சக்கரத்தாழ்வாரை வழிபடும் முறை | சக்கரத்தாழ்வார் பின்னால் நரசிம்மர் இருப்பது ஏன் ?

பெருமாள் கோயில்களில் சக்கரத்தாழ்வாருக்கு எப்போதும் தனி சன்னிதி உண்டு.

சக்கரத்தாழ்வாரின் பின்புறத்தில் யோக நரசிம்மரும் காட்சி தருவார் அது ஏன் என்பதை பற்றி அறிவோம்.

யார் இந்த சக்கரத்தாழ்வார்?

  • பெருமாளின் கையில் இருக்கக்கூடிய சக்கரம் தான் சக்கரத்தாழ்வார்.
  • பக்தர்களின் துன்பத்தை விரைவாக தீர்க்க திருமாலால் ஏவப்படும் ஆயுதம் ஸ்ரீ சக்கரம்.
  • சக்கரத்தை வழிபட்டால் துன்பங்கள் உடனடியாக நீங்கும் என்பது ஐதீகம்.
  • நமக்கு ஒரு கஷ்டம் என்று சக்கரத்தாழ்வார் இடம் சொன்னால் அவர் வேகமாக சுழன்று பின்னால் இருக்கும் நரசிம்மர் நம் முன்னே வந்து உடனடியாக குறைகளை தீர்ப்பார்.
  • பக்தனான பிரகலாதனை காக்க திருமால். நரசிம்மராக தூணில் இருந்து அவதாரம் எடுத்தார்
  • தாயின் கருவில் இருந்து தோன்றாததால் நரசிம்ம அவதாரத்தை “அவசர திருக்கோலம்” என்பர்.
  • நரசிம்மரிடத்தில் நாளை என்பது கிடையாது கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து காக்கக்கூடிய தெய்வம்.
  • துன்பத்திலிருந்து விரைவாக விடுபட சக்கரத்தையும் நரசிம்மரையும் ஒன்றாக வழிபட வேண்டும்.

சக்கரத்தாழ்வார் ஜெயந்தி:

  • ஆண்டுதோறும் ஆனி மாதம் தசமி திதியில், சித்திரை நட்சத்திரத்தில் ஸ்ரீ சக்கரத்தாழ்வார் ஜெயந்தி வழிபடப்பட்டு வருகிறது.
  • 16 திருக்கரங்களைக் கொண்டவர் சக்கரத்தாழ்வார்.
  • பக்தர்களுக்கு ஏற்படும் துன்பங்களை நீக்க பெருமாளின் சக்கரம் காக்கும்.
  • கடன் வியாதி எதிரிகளை அழித்து மன அமைதியை தருபவர்.

வழிபடும் முறை:

  • ஒரு நெய் தீபம் ஏற்றி சிவப்பு நிறம் மலர்கள் அல்லது துளசி சாற்றவும்.
  • 6, 12, 18 என்ற எண்ணிக்கையில் சுற்றி வரலாம்.
  • வழிபட உகந்த நாள் சனிக்கிழமை மற்றும் புதன் கிழமை.
  • நெய்வேத்தியம் : புளி சாதம், தயிர் சாதம் மற்றும் நரசிம்மருக்கு பானகம்.
  • மந்திரம் : “ஓம் நமோ பகவதே மகா சுதர்சனாய நம” என்ற மந்திரத்தை 11 அல்லது 108 முறை உச்சரிக்கவும்.
  • வீட்டில் உள்ள பெருமாள் படம் முன்பு சக்கரத்தை கோலமாக வரைந்தும் வழிபடலாம்.

வழிபாட்டின் பலன்கள்:

  • நாட்பட்ட கடன் நீங்கும்.
  • கல்வி தடைகளை நீக்கும்.
  • பயத்தை போக்க கூடியவர்.
  • தீராத வியாதிகள் சரியாகும்.
  • நீண்ட நாள் வழக்குகள் முடிவுக்கு வரும்
  • எதிரிகளை வெல்லக்கூடிய மன தைரியம் உண்டாகும்.
  • சக்கரத்தாழ்வாரை சுற்றினால் நவகிரகங்களால் ஏற்படக்கூடிய தொல்லைகள் நீங்கும்.
  • புத்தி கூர்மை, தெளிந்த அறிவு மற்றும் 16 வகையான செல்வங்களையும் அருள்பவர்.

சக்கரத்தாழ்வார் காயத்ரி மந்திரம்:

“ஓம் சுதர்ஸனாய வித்மஹே

ஜ்வாலா சக்ராய தீமஹி

தன்னோ: சக்ர ப்ரசோதயாத்”

சக்கரத்தாழ்வாரை நம்பி வழிபட்டால் சங்கடங்கள் நீங்கி வாழ்வில் சகல நன்மைகளும் உண்டாகும்.

அதேபோல நாளை என்பது நரசிம்மரிடத்தில் இல்லை கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வந்து காக்க கூடிய தெய்வம்.

எனவே, இவர்கள் இருவரையும் ஒருசேர வணங்கினால் வேண்டியது விரைவில் நிறைவேறும்.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *