அம்பிகைக்கு 9 ராத்திரி நவராத்திரி (பிரதமையில் தொடங்கி தசமி வரை நவராத்திரி கொண்டாட்டம்).
நவம் என்றால் புதுமை, புதிய ஆற்றலை நம்மிடத்தில் உண்டாக்கும் தன்மை படைத்த ராத்திரி அதனால் இதற்கு நவராத்திரி என்பார்.
- முதல் மூன்று நாட்கள் : சக்தியின் ரூபமான பராசக்தி (பார்வதி தேவி) வழிபாடு.
- அடுத்த மூன்று நாட்கள் : செல்வத்திற்கு அதிபதியான லட்சுமி தேவி வழிபாடு.
- கடைசி மூன்று நாட்கள் : கல்வி, கலைக்கு அதிபதியான சரஸ்வதி தேவி வழிபாடு.
நவராத்திரி 2025 வழிபடும் நாள்:
- 22 செப்டம்பர் 2025 திங்கள்கிழமை தொடங்கி 9 நாட்கள் நவராத்திரி
- அக்டோபர் 1 புதன்கிழமை ஆயுத பூஜை சரஸ்வதி பூஜை
- அக்டோபர் 2 வியாழக்கிழமை விஜயதசமி கொண்டாட்டத்துடன் நிறைவடைகிறது.
நவராத்திரி திருவிழாவை நான்கு முறையில் வழிபடலாம் ( கொலு, கலசம், அணையா தீபம் மற்றும் அம்பிகை திருவுருவப்படம்).
இதில் எந்த முறையில் வழிபாடு செய்தாலும் அம்பிகையின் முழு அருளும் பெறலாம்.
கொலு வழிபாடு :
- செய்பவர்கள் கொலுவில் குறைந்தது 3 படிகள் முதல் 11 படிகள் வரை ஒற்றைப்படையில் அமைக்கலாம்.
- கிழக்கு அல்லது வடக்கு திசை பார்த்து படிகள் அமைக்க வேண்டும்.
- கொலுவில் மண் பொம்மைகள் வைப்பது தான் சிறப்பு மற்றும் ஒரே ஒரு மரப்பாச்சி பொம்மை கொலுவில் கண்டிப்பாக வைக்க வேண்டும்.
- காலை மாலை இருவேளையும் தீப தூப ஆராதனை செய்து வீட்டிற்கு வருபவர்களுக்கு எளிமையாகவாவது தாம்பூலம் கண்டிபாக கொடுக்க வேண்டும்.
- புதிதாக கொலு வைப்பவர்கள் தொடர்ந்து செய்ய முடிந்தால் மட்டுமே செய்ய வேண்டும் இல்லையெனில் மற்ற வழிபாடுகளை செய்யலாம்.
அணையா தீபம் வழிபாடு :
செய்பவர்கள் ஏற்றுபவர்கள் புது மண் அகல் விளக்கு வாங்கி மஞ்சள் குங்குமம் இட்டு முதல் நாள் காலை நல்ல நேரத்தில் அணையா தீபம் ஏற்றி வழிபாடு செய்யலாம்.
கலச வழிபாடு :
செய்பவர்கள் கலசத்தில் அரிசி அல்லது நீர் நிரப்பி வழிபாடு செய்யலாம்.
திருவுருவப்பட வழிபாடு :
செய்பவர்கள் வீட்டில் உள்ள ஏதேனும் ஒரு அம்மன் படத்தை சுத்தம் செய்து அலங்கரித்து வழிபாடு செய்யலாம்.
வழிபாடும் முறை:
- பொங்கல் புளியோதரை சுண்டல் பாயாசம் ஏதேனும் ஒரு நெய் வைத்தியம் தினமும் வைக்க வேண்டும்.
- காலை மாலை இருவேளையும் அம்பிகைக்கு தீப தூப ஆராதனை செய்ய வேண்டும்.
- அம்பிகைக்கு குங்கும அர்ச்சனை மற்றும் மலர்கள் அர்ச்சனை செய்வது மிகவும் சிறப்பு.
- அபிராமி அந்தாதி பதிகம் படிக்கலாம் மற்றும் கேட்கலாம்.
- ஓம் ஸ்ரீ லலிதா சப்த நாமாவளி நாமங்களை தினமும் காலை மாலை இரண்டு வேளையும் 11 முறை சொல்ல அம்பிகையின் முழு அருளும் கிடைக்கும்.
- மங்களப் பொருள்களை வீட்டிற்கு வருபவர்களுக்கும் அல்லது கோவிலுக்கு சென்றும் தானமாக கொடுக்கலாம்.
- வீட்டில் கொலு வைக்க முடியவில்லை என்றாலும் அருகில் கொலு வைத்திருக்கும் கோவிலுக்கு சென்று உங்கள் வேண்டுதலுக்கு ஏற்ப கொலு செட் வாங்கி தரலாம்.
- நம்மிடம் உள்ள சோம்பேறித்தனம் அடிமைத்தனம் காலதாமதம் சுத்தமின்மை போன்ற தவறான குணங்களை நீக்கி சம்காரம் செய்வது நவராத்திரி.