சிம்மம் ராகு கேது பெயர்ச்சி 2025 – 2027

ராகு – கேது பெயர்ச்சி என்பது 1 வருடம் 6 மாதம் எதிர்திசை பயணம்.

மற்ற கிரகங்கள் முன்னோக்கி நகரும், ராகு – கேது மட்டும் பின்னோக்கி நகரும்.

இதை சர்ப்ப கிரகங்கள், நிழல் கிரகங்கள் என்றும் சொல்வார்கள்.

பொதுவாக ராகு – கேதுவுக்கு ஸ்தான பலம் இல்லை.

ராகு கேது பெயர்ச்சி 2025 – 2027 :

கொடுப்பதை கெடுக்கும் கெடுப்பதைக் கொடுக்கும் ராகு கேது.

திருகணிதம் பெயர்சி : 18/05/2025
வாக்கியம் பெயர்சி : 26/04/2025

ராகு மீன ராசியில் இருந்து கும்ப ராசிக்கும் கேது கன்னி ராசியிலிருந்து சிம்ம ராசிக்கும் எதிர்ப்பயணமாக பெயர்ச்சி ஆகிறார்கள்.

நற்பலன் உள்ள ராசிகள்:
  • மேஷம், தனுசு, கன்னி, மீனம்
சுமாரான பலன் உள்ள ராசிகள்:
  • ரிஷபம், துலாம், மிதுனம், விருச்சிகம்
கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்:
  • மகரம், சிம்மம், கும்பம், கடகம்

ராகு கேது உணர்த்துவது :

சிம்ம ராசிக்கான பலன்கள் :

  • 7 ல் ராகு : துணைஸ்தானம், 1 ல் கேது : சுயஸ்தானம்.
  • 1 1/2 ஆண்டு கால எதிர் பயணம் ராகு கேது.
  • கம்பீரமாக மனதில் பட்டதை பேசுபவர் நீங்கள்.
  • மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்று நினைப்பவர்கள்.
  • நான் இப்படித்தான் என்று வாழ்பவர்.
  • எதிலும் அவசரம் வேண்டாம் வாழ்க்கையை புரட்டி போட்டு விடும்.
  • மன குழப்பம் வரும் மன அமைதி கெடும்.
  • நிதானமாக பிரச்சனை இல்லாமல் வாழ்க்கையை நகர்த்த முயற்சி செய்யுங்கள் நல்லது.
  • துணையின் உடல்நிலை கவனம்.
  • இரண்டாம் குழந்தையுடன் கருத்து வேறுபாடு வராமல் பார்த்துக் கொள்ளவும்.
  • பிள்ளைகளுக்கு பதவி உயர்வு, வருமானம், நல்ல வேலை கிடைக்கும்.
  • பிள்ளைகள் ஆரோக்கியத்தில் தொந்தரவு செய்யும் கவனம்.
  • அலைச்சல் அதிகம் தூக்கத்தை கெடுக்கும்.
  • அவமானம் வராமல் பார்த்துக் கொள்ளவும்.
  • அனைத்து கஷ்டங்களையும் குருவால் கடந்து செல்வீர்கள்.
  • திருமணம், ஆண் வாரிசு யோகம் உண்டு.
  • அரசியலில் இருப்பவர்கள் மிக கவனம்.
  • உடல் நிலையில் மிக மிக கவனம் தேவை.
  • பூர்வீக சொத்து பிரச்சனை இருந்தால் சரியாகும்.
  • மூத்த மகன் மாமனார் அப்பாவிடம் மனக்கசப்புக்கு வாய்ப்பு உண்டு.
  • தாய் உடல்நிலையில் பிரச்சினை வந்து சரியாகிவிடும்.
  • பண வரவு சிறப்பாக இருக்கும்.
  • சுய தொழில் சிறப்பாக இருக்கும்.
  • கூட்டு தொழிலில் பிரச்சனை வரும் கவனம்.
  • பிள்ளைகளுக்கு இடமாற்றம் வரும்.
  • குடும்பத்தில் சங்கடங்கள் விரிசலை ஏற்படுத்தும் கவனம்.
  • ரகசியமாக எதையும் செய்யுங்கள் வெற்றி உங்களுக்கே.
  • மனப்பிரச்சினை உண்டாக்கும்.
  • தனிமையை விரும்ப வைக்கும் ஆனால் நல்ல சிந்தனையை கொடுக்கும்.
  • துணையின் மூலம் வெற்றி கிட்டும்.
  • ஆன்மீக நாட்டம் அதிகமாகும்.
  • சிறுநீரகம் கண் முதுகெலும்பு வயிறு கவனம்.
  • பிரதோஷ வழிபாடு அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும்.

வழிபட வேண்டிய ஸ்தலங்கள் :

  • நரசிம்மர்
  • வாராஹி
  • விநாயகர்

12 ராசிக்கான ராகு கேது பெயர்ச்சி பலன்கள் :

எளிய வழிபாடு முறை :

ராகு கேது கிரகம் சாதகமாக இல்லையெனில், இது போன்ற பிரச்சனைகள் வந்து சேரும் என்பர்.

  • வம்பு வழக்கு வீண்பழி
  • குழந்தை, திருமணம் தடை
  • அவசொல், அவமானம்
  • வறுமை, கடன் தொல்லை
  • வேலை, தொழில் முடக்கம்

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *