பிரதோஷம் என்ற சொல்லுக்கு “தோஷம் நீங்கும் நேரம்” என்று பொருள்.
சிவபெருமானுக்கு நடைபெறும் பிரதோஷ வழிபாட்டில் கலந்து கொண்டால் நாம் செய்த பாவங்கள் நீங்கி பல்வேறு பலன்களைப் பெறலாம்.
பிரதோஷ நாளில் செய்யப்படும் வழிபாடுகளால் கிரக தோஷங்களால் ஏற்படும் தீமைகள் நீங்கும், மன நிம்மதி மற்றும் மன வலிமை உண்டாகும்.
தொடர்ந்து எத்தனை முறை பிரதோஷ வழிபாட்டை பார்த்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.
தொடர் பிரதோஷ வழிபாடு மற்றும் பலன்கள் :
- 3 பிரதோஷம் : மும்மூர்த்திகளை தரிசித்ததற்கு சமம்
- 5 பிரதோஷம் : உடலில் உள்ள அனைத்து நோய்களும் நீங்கும்
- 7 பிரதோஷம் : திருமணம் விரைவில் நடைபெறும்
- 11 பிரதோஷம் : உடலும் மனமும் வலிமை பெறும்
- 13 பிரதோஷம் : நினைத்த காரியம் கைகூடும்.
- 21 பிரதோஷம் : புத்திர பாக்கியம் கிடைக்கும்
- 33 பிரதோஷம் : சிவன் கோயிலுக்கு கும்பாபிஷேகம் செய்த பலன் கிடைக்கும்
- 77 பிரதோஷம் : ஒரு ருத்ர யாகம் செய்த பலன் கிடைக்கும்
- 108 பிரதோஷம் : ஒரு தேவேந்திர பூஜை நடத்தியதற்கு சமம்
- 121 பிரதோஷம் : அடுத்த ஜென்மம் கிடையாது
- 1008 பிரதோஷம் : ஒரு அசுவமேத யாகம் நடத்தியதற்கு சமம்
பிரதோஷ கிழமைகளின் பலன்கள் :
இந்த கிழமைகளில் வரும் பிரதோஷங்களில் விரதம் இருந்து வழிபாடு செய்பவர்களுக்கு கிடைக்கும் பலன்கள்.
வீட்டில் பிரதோஷ வழிபாடு செய்யும் முறை
பிரதோஷம் என்பது ஒவ்வொரு மாதமும் வளர்பிறை, தேய்பிறை ஆகிய இரு பட்சங்களிலும் வரும் திரயோதசி திதி (13-ம் நாள்) மாலை 4:30 முதல் 6:00 மணி வரை உள்ள நேரம்.