திருப்பதி ஏழுமலையானை தரிசிக்கும் முறை

வாழ்வில் திருப்பங்களை தரக்கூடிய மலை திருப்பதி திருமலை தலவிருட்சம் புளியமரம்.

திருப்பதியில் சந்திரன் உச்சம் இங்கு மொட்டை அடிப்பதற்கான காரணம் சந்திரனின் முழு கதிர்வீச்சும் நேரடியாக தலையில் படுவதால் மனம் தெளிவு பெறும்.

தமிழ் மாதத்தில் வரும் முதல் திங்கள் கிழமை ஏகாதசி மற்றும் பௌர்ணமி நாட்களில் திருப்பதி வழிபாடு மிகவும் சிறப்பு.

திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்யும் முறை:

  • திருப்பதி புறப்படுவதற்கு முன் வீட்டில் குலதெய்வத்தை வேண்டி தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.
  • முதலில் கீழ் திருப்பதியில் வீற்றிருக்கும் கோவிந்தராஜ பெருமாளை வணங்க வேண்டும்.
  • பிறகு அலமேல் மங்காபுரம் சென்று பத்மாவதி தாயாரை தரிசிக்க வேண்டும்.
  • நடை பாதையில் பெருமாளின் நாமத்தை மனதார உச்சரித்து நடந்து செல்வது சிறப்பு.
  • தீர்த்தவாரி புஷ்கரணியில் நீராடவும் அல்லது கால்களை ஆவது நினைத்துக் கொள்ளவும்.
  • உலகில் உள்ள அத்தனை தீர்த்தங்களில் நீராடிய பலன் கிடைக்கும்.
  • ஓம் நமோ நாராயணாய நமக என்று மூன்று முறை முழுமையாக முங்கவும்.
  • பிறகு மலைக்கு சொந்தக்காரரான வராக மூர்த்தியை வழிபாடு செய்ய வேண்டும்.
  • ஆஞ்சநேயருக்கு சூறை தேங்காய் கற்பூரம் ஏற்றி வழிபட வேண்டும்.
  • ராஜகோபுரம் வாசலில் வலது பகுதி சுவரில் ஒரு பெரிய கம்பி போன்ற ஸ்ரீ அனந்தாழ்வார் கடப்பாறை தொங்கும் அதை தரிசனம் செய்ய வேண்டும்.
  • இது தீர்த்தவாரி தோண்டுவதற்கு பயன்படுத்தப்பட்டது மற்றும் பெருமாளின் திருமேனியை தீண்டிய கடப்பாறை.
  • பெருமாளுக்கு தாடையில் அடிபட்ட ரத்தத்தை நிறுத்துவதற்காகவே பச்சை கற்பூரம் வைக்கிறார்கள்.
  • கொடிமரம் பலி பீடங்களை வழிபட வேண்டும் அங்கே தான் அனைத்து பாவங்களும் பலியிடப்படும்.
  • ஆகையால் தெரிந்து தெரியாத செய்த பாவத்திற்கு மன்னிப்பு கேட்டு வேண்டிக் கொள்ள வேண்டும்.
  • துலாபாரம் தாண்டி வெள்ளி வாசல் வழியே உள்ளே செல்லும்போது மேலே நிமிர்ந்து பார்த்தால் சிறிதாக இருக்கும் ரங்கநாதரை தரிசிக்கவும்.
  • ரங்கநாதருக்கு எதிராக காஞ்சி வரதராஜ பெருமாள் இருப்பார் தரிசித்துக் கொள்ளவும்.
  • அடுத்து கருடாழ்வார் வழிபாடு மேலே தசாவதாரம் இருக்கும் அதையும் தரிசனம் செய்யவும்.
  • பெருமாளை கண்ணார தரிசனம் மட்டும் செய்து விட்டு வந்தாள் போதும் நாம் கேட்காமலேயே வேண்டியது கிடைக்கும்.
  • பெருமாளை தரிசிக்கும் போது முதலில் பாதம் மார்பு கடைசியாக முகத்தை பார்க்க வேண்டும்.
  • வெளியே வந்த பிறகு தீர்த்தம் வாங்கிக் கொண்டு சடாரியை தலையில் வைத்துக்கொள்ளவும்.
  • கோவிலுக்கு பின்புறம் தலையை வைத்து பெருமாளை மனதார நினைத்து இப்பொழுது உங்கள் வேண்டுதலை சொல்லுங்கள் அங்குதான் கொங்கன் சித்தர் உள்ளார்.
  • பங்காரு பாவி என்ற தங்க கிணறு கண்ணாடி போட்டு மூடி இருக்கும் அதை வழிபடவும் இங்கே தான் செல்வம் கொழிக்கிறது என்பர்.
  • பரமபத வாசலை கண்டிப்பாக விழுந்து வழிபடவும், அடுத்து தாயார் தரிசனம் செய்யவும்.
  • மட பள்ளியை பார்த்து தரிசனம் செய்தால் வரவும் உணவிற்கு பஞ்சம் வராது, அடுத்து நரசிம்மர் வழிபாடு செய்யவும்.
  • கோபுர விமானத்தில் வெள்ளியில் இருக்கும் ஸ்ரீநிவாச பெருமாளை கண்டிப்பாக தரிசிக்கவும் சிவப்பு அம்புக்குறி போட்டிருக்கும்.
  • விமான தரிசனம் அனைத்து வெற்றிகளையும் தரும் வேண்டியதை இங்கே கேளுங்கள்.
  • ஸ்ரீவாரி உண்டியலுக்கு பக்கத்தில் இருக்கும் தங்க நாணயங்கள் கொட்டக்கூடிய மகாலட்சுமியை வழிபட வேண்டும்.
  • ஸ்ரீ வாரி உண்டியலுக்கு கீழ் தான் குபேரச்சக்கரம் உள்ளது உண்டியலுக்கு கீழே தொட்டு வணங்கவும்.
  • கடைசியாக ரங்கநாதரிடம் திரும்பவும் பெருமாள் அழைக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டு வரவேண்டும்.
  • அடுத்து பிரசாதம் கொடுக்கும் இடம் கண்டிப்பாக பிரசாதம் சாப்பிடவும்.
  • அன்னதானம் சாப்பிட்டால் கண்டிப்பாக சாப்பிட வேண்டும் எதையும் வீணாக்கக்கூடாது.
  • கோசாலையில் உங்களால் முடிந்த உணவுகளை கொடுக்கவும்.
  • ஆகாச கங்கை தரிசனம் செய்தால் தங்கம் சேரும் கொங்கன் சித்தர் அருள் கிடைக்கும்.
  • 18 சித்தர்கள் ஜீவசமாதியும் உண்டு முடிந்தால் வழிபடவும்.

ஏழுமலையானை வழிபடுவதன் பலன்கள்:

  • ஜொலிக்கும் பெருமாள் படம் வீட்டு வரவேற்பறை வியாபார இடத்தில் வைப்பது முன்னேற்றம் தரும்.
  • புதன்கிழமை திருப்பதி பெருமாளை தரிசனம் செய்தால் வியாபார வெற்றி கடன் நிவர்த்தி சொத்து பிரச்சனை போட்டி பொறாமை சரியாகும்.
  • திங்கள் – சந்திரன் திங்கள்கிழமை ஏழுமலையான் தரிசனம் செய்வது மன சங்கடங்களை போக்கும்.
  • பெருமாள் அலங்கார பிரியர் சிவன் அபிஷேக பிரியர் பெருமாள் பாதம் மோட்சம் சிவன் பாதம் உலக இயக்கம்.
  • குழந்தை பாக்கியம் வேண்டுவோர் நடைபாதையில் சென்று துலாபாரம் தருகிறோம் என்று வேண்டிக் கொண்டு வந்தாள் குழந்தை பேரு நிச்சயம்.

திருப்பதி செல்லும் போது செய்யக்கூடாதது:

  • திருப்பதி சந்திரன் உச்சம், காளகஸ்தி ராகு உச்சம் ஆக திருப்பதி சென்று காளகஸ்தியோ, காளகஸ்தி சென்று திருப்பதியோ செல்லக்கூடாது.

திருப்பதி செல்லும் போது செய்ய வேண்டியது:

  • வீட்டிலிருந்து ஒரு கைப்பிடி கல் உப்பு பேப்பர் கவரில் போட்டு பாக்கெட்டில் வைத்துக் கொள்ளவும்.
  • உப்பு – சந்திரன், திருப்பதி தரிசனம் முடித்துவிட்டு வீடு வந்த பிறகு சமையலில் பயன்படுத்தும் உப்பில் அதை சேர்க்கவும் வாழ்க்கை வளமாகும்.
  • சந்திரன் மனோகாரகன் திருப்பதி சென்றால் மன நிம்மதி அமைதி கிடைக்கும்.
  • வராக பெருமாள் வழிபாடு அனைத்துப் பிரச்சனைகளையும் போக்கும்.
  • அன்னதானம் சாப்பிட்டால் கடன் அடையும், முடி காணிக்கை செய்வது சிறப்பு.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *