கோவிலுக்கு சென்று நாம் சுவாமி தரிசனம் செய்த பிறகு ஒரு முறையாவது ஆலயத்தை வலம் வந்து வழிபடுவது வழக்கம் இதை பிரதட்சனம் என்பர்.
கருவறையில் உள்ள கடவுளை வணங்கிய பின் கோயில் பிராகாரத்தை ஒற்றைப்படை எண்ணிக்கையில் வலம் வருவது வழக்கம்.
இறைவனை வலம் வரும்போது இடப்பக்கமாக (left hand side) சென்று வலம் வர வேண்டும்.
கோயில் பிராகாரத்தை சுற்றுவதின் பலன்கள் :
- 1 – இறைவனை அணுகுதல்
- 3 – மனச்சுமை குறையும்
- 5 – திருப்பங்கள் வரும்
- 7 – காரியம் வெற்றியாகும்
- 9 – எதிரிகள் விலகி செல்வர்
- 11 – ஆயுள் விருத்தி உண்டாகும்
- 13 – வேண்டுதல் நிறைவேறும்
- 15 – செல்வம் வளம் பெருகும்
- 17 – தானியம் வளம் பெருகும்
- 19 – நோய்கள் நீங்கும்
- 21 – கல்வி வளர்ச்சி சிறக்கும்
- 23 – சுக வாழ்வு உண்டாகும்
- 27 – குழந்தை பேரு கிடைக்கும்
- 108 – சகல நன்மைகளும் பெற
- 208 – யாகம் செய்த பலன் கிட்டும்
கோவில் பிரகாரத்தை சுற்றி வரும்போது அந்தந்த தெய்வத்தை மனதில் நினைத்து கொண்டு சுற்றுவது நாமங்களை சொல்வது மிகவும் சிறந்தது.
வழிபாட்டிற்காக நாம் கோவிலை வலம் வரும் போது பாவங்கள் நீங்கி புண்ணியங்கள் சேர்வதாக ஐதீகம்.
கோவில் பிரகாரத்தை சுற்றி வரும் போது கடைபிடிக்க வேண்டியவை :
- சத்தமாக பேசக்கூடாது
- வேகமாக நடக்கக்கூடாது
- அவசர அவசரமாக சுத்தி வரக்கூடாது
- இறை நாமங்களை சொல்லி வலம் வருவது சிறப்பு
- கடமைக்காக சுற்றிவர கூடாது
- நிதானமாக வலம் வர வேண்டும்
- வேண்டுதல்களை மனதில் சொல்லிக் கொண்டும் வலம் வரலாம்
- கோவில் பிரகாரத்தை சுற்றி வரும் போது செய்யக்கூடாதது
பொதுவாக கோயிலை வலம் வரும் முறை :
- பெரிய கோவில்கள் 1 முறை
- சிறிய கோவில்கள் 3 முறை
வேண்டுதலுக்காக கோயிலை வலம் வரும் முறை :
- சிறிய கோவிலாக இருந்தால் 11 முறை
- பெரிய கோவிலாக இருந்தால் 5 முறை
எந்த கடவுளை எத்தனை முறை வலம் வர வேண்டும் ?
- விநாயகர் 1 முறை
- துர்க்கை 1 முறை
- சிவன் 3 முறை
- தட்சிணாமூர்த்தி 3 முறை
- பெருமாள் மகாலட்சுமி 4 முறை (2, 4, 12)
- சித்தர்கள் ஜீவசமாதி 4 முறை
- அம்மன் 5 முறைமுருகன் 6 முறை
- அரச மர விநாயகர் 7 முறை
- நவகிரகங்கள் 9 முறை (1 முறை)
- ஆஞ்சநேயர் 11 முறை (3 முறை)
- காலபைரவர் 11 முறை
- சக்கரத்தாழ்வார் 6 முறை (12 முறை)
பொதுவான எண்ணிக்கையில் 1,3,5,6,9,11 வலம் வருவது விசேஷமானது.
சங்கடஹர சதுர்த்தி போன்ற விசேஷ நாள் அன்று விநாயகரை 8 முறை வலம் வருவது சிறப்பு.
வேண்டுதலுக்காக பெருமாள் கோயில்கள் மற்றும் அவதார தலங்களை 12 முறை வலம் வருவது மிகவும் சிறப்பு.
அரச மர விநாயகரை சனிக்கிழமைகளில் சுற்றுவது மிகவும் சிறப்பு மற்ற நாட்களில் அரச மரத்தை தொட்டு வணங்கக்கூடாது.
சிவராத்திரி அன்று உட்பிரகாரத்தை 108 முறை வலம் வந்தால் வேண்டியது கிடைக்கும்.