ வைகுண்டத்தில் இருந்து 6 கி.மீ
8. இராஜபதி – கைலாசநாதர் கோவில் (கேது)தென்திருப்பேரையிலிருந்து 5 கி.மீ
9. சேர்ந்தபூமங்கலம் – கைலாசநாதர் கோவில் (சுக்கிரன்)ராஜபதியிலிருந்து 10 கி.மீ
இந்த ஒன்பது சிவ ஸ்தலங்களை தரிசித்தால் செய்த பாவங்களிலிருந்து விடுபட்டு முக்தி அடையலாம்.
நவகைலாய கோவில்களை ஒரு கோட்டில் இணைத்தால் சர்ப ரூபத்தில் காட்சியளிக்கும்.
பாபநாசம் – ஸ்ரீ பாபநாசநாதர் உலகம்மை
- குழந்தைகளுக்கு கிரக தோஷம் இருந்தால் இங்கு இறைவனுக்கு தத்து கொடுத்து வாங்குவது சிறப்பு.
- உலகம்மைக்கு அபிஷேகம் செய்யப்படும் மஞ்சள் தீர்த்தத்தை குடிப்பதால் திருமணம் நடைபெறும் புத்திர பாக்கியம் கிடைக்கும் தீர்க்க சுமங்கலி யோகம் கிடைக்கும்.
- இந்திரனின் பாவத்தை நீக்கிய ஸ்தலம்.
சேரன்மகாதேவி – ஸ்ரீ அம்மைநாதர் ஆவுடையநாயகி
- அரிசி வியாபாரிகள் தங்கள் வியாபாரம் செழிக்க அரிசி தானம் அன்னதானம் செய்வர்.
- திருமண தோஷம் நீங்க மாதுளை பழச்சாறு அபிஷேகம் செய்யலாம்.
- அம்பாள் சன்னதி முன்பு தட்டில் அரிசி பரப்பி உடைத்த தேங்காயில் நெய் விட்டு தீபம் ஏற்ற செல்வம் பெருகும்.
கோடகநல்லூர் – ஸ்ரீ கைலாசநாதர் சிவகாமி அம்மன்
- செவ்வாய் தோஷத்தால் திருமணம் தடை உள்ள பெண்கள் 58 விரலி மஞ்சள் தாலி கயிற்றில் கட்டி நந்திக்கு அணிவித்து வழிபடுகின்றனர்.
- கொடிமரம் பலிபீடம் பரிவார மூர்த்தி இல்லாத வித்தியாசமான கோவில் இங்கு சுவாமியே பிரதானம்.
- நவ கைலாய ஸ்தலங்களில் இவரே பெரிய மூர்த்தி.
- துவரம் பருப்பு நெய்வேத்தியம் படைத்து சிவப்பு வஸ்திரம் அணிவித்து வழிபட்டால் செவ்வாய் தோஷம் நீங்கும்.
குன்னத்தூர் – கோத பரமேஸ்வரர் சிவகாமி அம்மன்
- காலசர்ப்ப தோஷம் நாக தோஷம் நீங்கும் சிவலிங்கத்திலேயே நாகர் இருப்பது இத்தலத்தின் சிறப்பு.
- புதிய வேலை வாய்ப்பு வேலை உயர்வு வேண்டும் என்பவர்கள் வழிபாடு செய்தால் பலன் கிடைக்கும்.
- குழந்தை இல்லாத தம்பதிகள் மூன்று முறை கோயிலை வலம் வந்து வேண்டினால் குழந்தை பாக்கியம் உண்டாகும் வேண்டுதல் நிறைவேறியவுடன் இங்கு வந்து பால் அபிஷேகம் செய்ய வேண்டும்.
முறப்பநாடு – கைலாசநாதர் சிவகாமி அம்மன்
- இங்கு நந்தி குதிரை முகத்துடன் இருக்கும் பைரவர் சன்னதியில் இரண்டு பைரவர்கள் உள்ளனர்.
- திருமணத்தடை குழந்தை பாக்கியம் கல்வியில் சிறக்க வழிபடலாம்.
- சிவன் குரு அம்சமாக இருப்பதால் மஞ்சள் வஸ்திரம் கொண்டைக்கடலை சாற்றி வழிபடுவது இங்கு வழக்கம்.
ஸ்ரீ வைகுண்டம் – கைலாசநாதர் சிவகாமி அம்மன்
- இது சனீஸ்வரர் தலமாகும், இங்குள்ள கொடிமரம் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் இருந்து கொண்டுவரப்பட்டது.
- இத்தலத்தில் உள்ள பூத நாதர் சிலை (காவல் தெய்வம்) மரத்தால் செய்யப்பட்டது.
- இங்கு 108 திருப்பதிகளில் ஒன்றான கள்ளபிரான் கோவில் உள்ளது.
- சனி தோஷம் நீங்க விசேஷ பூஜை பரிகாரம் செய்யலாம்.
- சொட்டு பிரச்சனை இழந்த சொத்தை மீட்கவும் பிரார்த்தனைகள் உண்டு.
- குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஐஸ்வர்யமும் பெருகும்.
தென்திருப்பேரை – கைலாசநாதர் அழகிய பொன்னம்மை
- கல்வியில் சிறக்க சுவாமிக்கு பச்சை வஸ்திரம் சாற்றி பச்சை பயிறு நெய் தீபம் ஏற்றி வழிபடலாம்.
- அம்பாள் சந்நிதியில் கொம்பு முளைத்து தேங்காய் ஒன்று உள்ளது சிறப்பு.
- பைரவர் ஆறு கைகளில் ஆயுதம் ஏந்தி காட்சி தருகிறார் நாய் வாகனம் இல்லை.
இராஜபதி – கைலாசநாதர் அழகிய பொன்னம்மை
- நவகிரகத்தில் எந்த தோஷம் உள்ளதோ அந்த கிரகத்திற்கு பக்தர்கள் தங்கள் கைகளால் அபிஷேகம் செய்து தோஷ நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
- மரண பயம் நீங்கும் நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும் குடும்ப சண்டை சச்சரவுகள் சரியாகும்.
- கால சர்ப்பதோஷம் திருமணத்தடை பிதுர் தோஷம் ஆகியவற்றிற்கு சிறந்த பரிகார ஸ்தலம்.
- இங்கு எதை விரும்பி சிவனிடம் கேட்கிறோமோ அதை முழு மனதுடன் ஆனந்தமாக வழங்குவார்.
சேர்ந்தபூமங்கலம் – கைலாசநாதர் அழகிய பொன்னம்மை
- செல்வம் பெருக இங்குள்ள குபேரரை வழிபடுவது சிறப்பு.
- இரண்டு தேவியருடன் யானை மீது அமர்ந்திருக்கும் குபேரனை இங்கு மட்டுமே தரிசிக்க முடியும்.
- நவகிரக மண்டபத்தில் உள்ள சுக்கிரனுக்கு வெள்ளை நிற வஸ்திரம் வெண்தாமரை சாற்றி, மொச்சை பொடி சாதம் மற்றும் தயிர்சாதம் நெய்வேத்தியம் படைத்து வழிபடுவர்.
- வெள்ளிக்கிழமை சுக்கிர ஓலையில் செய்வது சிறப்பு இதனால் சுக்கிரனின் அனுகூலம் கிடைக்கும்.