சுக்லாம் பரதரம் மந்திரம், விஷ்ணு பகவானுக்குரிய தியான ஸ்லோகம் எந்த ஒரு சுபகாரியத்தை ஆரம்பிக்கும் போதும் தடைகள் நீங்க வேண்டி முழுமுதற் கடவுளான விநாயகரை நினைத்து சொல்லப்படுகிறது.
மந்திரம்:
சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம் !
ப்ரஸந்ந வதநம் த்யாயேத் ஸர்வ விக்நோப சாந்தயே !!”
பொருள்:
வெண்மையான ஆடையை அணிந்தவரும், எங்கும் நிறைந்தவரும், சந்திரனைப் போன்ற (பிரகாசமான) நிறத்தைக் கொண்டவரும், நான்கு கைகளைக் கொண்டவரும், மகிழ்ச்சியான முகத்தைக் கொண்டவருமான (விநாயகரை) நான் எல்லாத் தடைகளையும் நீக்குவதற்காகவும் சகல வினைகளும் விலகுவதற்காகவும் தியானிக்கிறேன்.
விளக்கம்:
- சுக்லாம் பரதரம் : வெண்மையான ஆடையை அணிந்தவரும்
- விஷ்ணும் : எங்கும் நிறைந்தவரும்
- சசிவர்ணம் : சந்திரனைப் போன்ற (பிரகாசமான) நிறத்தைக் கொண்டவரும்
- சதுர்புஜம் : நான்கு கைகளைக் கொண்டவரும்
- ப்ரஸந்ந வதநம் த்யாயேத் : மகிழ்ச்சியான முகத்தைக் கொண்டவருமான (விநாயகரை)
- ஸர்வ விக்நோப சாந்தயே : நான் எல்லாத் தடைகளையும் நீக்குவதற்காகவும் சகல வினைகளும் விலகுவதற்காகவும் தியானிக்கிறேன்
விநாயகரின் 16 முக்கிய மந்திரங்கள்
இந்த மந்திரங்களை நாம் தினமும் விநாயகரை நினைத்து மனதார உச்சரிப்பதால் 16 வகை செல்வங்களையும் பெறலாம் என்பது ஐதீகம்.