ராகு – கேது பெயர்ச்சி என்பது 1 வருடம் 6 மாதம் எதிர்திசை பயணம்.
மற்ற கிரகங்கள் முன்னோக்கி நகரும், ராகு – கேது மட்டும் பின்னோக்கி நகரும்.
இதை சர்ப்ப கிரகங்கள், நிழல் கிரகங்கள் என்றும் சொல்வார்கள்.
பொதுவாக ராகு – கேதுவுக்கு ஸ்தான பலம் இல்லை.
ராகு கேது பெயர்ச்சி 2025 – 2027 :
கொடுப்பதை கெடுக்கும் கெடுப்பதைக் கொடுக்கும் ராகு கேது.
திருகணிதம் பெயர்சி : 18/05/2025
வாக்கியம் பெயர்சி : 26/04/2025
ராகு மீன ராசியில் இருந்து கும்ப ராசிக்கும் கேது கன்னி ராசியிலிருந்து சிம்ம ராசிக்கும் எதிர்ப்பயணமாக பெயர்ச்சி ஆகிறார்கள்.
நற்பலன் உள்ள ராசிகள்:
- மேஷம், தனுசு, கன்னி, மீனம்
சுமாரான பலன் உள்ள ராசிகள்:
- ரிஷபம், துலாம், மிதுனம், விருச்சிகம்
கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்:
- மகரம், சிம்மம், கும்பம், கடகம்
ராகு கேது உணர்த்துவது :
கும்ப ராசிக்கான பலன்கள் :
- 1 ல் ராகு : சுயஸ்தானம், 7 ல் கேது : துணைஸ்தானம்.
- 1 1/2 ஆண்டு கால எதிர் பயணம் ராகு கேது.
- எதிலும் அளவாக இருந்தால் வாழ்க்கை சிறப்பு.
- குரு பெயர்ச்சி உங்களுக்கு யோகம்.
- இதுவரை பட்ட அவமானம் போராட்டம் பணக்கஷ்டம் தீரும்.
- ராகு குழப்பம் அடைய வைக்கும்.
- பேராசையை தூண்டும் கவனம்.
- அதிகமாக சிந்திக்க வைக்கும்.
- திருமணம் கைகூடும் காலம்.
- இரண்டாம் குழந்தை பாக்கியம் உண்டு.
- வெளியூர் வெளிநாடு படிப்பு யோகம் உண்டு.
- தந்தை உடல்நிலை பிரச்சனை சரியாகும்.
- தாய் வழி சொத்துக்கள் வரும்.
- பதவி உயர்வு சிக்களுக்கு பின் கிடைக்கும்.
- குடும்பத்தில் சண்டை சச்சரவுக்கு வாய்ப்பு உண்டு கவனம்.
- வீண் அழைச்சல் பயணம் அதிகரிக்கும்.
- பெரிய தொழில் முதலீடு செய்ய வேண்டாம் கவனம்.
- கூட்டு தொழிலில் பிரிவினை வரலாம் கவனமாக செயல்படவும்.
- வீடு கட்டலாம் சிறப்பாக இருக்கும்.
- முன்னோர்கள் வழிபாடு மேன்மை தரும்.
- மன நிம்மதி கெடும், நிதானம் வேண்டும்.
- எதிலும் ஆர்வம் அதிகமாக இருக்கும்.
- பெரிய எண்ணம் ஆசை வரும், நிறைய மாற்றங்கள் வரும்.
- வேலையில் பொறுப்பு அதிகமாகும், பணவரவு உண்டு.
- துணையின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
- வயிறு பகுதி கவனம், ஆரோக்கியம் கவனம்.
- புது நபர்களிடம் கவனமாக பழகவும்.
- பேச்சில் மிக மிக கவனம் தேவை, கோபம் அதிகமாக வரும்.
வழிபட வேண்டிய ஸ்தலங்கள் :
- ஜீவசமாதி
- திருநாகேஸ்வரம்
- துர்க்கை
- விநாயகர்
12 ராசிக்கான ராகு கேது பெயர்ச்சி பலன்கள் :
எளிய வழிபாடு முறை :
ராகு கேது கிரகம் சாதகமாக இல்லையெனில், இது போன்ற பிரச்சனைகள் வந்து சேரும் என்பர்.
- வம்பு வழக்கு வீண்பழி
- குழந்தை, திருமணம் தடை
- அவசொல், அவமானம்
- வறுமை, கடன் தொல்லை
- வேலை, தொழில் முடக்கம்